ஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்

ஹோண்டா WR-V ஸ்யூவி காரில் புதிய ‘வி’ வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 9.95 லட்சம்

ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய டீசல் வகையாக விஆர்-வி வகைகளுடன் புதிய வசதிகளை மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், ‘எஸ்’ மற்றும் ‘விஎக்ஸ்’ வகைகள் போன்று இருக்கும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘வி’ வகைகளின் விலை 9.95 லட்சம் ரூபாயாகவும்,(எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) ‘எஸ்’ மற்றும் ‘விஎஸ்’ வகைகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும்.

புதிய வகை ஹோண்டா WR-V வகைகள் சில இன்டீரியர் அப்டேட்களுடன் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்கள் ஹெட்லேம் மேம்படுத்தப்பட்ட சிக்னேச்சர் எல்இடி டிஆர்எல்கள், பொசிசன் லேம்ப்கள், முன்புற பனிக்கால விளக்குகள், திரும்புவதை குறிக்கும் இண்டிகேட்டர்கள், கன் மெட்டல் பினிஷ் கொண்ட ஆர் 16 மல்டி ஸ்போக்ஸ் அலாய் வீல்கள், குரோம் டோர் ஹேண்டில் மற்றும் ரியர் மைக்ரோ ஆண்டனா போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

காரின் உட்புறத்தில் புதிய வகைகளில் பிளாக் மற்றும் சில்வர் அப்ஹோலஸ்டரி மற்றும் 7.0 இன்ச் நவீன டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட்கள் மற்றுண்ம் ஏவிஎன், ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்களுடன் கூடிய ஹெச்எப்டி மற்றும் ஆடியோ, வாய்ஸ் கமாண்ட் மற்றும் குரூஸ் கன்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஒன் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் மற்றும் ரெட் இலுமினினேசன், ஹோண்டா ஸ்மார்ட் கீ சிஸ்டம்களுடன் கீலெஸ் ரிமோட், முன்புற மையத்தில் ஆர்ம்ரெஸ்ட்களுடன் ஸ்டோர்ஜ் கன்சோல் மற்றும் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் பவர் ஸ்டீயரிங் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

WR-V இல் சமீபத்திய சேர்க்கப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்து பேசிய ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு இயக்குனருமான ராஜேஷ் கோயல், ஹோண்டா WR-V, பிரிமியம் ஸ்போர்ஸ் லைப்ஸ்டைல் வாகனமாக கடந்த 2017ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள வசதிகள் சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்களால் ஏற்று கொள்ளப்பட்டு விட்டது. புதிய ‘வி’ வகைகளை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெறும் மகிழ்ச்சி அடைகிறோம். இவை எஸ் மற்றும் விஎக்ஸ் கிரேடுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். தற்போது சேர்க்கப்பட்டுள்ள மேம்பாடுகள் டபிள்யூஆர்-வி லைன்-அப்களில் வாடிக்கையாளர்களின் பாராட்டை பெறும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.

எஸ் வகைகள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலும் கிடைக்கிறது. மேலும் இதில் கன் மெட்டல் பினிஷ் ஆர்16 மல்டி ஸ்போக்ஸ் அலாய் வீல்கள், ஆட்டோ ஏசிகளுடன் டச் கண்ட்ரோல் பேணல், பனிக்கால விளக்குகள், ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டோர் லாக், ஜாக் நைப் ரீடிரேசபிள் கீ, டிரைவர் சைடு விண்டோ ஒன் டச் அப்/டோவ்ன் ஆபரேசன்களுடன் பிஞ்ச் கண்ட்ரோல், டிரைவர் மற்றும் பயணிகள் சைடு மிரார்களுடன் கூடிய லிட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், முன்புற பயணிகளுக்கான சீட் பெல்ட் ரீமைண்டர், ஹை ஸ்பீட் அலர்ட் போன்றவை இடம் பெற்றுள்ளது.

ஹோண்டா WR-V வகைகள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. டீசல் வகைகள் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் இன்ஜின்களுடன் 99 bhp மற்றும் 200 Nm டார்க்கில் இயங்கும். பெட்ரோல் வகை WR-V-கள் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் இன்ஜின்களுடன் 88 bhp மற்றும் 110 Nm பீக் டார்கில் இயங்கும்.

வழக்கமான பாதுகாப்பு அம்சங்களாக ஹோண்டா WR-V வகைகளில், டூயல் எஸ்ஆர்எஸ் முன்புற ஏர்பேக்ஸ், ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம்களுடன் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்டர்பியுசன், ரியர் பார்க்கிங் சென்சார், முன்புற பயணிகள் சீட் பெல்ட் ரீமைண்டர், ஹை ஸ்பீட் அலற, பாதசாரிகள் காயமடையாமல் தடுக்கும் டெக்னாலஜி, இன்டலிஜென்ட் பெடல் (பிரேக் ஓவர் ரைடு சிஸ்டம்) மற்றும் மல்டி ஆங்கிள் ரியர் வியூ கேமிராகளுடன் கூடிய கைடுலைன்களும் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா WR-V வகைகள், ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மற்றும் டாட்டா டியாகோ என்ஆர்ஜிகளுடன் சில பிரிமியம் ஹாட்பேக்களான மாருதி சுசுகி இக்னிஸ், மாருதி சுசுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ 20 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)