Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

TVS Jupter ZX

TVS Jupter ZX

டிவிஎஸ் நிறுவனம் இரண்டு வகையான ஜூபிடர் இசட்எக்ஸ் ஸ்கூட்டர்கள் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக்களை கொண்டாதாக இருக்கும். டிரம்-பிரேக் மாடல்களின் விலை 56 ஆயிரத்து 93 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்புற டிஸ்க் பிரேக்களுடன் கூடிய வெர்சன்கள் 58 ஆயிரத்து 645 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

இரண்டு ஸ்கூட்டர்களும் டிவிஎஸ் வெர்சன்களின் ஒருங்கிணைந்த பிரேக்களுடன், SBT என்று அழைக்கப்படும் பிரேக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இசட்எக்ஸ் வகைகள் தற்போது அதிக வசதிகளுடன், எல்இடி ஹெட்லைட் மற்றும் டிகி-அனலாக் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

மற்ற மாற்றங்களாக இசட்எக்ஸ் ஸ்கூட்டர்களில், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட், டிகி-அனலாக் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர் மற்றும் புதியதாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தக்க மோனோஷாக்மும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் இதற்கு முன்பு வெளிவந்த ஜூபிடர் மாடல்களில் இருந்த போதும், டாப் ஸ்பெக் கிராண்டே வெர்சனில் மட்டும் இவை தற்போது இடம் பெறவில்லை.

இருந்த போதும், கிராண்டேகளில் தனித்துவமிக்க அலாய் வீல்கள், சீட் கவர் பார்டன் மற்றும் குரோம் டிரிம் பிஸ்களுடன் கூடிய உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளது.

2019 ஜூபிடர் இசட்எக்ஸ் ஸ்கூட்டர்கள் மட்டும் இரண்டு கலர் ஸ்கீமில் கிடைக்கிறது. அதாவது, ஸ்டார்லைட் ப்ளு மற்றும் ராயல் ஒயின் கலர்களில் கிடைகிறது. அனைத்தும் ஏற்கனவே உள்ள மாடல்களில் உள்ளதை போன்றே இசட்எக்ஸ் வகைகளிலும் இருக்கிறது. இவை 109.7cc, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 8hp மற்றும் 8.4Nm பீக் டார்க்கில் இயங்கும்.

புதிய வெர்சன்களுடன் டிவிஎஸ் நிறுவனம், நேரடியாக 110cc ஆக்டிவா 5G பைக்களுக்கு போட்டியாக இருப்பதுடன், எல்இடி ஹெட்லைட் மற்றும் டிகி-அனலாக் கேஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆக்டிவா 5G ஸ்கூட்டர்களின் விலை சற்று குறைவாக விலையில் 54 ஆயிரத்து 632 (டிரம் பிரேக்குடனும்) மற்றும் 56 ஆயிரத்து 497 ரூபாய் விலையில் (டிஸ்க் பிரேக்குடனும்) கிடைக்கிறது.

  • Meril Jeffery John.J
    By Meril Jeffery John.J

    Posting links directly in blog is against policy of CG .. Last warning

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)