Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

இந்தியாவில் மஹிந்திரா பொலிரோ இப்போது பிஎஸ் 6 ரெடிகளுக்கான எஞ்சினுடன் ICAT சான்றிதழைப் பெற்றுள்ளது

இந்தியாவில் மஹிந்திரா பொலிரோ இப்போது பிஎஸ் 6 ரெடிகளுக்கான எஞ்சினுடன் ICAT சான்றிதழைப் பெற்றுள்ளது

பொலிரோ பவர்+ மாடல்களுக்கான பிஎஸ்6 ரெடி சர்டிபிகேட்களை ஆட்டோமேடிவ் டெக்னாலஜிகளுக்கான சர்வதேச மையத்திடம் இருந்து பெற்றுள்ளதாக மகேந்திரா மற்றும் மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாங்கள் ஏற்கனவே தெரிவித்ததை போன்று, மகேந்திரா நிறுவன வாகனங்களில் பொலிரோ வாகனங்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனையாகும் வாகனமாக இருந்து வருகிறது. இவை பிஎஸ்6 விதிக்குட்பட்டதாக மாற்றப்பட உள்ளது. பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட வாகனங்கள் 2020ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று மகேந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

தனது சப்ளையர்களுடன் சேர்ந்து பிஎஸ்6 தொழில்நுட்பத்தை அமல்படுத்தும் பணியை தங்களது வாகனங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், பொலிரோ வாகனங்களில் பல்வேறு பாதுகாப்பு அப்கிரேட்கள் செய்யப்பட்டுள்ளதாக மகேந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு வசதிகளாக பொலிரோவில், ஆண்டி-லாக் பிரேகிங் சிஸ்டம், ஸ்பீட் அலர்ட்களுடன் ஓவர் ஸ்பீட் 80 kmph மற்றும் 120 kmph அளவில் இருக்கும். முன்புற டிஸ்க் பிரேக்கள், ஆண்டி-கிளேர் IRVM, டிஜிட்டல் இம்மொபைலைசர் மற்றும் டிரைவர் மற்றும் பயணிகளுக்கான சீட் பெல்ட் ரீமைண்டர் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

கூடுதலாக இதில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொலிரோ பவர்+, பொலிரோ பிளஸ் (9-சீட்கள் கொண்டது) களுடன், பொலிரோ ஆம்புலன்ஸ்களிலும் அத்தியாவசியமான அப்கிரேட்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மகேந்திரா & மகேந்திரா லிமிடெட் நிறுவன ஆட்டோமேடிவ் துறை தலைவர் ராஜன் வதோரா பேசுகையில், முதல் முறையாக எங்கள் பிஎஸ்-6 விதிக்குட்பட்ட வாகனங்கள் தயாரிக்கும் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பொலிரோ பவர்+ வாகனங்களுக்கு பிஎஸ்-6 சர்டிபிகேட்கள் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

மேலும் பேசிய அவர், பொலிரோ வாகனங்கள் எங்கள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் வாகனமாக இருந்து வருகிறது. மேலும் இவை முதல் UV (பயன்பாட்டு வாகனம்) வாகனமாக இருப்பதுடன், ஆட்டோமேடிவ் டெக்னாலஜிகளுக்கான சர்வதேச மையத்திடம் இருந்து பிஎஸ்6 ரெடி சர்டிபிகேட்டையும் பெற்றுள்ளது.

மகேந்திரா நிறுவனம் ஏற்கனவே, இந்தியாவில் 12 லட்சம் பொலிரோ யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த எஸ்யூவி-கள் மகேந்திரா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் அதிகம் விற்பனையாகும் வாகனங்களாக இருந்து வருகிறது. பிஎஸ்6 விதிக்குட்பட்ட பொலிரோ வாகனங்களில் எந்த டிசைன் மாற்றங்களும் இருக்காது என்றாலும், வெளிப்புறமாக சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/mahindra-bolero-power-plus-gets-bs6-certification/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)