Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

மெர்சிடிஸ்-பென்ஸ் GLB கார்கள் உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராகியுள்ளது!

மெர்சிடிஸ்-பென்ஸ் GLB கார்கள் உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராகியுள்ளது!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஜிஎல்பி கார்களுக்கான டீசரை நேற்று சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளது. ஜிஎல்பி கார்களின் பெயர்கள் பி-கிளாஸ் கார்களை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் இவை MFA2 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை ஜிஎல்எ மற்றும் ஜிஎல்சி மாடல்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும். இந்த காரின் ஸ்பை புகைப்படங்கள் சில தகவல்களை வெளியிட்ட போதும் இந்த காருக்கான டீசர் இந்த மாடலின் தகவல்கள் உறுதி செய்துள்ளது. இந்த காரின் சைஸ்-ஐ வைத்து பார்க்கும் போது, அவை ஏழு சீட் கொண்ட மாடலாக இருக்கும் என்றும், இவை பேபி ஜி கிளாஸ் போன்று இருக்கும் என்று வதந்தியும் வெளியாகியுள்ளது. நீண்ட, குறுகிய ஓவர்ஹங்ஸ் மற்றும் பாக்ஸி ரியர் என்ட் உள்ளிட்ட அனைத்து புள்ளிகளும் ஜிஎல்பி காரை பெரிய எஸ்யூவியாக மாற்றியுள்ளது.

எதிர்வரும் மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்பி கார்கள் பி-கிளாஸ் கார்களை போன்று இருப்பதுடன், அதிக இடவசதி கொண்ட ஐந்து சீட் கேபின்களுடன் பெரியளவில் புட் ஸ்பேஸ் கொண்டதாக இருக்கிறது. இது 500 லிட்டராக இருக்கும். மேலும் இந்த நிறுவனம் ஆப்சனலாக மூன்றாவது வரிசை சீட்களை குறிப்பிட்ட மார்க்கெட்களுக்கு கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது. டிசைனை பொறுத்தவரை ஸ்டைல் மற்றும் கேபின்களுடன் ஜிஎல்பி கார்கள் புதிய தலைமுறை ஏ-கிளாஸ் கேபின் கொண்டதாக இருக்கும். இவை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

இன்ஜின் ஆப்சன்கள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இவை மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்பி கார்கள் புதிய எ-கிளாஸ் போன்ற இருக்கும். மேலும் இதில் கூடுதலாக புதிய இன்ஜின்களுடன் இருக்கும். இந்த இன்ஜின்கள் ரெனால்ட் நிசான் அலைஸ் கொண்டதாக இருக்கும். ஜிஎல்பி-களில் கூடுதலாக புதிய எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் நான்கு வீல் இன்ஜின் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இவை எப்போது இந்த எஸ்யூவி-க்ககள் மார்க்கெட்டுக்கு வரும் என்று உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/2020-mercedes-benz-glb-class-suv-debut/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)