Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

போர்சே மெக்கன் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 69.98 லட்சத்தில் துவக்கம்..!

போர்சே மெக்கன் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ. 69.98 லட்சத்தில் துவக்கம்..!

கடந்த ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், போர்சே மெக்கன் ஃபேஸ்லிஃப்ட்கள் இந்தியாவில் அறிமுகமானது. மேலும் இதன் விலைகள் வழக்கமான வெர்சன்கள் 69.98 லட்ச ரூபாயில் துவங்கி, 85.03 லட்ச ரூபாய் விலையில் டாப் வகையான மெக்கன் எஸ்-கள் கிடைக்கிறது (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்).

மெக்கன் டர்போ கார்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்த நிலையிலும், தற்போது விற்பனை செய்யப்படவில்லை. பேபி எஸ்யூவி-களுக்கான புக்கிங்கை போர்சே நிறுவனம் இந்தாண்டின் ஜூன் மாதம் துவக்கி விட்டது. இந்த மாடல்கள் தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்ட டிசைன், வசதிகள், கனெக்டிவிட்டி மற்றும் டிரைவிங் டைனமிக்ஸ் கொண்டதாக இருக்கும். கூடுதலாக புதிய தலைமுறை காயென்னே வகைகள், இந்தியாவில் இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகமானது.

போர்சே மெக்கன் ஃபேஸ்லிஃப்ட்களில் மறுடிசைன் செய்யப்பட்டுள்ளதுடன், முன்புறம் அகலமாகவும் இருக்கும் வகையில் அனுமதிக்கும். காரின் முன்புற லுக் சிலிக் தோற்றத்திலும், புதிய கிரில் மற்றும் ஸ்பாயிலர் ஏர் டேம்களும் பொருத்தப்பட்டுள்ளது.

ஹெட்லேம்களில் கூடுதலாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட முழுமையான எல்இடி செட்-அப்களுடன் டெயில்லைட்களுடன் எல்இடிகள் இடம் பெற்றிருக்கும். இவை புதிய 911 கார்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும்.

எஸ்யூவிகளில் கூடுதலாக, நான்கு புதிய எக்ஸ்டீரியர் கலர் ஆப்சன்களில், அதாவது மியாமி ப்ளூ, மாம்பா கிரீன் மெட்டாலிக், டோலோமிட் சில்வர் மெட்டாலிக் மற்றும் கிரையான் கலர்களில் கிடைக்கிறது. கூடுதலாக, புதிய 20 மற்றும் 21 இன்ச் வீல்களுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு ஆப்சனாக கிடைக்கிறது.

காரின் உட்புறத்தில் போர்சே மெக்கன் ஃபேஸ்லிஃப்ட் ஸ்போர்ஸ் லுக் கொண்ட புதிய டாஷ்போர்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிய 10.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் போர்சே கனெக்ட் சிஸ்டம்களுடன் இருக்கும்.

இந்த காரின் ஸ்டீயரிங் வீல்கள் 911 கார்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். இதில் ஏர் வென்ட்கள் மாற்றியமைக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக போர்சே கனெக்ட் பிளஸ் மாடுல்கள் ஒவ்வொரு வாகனத்திலும் முழுமையாக கனெக்ட் செய்யப்பட்டதுடன், புதிய ஆஃப்-ரோடு பிரிசிஸ்சன் அப்ளிகேஷன்களுடன் இருக்கும். இந்த அப்ளிகேஷன்கள் மெக்கன்களின் ஆஃப்-ரோடு அனுபவத்தை பதிவு செய்வதுடன் ஆய்வு செய்யும்.

மற்ற வசதிகளாக, இந்த எஸ்யூவி-களில், மூன்று-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் குரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

கூடுதல் ஆப்சன்களாக போஸ் மற்றும் புரும்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சஸ்பென்சன் செட்அப்கள் மேம்படுத்தப்பட்டு, போர்சே ஆக்டிவ் சஸ்பென்சன் மேனேஜ்மென்ட்களுடன் வழக்கமான ஏர் சஸ்பென்சன் கொண்டதாக இருக்கும்.

ஆற்றலை பொறுத்தவரை, போர்சே மெக்கன் ஃபேஸ்லிஃப்ட்கள் இரண்டு இன்ஜின் ஆப்சன்களுடன் கிடைக்கிறது. தற்போது இரண்டு வகையாக அதாவது, மெக்கன் மற்றும் மெக்கன் எஸ்-களுடன் பேஸ் வெர்சன்கள் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார்களுடன் 247 bhp மற்றும் 370 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும்.

மெக்கன் எஸ் வகைகள், 3.0 லிட்டர் வி6-களுடன் 345 bhp மற்றும் 480 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இரண்டு இன்ஜின்களும் 7 ஸ்பீட் டுயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்மிஷன் கொண்டதாக இருக்கும்.

இந்த கார்கள் 0-100 kmph வேகத்தை 5.1 செகண்ட்களில் எட்டும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் ஸ்போர்ஸ் க்ரோனோ பேக்கேஜ்ளுடன் இருந்தால் டாப் ஸ்பீட் 254 kmph-ஆக இருக்கும்.

போட்டியை பொறுத்தவரை, 2019 போர்சே மெக்கன் ஃபேஸ்லிஃப்ட்கள், ஆடி கியூ 5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, பிஎம்டபிள்யூ எக்ஸ் 5, ஜாகுவார் எஃப்-பேஸ் மற்றும் இந்த பிரிவில் உள்ள கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/porsche-macan-facelift-launched-in-india-with-prices-starting-at-rs-69-98-lakh/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)