Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்

சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 1.10 லட்சம்

சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் நிறுவனம், கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் பைக்களை இந்தியாவில் 1.10 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த பைக்கள் ரேஸிங் ப்ளூ பாடி கலர் மற்றும் சுசூகி எசிஸ்டார் மோட்டோஜிபி குழுவால் கவரப்பட்ட கிராப்பிக்ஸ்களுடன் கிடைக்கிறது.

இந்த மோட்டார் சைக்கிள்களின் பக்கவாட்டில் ப்ளூ கலரில் சுசூகி எசிஸ்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்களில் அலாய் வீல்களுடன் நேர்த்தியான பின்ஸ்டிரிப்களுடன் இருக்கும். கலர் ஸ்கீமை தவிர்த்து இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2019 சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் பைக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு 1.09 லட்சம் ரூபாயில் மோட்டோ ஜிபி எடிசன்கள் வழக்கமான மாடல்களை விட 1,500 ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும்.

சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் லிமிடெட் நிறுவன துணைத் தலைவர் தேவாஷிஷ் ஹண்டா பேசுகையில், சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் பைக்களை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பைக்களின் கலர்கள் கவர்ந்திழுக்கு வகையிலும், பேசன் மற்றும் ரேஸிங் ஸ்பிரிட்களுடன் கூடிய பரம்பரிய ஜிஎஸ்எக்ஸ்-ஆர் சீரிஸ் பைக்களால் கவரப்பட்டதாக டிசைன் செய்யப் பட்டதாக இருக்கும் என்றார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த பைக்கள் அதிக அவுட்புட்களுடன் குறைவான எரிபொருள் செலவிடும் திறன் கொண்டதாக இருக்கும். சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் பைக்களில் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது முதலே வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த பைக்களின் கலர் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பைக்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் பைக்கள் 155 cc, நான்கு ஸ்டிரோக், சிங்கிள் சிலிண்டர் எரிபொருள் இன்ஜெக்சன், ஏர்-கூல்டு SOHC இன்ஜின்களுடன் 14 bhp ஆற்றலில் 8,000 rpm-லும், பீக் டார்க்கான 14 Nm-ல் 6,000 rpm-லும் இயங்கும்.

இந்த பைக்களின் இன்ஜின் ஸ்பேசிபிகேசன் மற்றும் சைக்கிள் பார்ட்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மோட்டார் சைக்கிள்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-கள், வழக்கமான பிட்டிங் செய்யப்பட்டிருக்கும். சுசூகி கிக்ஸர் எஸ்.எஃப் மோட்டோஜிபி எடிசன் பைக்கள், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்களுக்கு போட்டியாக இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)