Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

BS6 சான்றிதழ் பெறும் முதல் டூவிலர் பைக்கள் என்ற பெருமையை பெற்றது ஹீரோ ஸ்பெளண்டர் ஐஸ்மார்ட்!

BS6 சான்றிதழ் பெறும் முதல் டூவிலர் பைக்கள் என்ற பெருமையை பெற்றது ஹீரோ ஸ்பெளண்டர் ஐஸ்மார்ட்!

வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் BS6 விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இதை மனதில் கொண்டு டூவிலர் மற்றும் போர் வீலர் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் தயாரிப்புகளை BS6 விதிகளுக்கு ஏற்ப தயாரிக்க தொடங்கி விட்டன.

டூவிலர் தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அதன் ஹீரோ ஸ்பெளண்டர் ஐஸ்மார்ட் பைக்களுக்கு BS6 சான்றிதழ் பெறும் முதல் டூவிலர் தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றது. இந்த சான்றிதழை ஆட்டோமேடிவ் டெக்னாலஜிகளுக்கான சர்வதேச மையத்திடம் இருந்து பெற்றுள்ளது. இதற்கான சோதனையில் ஸ்பெளண்டர் ஐஸ்மார்ட் பைக்கள் வெற்றிகரமாக தேர்வு பெற்றதை தொடர்ந்து இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கள் முழுமையாக BS VI விதிகளுக்கு ஏற்ற வகையில் ஜெய்ப்பூரில் உள்ள ஹீரோ நிறுவனத்தின் மேம்பாடு மற்றும் டெக்னாலஜி மையத்தில் டிசைன் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ICAT இயக்குனர் தினேஷ் தாகி கூறுகையில், இந்தியாவில் முதல் முறையாக தங்கள் டூவிலருக்கு BS-VI சான்றிதழ் பெற்றுள்ள ஹீரோ நிறுவனத்திற்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த வகையான சான்றிதழ் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பெளண்டர் ஐஸ்மார்ட் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் உள்நாட்டிலேயேதயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ICAT நிறுவன இந்தியாவில் முதல் முறையாக BS-VI விதிகளுக்கான சான்றிதழ்களை கனரக வர்த்தக வாகனங்களுக்கு மட்டும் வழங்க தொடங்கியது. இந்த BS-VI விதிகள் ஏற்கனவே உள்ள எமிஷன் விதிகளில் இருந்து சிறியளவில் மாற்றம் செய்யபட்டு, நுகர்வோருக்கும் சுத்தமான தயாரிப்பை கொடுக்கும் வகையில் உருவாக்கி அமல் படுத்தப்பட உள்ளது என்றார்.

அடுத்த ஓராண்டுக்குள், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மாடல்களையும் BS6 டெக்னாலஜியுடன் அதிக ஆற்றல் கொண்டதாக மாற்ற தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் BS6 சான்றிதழ் பெற்றுள்ளதால், இதே போர்டோ டைப்பில் அரசு துறைகள் நடத்தும் ICAT, ARAI மற்றும் GARC சோதனைகளிலும் பங்கேற்று சான்றிதழ் பெறும்.

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/hero-splendor-ismart-becomes-first-two-wheeler-to-get-bs6-certification/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)