Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

BS6 விதிகளுக்கு உட்பட்ட ஹோண்டா ஆக்டா 125 வெளியானது; இந்தாண்டின் பிற்பகுதியில் அறிமுகாகும் என அறிவிப்பு!

BS6 விதிகளுக்கு உட்பட்ட ஹோண்டா ஆக்டா 125 வெளியானது; இந்தாண்டின் பிற்பகுதியில் அறிமுகாகும் என அறிவிப்பு!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது முதல் பாரத் ஸ்டேஜ் (BS6) விதிகளுக்குட்பட்ட டூவிலர்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இவை ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டாரகும்.

புதிய பாரத் ஸ்டேஜ் VI (BS6) விதிகளுக்கு உட்பட்டு ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இந்தாண்டின் இறுதியில் வெளியாக உள்ளது. இவை 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியாக உள்ளது. இவை செப்டம்பர் 2019 மாதத்தில் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. புதிய BS6 விதிகள் வரும் 2020ம் ஆண்டின் ஏப்ரல் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. இந்த விதிகள் அமல்படுத்தப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பெளண்டர் டூவிலர்களை இந்தியாவில் BS6 சான்றிதழுடன் அறிமுகம் செய்துள்ளது.

புதிய BS6 விதிக்குட்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 -கள் எரிபொருள் இன்ஜெக்ஷன்களுடன் வெளி வர உள்ளது. இதுபோன்று இந்தியாவில் வெளி வரும் இரண்டாவது 125cc ஸ்கூட்டர் இதுவாகும். இதற்கு முன்பு ஹீரோ மஸ்ட்ரோ எட்ஜ் 125 Fi பைக்கள் எரிபொருள் இன்ஜெக்சன்களுடன் வெளி வந்தது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் BS6 விதிகளுக்கு உட்பட்டு வெளியாகும் என்ற போதும் இந்த ஸ்கூட்டரின் குறித்த இன்ஜின் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருந்தபோதும், இவை 125 cc சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்களுடன் ஹோண்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட PGM-FI எரிபொருள் இன்ஜெக்சன் டெக்னாலஜிகளுடன் எமிஷன் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

தற்போது BS4 ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் 8.4 bhp ஆற்றலில் 6,500rpm-லும் 10.45 Nm பீக் டார்க்கில் 5,000rpm-லும் இயங்கும். புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர்களின் எரிபொருள் செலவிடும் திறன் 10 விழுக்காடு அதிகமாக இருக்கும்.

BS6 விதிக்குட்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர்களில் புதிய ஸ்டாட்டர் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை குறைந்த அளவிலான சத்தத்தை வெளியிடுவதுடன் ஐடியல் ஸ்டாப் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கமே எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதே ஆகும்.

BS6 ஆக்டிவா 125 இந்த வகைகளில் முதல் ஸ்கூட்டராகவும் சைடு ஸ்டான்ட் இன்டிக்கேட்டர்களுடன் இன்ஜின் இன்ஹாபிட்டர்களையும் கொண்டிருக்கும். இவை சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் போது இன்ஜின் ஸ்டார்ட் ஆகாமல் தடுக்கும். மேலும் இந்த ஸ்கூட்டர்களில் புதிய செமி-டிஜிட்டல் கன்சோல்கள் பொருத்தப்பட உள்ளது. இவை அதிக தகவல்களை அளிக்கும். அதாவது இதில் எரிபொருள் சிக்கனம் உள்பட பல்வேறு தகவல்களை காட்டும். BS6 ஆக்டிவா 125 ஸ்கூட்டர்கள் தற்போது வெளிப்புற எரிபொருள் லிட்களுடன் 4 இன் 1 இக்னேசியன் சுவிட்ச்களுடன் இருக்கும்.

வெளிப்புறமாக பார்க்கும் போது இந்த ஸ்கூட்டர் அதிக அழகாகவும், தற்போது உள்ள மாடலில் சில மேம்பாடுகள் செய்யப்பட்டும் வெளியாகியுள்ளது. இதில் விசுவல் அப்டேட்களாக, புதிய எல்இடி ஹெட்லேம்களுடன் ரீப்ளைக்டர்கள், குரோம் இன்சர்ட்களுடன் கூடிய சைடு பேனல் மற்றும் புதிய டைல்லேம்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

BS6 ஹோண்டா ஆக்டா 125 ஸ்கூட்டர்கள் சில மேம்பாடுகளுடன் கலர் ஆப்சன்களாக ரீபேல் ரெட் மெட்டாலிக், பிளாக், ஹெவி கிரே மெட்டாலிக், மிட்நைட் ப்ளூ மெட்டாலிக், பெர்ல் பிரிசியஸ் ஒயிட், மெஜஸ்டிக் பிரவுன் மெட்டாலிக் கலர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/news/bikes/bs-6-compliant-honda-activa-125-unveiled-official-launch-later-this-year/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)