Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை முழு விபரம் உள்ளே!

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; விலை முழு விபரம் உள்ளே!

பிஎம்டபிள்யூ நிறுவனம் முற்றிலும் புதிய எக்ஸ்7 எஸ்யூவிகளை இந்தியாவில் 98.90 லட்ச ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்யூவிகள் எக்ஸ்5 வகைகளுக்கு மேலாகவும், இரண்டு வகையான இன்ஜின்களை தேர்வு செய்யும் வகையிலும் வெளி வந்துள்ளது.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 விலை (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) வகைகளின் விலை

வகை                                                                   விலை
எக்ஸ்டிரைவ்40ஐ                                      ரூ. 98.90 லட்சம்
எக்ஸ்டிரைவ்30டி டிபிஇ சிக்னேச்சர்    ரூ. 98.90 லட்சம்

எக்ஸ்டிரைவ்40ஐ-கள் 3.0 லிட்டர் ஸ்டிரைட் சிக்ஸ், டர்போ பெட்ரோல் இன்ஜின்களுடன் 340 hp மற்றும் 450 Nm டார்க் கொண்டதாக இருக்கும். எக்ஸ்டிரைவ்30டி-கள் 3.0 லிட்டர் ஸ்டிரைட்சிக்ஸ் டர்போ டீசல் யூனிட்களுடன் 265hp மற்றும் 620 Nm டார்க் கொண்டதாக இருக்கும்.

மேற்குறிய இரண்டு இன்ஜின் ஆப்சன்களும் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்மிஷன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதுமட்டுமின்றி பிஎம்டபிள்யூ எக்ஸ்டிரைவ் நான்கு வீல் டிரைவ் சிஸ்டம்களுடன் மேற்பரப்பை குறிப்பிடும் மோடுகளுடன் இருக்கும்.

டிசைனை பொறுத்தவரை, எக்ஸ்7 ஸ்போர்ஸ் வகைகள் மேல்பகுதியில் முன்புறமாகவும் சிலிக் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பெரியளவிலான கிட்னி கிரில்களுடன் இருக்கும். காரின் பின்புறத்தில் பெரியளவிலான எல்இடி டெயில்லைட்கள் குரோம் ஸ்டிரிப்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த எஸ்யூவி-களின் டிசைன்கள் பெரிய அளவிலும், உறுதியான தோற்றத்துடன் இருக்கும்.

இந்த காரின் உட்புறம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 போலவே இருந்த போதும், இந்த எக்ஸ்7 காரில் உள்ள ஒரே வேறுபாடு, மூன்று வரிசை கொண்ட சீட்கள், ஆறு மற்றும் ஏழு சீட் கொண்ட கான்பிகிரேசன் கொண்டதேயாகும்.

இந்த காரில் இடம் பெற்றுள்ள கூடுதல் வசதிகள், பெரியளவிலான 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே-வுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும். மேலும் இதில் ஜெஸ்டர் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், ஐந்து-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேசர்லைட் ஹெட்லேம்கள், அம்பியன்ட் லைட்டிங்களையும் கொண்டிருக்கும். கூடுதலாக மூன்று பகுதி கொண்ட கிளாஸ் சன்ரூஃப், பார்கிங்அசிஸ்டென்ட்களை (தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளக்கூடிய வசதி) கொண்டிருக்கும். இதுமட்டுமின்றி காரில் உள்ள மூன்று வரிசை சீட்களையும் மாற்றியமைக்கும் வகையில் இருக்கும். பெட்ரோல் வகை 40ஐ வகைகளில் சில வசதிகள் இடம் பெற்றிருக்காது. அதாவது ஹெட்லேம்கள் மற்றும் அடப்டிவ் எல்இடி யூனிட் மற்றும் ரியர் எண்டர்டேய்ன்மென்ட் பேக்கேஜ்கள் இடம் பெற்றிருக்காது.

கூடுதலாக, டீசல் வகைகளில் 6 சீட்கள் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும். பெட்ரோல் மாடல்களில் ஏழு சீட்கள் வழக்கம்போல இருந்தாலும் ஆறு சீட் கான்பிகேரேசன் ஆப்சனலாக கிடைக்கிறது.

இந்திய மார்க்கெட்டுக்காக, 30டி வகைகள் உள்ளுரிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. 40ஐ வகைகள் சிபியூ ரூட் வழியாக கொண்டு வரப்படுகிறது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் கூடுதலாக டாப் வகையான எக்ஸ் 7 M50டி வகைகளை 400 hp/ 760 Nm, 3.0 லிட்டர் இன்-லைன் ஆறு சிலிண்டர், குவாட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின்களுடன் இந்தாண்டின் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.

போட்டியை பொறுத்தவரை, எக்ஸ்7 கார்கள் மற்ற ஆடம்பரமான எஸ்யூவிகள் அதாவது மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)