Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம்

2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ.1 லட்சம்

2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக்கள் இந்தியாவில் 1 லட்சத்து 212 ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட டிசைன்களுடன் ஆர்ப்பாட்டமான லூக் உடன் வெளியாகியுள்ளது. இதில் உள்ள எல்இடி ஹெட்லேம்கள் பிராண்டின் புதிய யூனிட் மற்றும் டேங்க்கள் புதிய லூக் உடன் இருப்பது, இந்த பைக்களுக்கு புதிய தோற்றத்தை கொடுக்கும்.

இந்த பைக்கின் பின்புறத்தில் புதிய மற்றும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ள ஜிக்ஸெர் எஸ்எப் பைக்களை போன்று உள்ளது. டைல் லேம்ப்கள் எல்இடிகளுடன் இருப்பதுடன், தற்போது புதிய வசதியாக ஸ்டெப்-சீட்கள் நீளமான யூனிட்களாகவும் தற்போது வெளியேறும் மாடல்களை போன்றும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மேலும் ஒயிட் பேக்கிட் கன்சோல்களில் கூடுதலாக முந்தைய மாடல்களில் உள்ளதை போன்று புதிய மற்றும் ஆரஞ்சு பேக்கிட் யூனிட் கொண்டதாக இருக்கும். 2019 சுசூகி ஜிக்ஸெர் பைக்கள், அண்மையில் வெளியேறும் மாடல்களை விட 12 ஆயிரம் ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும்.

இந்த பைக் அறிமுகம் குறித்து பேசிய சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் லிமிடெட் நிறுவனம் துணைத் தலைவர் தேவாஷிஷ் ஹண்டா, இந்தியாவில் பிரிமியம் ஸ்போர்ஸ் பைக்கள் பிரபலமடைந்து வருவது அதிகரித்து வருகிறது. புதிய 2019 சுசூகி ஜிக்ஸெர் பைக்கள் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பைக்கள்ஆர்ப்பாட்டமான ஸ்டைல், அதிநவீன டெக்னாலஜி மற்றும் அதிக திறன் கொண்டதாக இருக்கும். சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா, ஜிக்ஸெர் பைக்களை இந்தியாவில் அதிகளவில் வெளியிட உள்ளது. ஜிக்ஸெர் பிராண்ட்கள் மோட்டார் சைக்கிள் விரும்பிகளை வெகுவாக கவரும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக்கள் 155 cc சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு மற்றும் எரிபொருள் இன்ஜெக்டட் இன்ஜின்களுடன் 13.9 bhp ஆற்றலில் 8,000 rpm-லும், 14 Nm பீக் டார்க்கில் 6,000 rpm லும் இயங்கும். இந்த இன்ஜின்கள் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழக்க்கம் போல இடம் பெற்றுள்ளது.

2019 சுசூகி ஜிக்ஸெர் பைக்கள் மூன்று கலர் ஆப்சன்களில் அதாவது மெட்டாலிக் சோனிக்சில்வர் மற்றும் கிளாஸ் ஸ்பிராங்கிள் பிளாக், கிளாஸ் ஸ்பிராங்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் டிரைடன் ப்ளு மற்றும் கடைசியாக கிளாஸ் ஸ்பிராங்கிள் பிளாக் கலரில் கிடைக்கிறது. 2019 சுசூகி ஜிக்ஸெர் 155 பைக்கள், டிவிஎஸ் அப்பச்சி ஆர்டிஆர் 160 4வி, ஹோண்டா சிபி ஹார்னேட் 160 ஆர் மற்றும் யமஹா எப்இசட்-எஸ் வி3.0 பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)