Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

சுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..!

சுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர் புதிய மேட் பிளாக் கலரில் 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது..!

சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம் பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டரை புதிய கலர் அதாவது மேட் பிளாக் கலரில், 69 ஆயிரத்து 208 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த கலர் தவிர்த்து, இந்த ஸ்கூட்டர்கள் 125 cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 8.4 bhp ஆற்றலில் 7,000 rpm-லும் மற்றும் பீக் டார்க்கான 10.2 Nm-ல் 5,000 rpm-லும் இயங்கும்.

இந்த இன்ஜின், தொடர்ச்சியான வேறுபாடு கொண்ட டிரான்மிஷன்களுடன் ஏற்கனவே உள்ள சுசூகி எக்கோ திறன் கொண்ட டெக்னாலஜி கொண்டதாக இருக்கும். கூடுதலாக புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேட் பிளாக் கலரில், சுசூகி பார்க்மேன் ஸ்டீரீட்களில் கூடுதலாக ஏற்கனவே உள்ள மூன்று கலர்களில், அதாவது, மெட்டாலிக் மேட் பைப்ரியோன் கிரே, கிளாஸ் ஸ்பிரிங்கல் பிளாக் மற்றும் பெர்ல் மைகிரெட் ஒயிட் கலர்களிலும் கிடைக்கிறது.

கலர் எடிசன் அறிமுகம் குறித்து எஸ்.எம்.ஐ.பி.எல் துணைத் தலைவர் தேவாஷிஷ் ஹண்டா பேசுகையில், ஏற்கனவே பிரபலமடைந்துள்ள நிலையில், நாங்கள் இப்போது மேட் பிளாக் கலரில் சுசூகி பார்க்மேன் ஸ்டீரீட்டை அறிமுகம் செய்துள்ளோம். இதுமட்டுமின்றி ஸ்டைல் வகைகளுடன், ரோடுகளுக்கு ஏற்ற வகையில் ஸ்போர்ஸ் மற்றும் உறுதியான லூக் உடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், சுசூகி பார்க்மேன் ஸ்டீரீட்கள் இந்தியாவில் 125 cc ஸ்கூட்டர் வகைகளில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. மேலும் தனித்துவமிக்க மதிப்புகளுடன் சர்வதேச பராம்பரியம் கொண்ட பெரியளவிலான ஸ்கூட்டர் போன்று இருக்கும். ஆடம்பர வசதிகள் மற்றும் ஸ்டைல்களுடன் இருக்கும். சுசூகி பார்க்மேன் ஸ்டீரீட்கள், தனித்துவமிக்க நகர்ப்புற ஸ்கூட்டர்களுடன், சிறந்த ரைட்டிங் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் என்றார்.

சுசூகி பார்க்மேன் ஸ்டீரீட் ஸ்கூட்டர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்கூட்டர்கள் மாதத்திற்கு 6,000 யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 90 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனை எண்ணிக்கை இந்த வகையில் விற்பனையாகி வரும் டிவிஎஸ் என்டார்க் 125 மற்றும் ஹோண்டா கிராசியா ஸ்கூட்டர் களுக்கு போட்டியாக இருக்காது. இதே போன்று, சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டர்கள், இந்த பிரிவில் தோராயமாக மாதத்திற்கு 45,000 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)