Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான காலக்கெடு சாத்தியமற்றது – ராஜீவ் பஜாஜ் கருத்து!

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான காலக்கெடு சாத்தியமற்றது – ராஜீவ் பஜாஜ் கருத்து!

வரும் 2023-க்குள் 100 சதவிகிதம் மூன்று சக்கர வாகனங்களையும் மாற்றுவது, மற்றும் 2025ம் ஆண்டுக்குள் 150cc-க்கு குறைவான திறன் கொண்ட அனைத்து டூவிலர்களையும் தடை செய்வது என்று அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ லிமிடெட், மேனேஜிங் டைரக்டர் ராஜீவ் பஜாஜ், தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு, அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தொழிற்துறை குழுவினரான SIAM (இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சமூகம்) மற்றும் CII இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை, அரசின் திட்டங்களான டூவிலர்களுக்கு தடை விதிப்பது மற்றும் மூன்று சக்கர வாகனங்களை இன்டர்னல் கம்போஷன் இன்ஜின்களுடன் வெளியிட முடிவு செய்துள்ளதற்கான காலகெடுவை அறிவிப்பதற்கு முன்பு அந்த முடிவை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளன.

தற்போது பஜாஜ் ஆட்டோ தலைவரும் அரசின் வரையறுத்துள்ள மசோதா குறித்து தனது கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2023ம் ஆண்டுகளுள் 100 விழுக்காடு எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வது மற்றும் 2025-ம் ஆண்டுக்குள் டூவிலர்களை விற்பனை செய்யும் இந்திய அரசின் முயற்சியை நான் முழுமையாக ஏற்று கொள்கிறேன். இந்த பரிந்துரை இந்திய அரசின் பரந்த நோக்கத்தை வெளிக்காட்டுகிறது. இருந்த போதும் எனக்கு மூன்று சக்கர வாகனங்களை வெளியிடும் முடிவில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், முதலில் இது நடைமுறைக்கு ஏற்காத இலக்கை கொண்டிருக்கிறது. அதாவது ஸ்டாக்ஹோல்டர்கள் தற்போது இதுகுறித்த எந்த அனுபவமும் பெற்றிருக்கவில்லை. இத்துடன் எலக்ட்ரிக் வாகனங்கள் ஒரு குழப்பமான நிலையிலேயே உள்ளது. இரண்டாவதாக, இந்த வாகனங்களுக்கான இலக்குகள், BS6 அமல்படுத்தப்பட உள்ள நேரத்திற்கு மிகவும் நெருக்கமான நிலையில் உள்ளது. இறுதியாக இந்த பரிந்துரை இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது கார்கள் மற்றும் மற்ற வாகனங்களுக்கு அல்ல. இது ஒரு முழுமையடையாத முயற்சியாகவே இருக்கிறது என்றார்.

இந்த பரிந்துரையை பாராட்டினாலும், எனது மனதில், முதல் கட்ட இலக்கை மாற்றி, அதாவது கார்ப்பரேட் அவரேஜ் எரிபொருள் சிக்கன (CAFE) விதிகள் எய்ற்ப மாற்ற வேண்டும். அதாவது எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்திற்கும் ஒரேமாதிரியான காலக்கெடுவை அதாவது 2023 அல்லது 2025ம் ஆண்டுக்குள் அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நகரங்களில் அமல்படுத்த வேண்டும், மேலும் அடிப்படையான படிப்பினை மற்றும் இந்த திட்டத்திற்கு தேவைப்படும் அனுபவத்தை சேகரிக்க தேவையான கால அளவை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருவேளை அரசு அனைத்து டூவிலர்களையும் இன்டர்னல் கம்போஷன் இன்ஜின் 150cc மற்றும் குறைவானவற்றை 2025-க்குள் தடை செய்வது, மற்றும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களையும் எலக்ட்ரிக் வாகனங்களாக வரும் 2023-க்கும் மாற்ற வேண்டும் என்று பரிந்துரையை செய்தால் அதில் எந்த முன்னணி தயாரிப்பளார் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ள சிங்கிள் எலக்ட்ரிக் டூவிலர்களை தயாரிக்க முடியாது.

தற்போது ஆட்டோமொபைல் துறையினர் வரும் 2020ம் ஆண்டு அமலுக்கு வர உள்ள BS-VI எமிஷன் விதிகளுக்கு உட்பட்டு தங்கள் வாகனங்களை மாற்றியமைக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையினர், மற்றும் அப்பெக்ஸ் குழுவினர், மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை டூவிலர்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆகிய எலட்ரிக் வாகனங்களாக மாற்றுவது குறித்த அறிவிப்பு, தங்களை பாதிக்கும் என்றும் கூடுதலாக, இந்த திட்டம் மற்றும் அதை அமல்படுத்துவது, அதே நேரத்தில் முழுமையான சுற்றுச்சுழலை பாதிக்காமல் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவது ஆகியவற்றுக்கு திறன் கொண்ட சப்ளை செயின் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் தற்போது புதிய வாகனங்களை வெர்டிக்கல் முறையில் தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இவற்றை இந்த நிறுவனம் அர்பனேட் என்றும் அழைக்கிறது. இவை அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் மொபைலிட்களுக்கான தீர்வாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலட்ரிக் டூவிலர்கள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதுடன் இந்தாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மற்ற முன்னணி டூவிளர் தயாரிப்பாளர்களும் இதேபோன்று, தங்கள் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இதுவரை எந்த ஒரு வாகனமும் தயாரிக்கப்படவில்லை. இருந்தாலும் ஆட்டோமொபைல் துறையினர் BS-VI எமிஷன் விதிகளுக்கு உட்ப்பட்டு வாகனங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/electric-vehicle-switch-over-plans-impractical-says-rajiv-bajaj/

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)