Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ஹூண்டாய் வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யூவி-கள் 2 மாதங்களில் 50,000 முன்பதிவை கடந்தது

ஹூண்டாய் வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யூவி-கள் 2 மாதங்களில் 50,000 முன்பதிவை கடந்தது

ஹூண்டாய் வென்யூ கார்கள் கொரியா நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியான பிளாக்பாஸ்டர் காராக இருந்து வருகிறது.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி-கள் வெறும் இரண்டே மாதத்தில் 50,000 புக்கிங்கை பெற்றுள்ளது. இது ஹூண்டாய் நிறுவனம் 21 சதவிகித மார்க்கெட் ஷேர்-ஐ இந்திய மார்க்கெட்டில் பிடிக்க உதவியாக இருந்தது.

தற்போது கிடைத்த தகவலின்படி, வென்யூ கார்கள் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட சப்காம்பேக்ட் எஸ்யூவி-களில் இரண்டாவது சிறந்த எஸ்யூவி-யாக இருப்பதுடன், இந்த பட்டியலில் மகேந்திரா எஸ்யூவி 300 வாகனங்கள் 3 ஆயிரத்து 994 யூனிட்கள் விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது. வென்யூ கார்கள், வெறும் 108 யூனிட்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்திலும், இதை தொடர்ந்து மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் உள்ளன.

இந்த ரெக்கார்ட் பிரேகிங் புக்கிங் குறித்து பேசிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் தேசிய விற்பனை தலைவர்
விகாஷ் ஜெயின், ஹூண்டாய் வென்யூ-கள் ஐஜென் வாடிக்கையாளர்களுக்காக எதிர்கால டெக்னாலஜி, ஸ்பேஸ் கம்போர்ட், பாதுகாப்பு மற்றும் அழகிய டிசைன்களுடன் புதிய தலைமுறை ஸ்டைல்களுடன் இருக்கும் என்றார். மேலும் பேசிய அவர், ஹூண்டாய் வென்யூ கார்கள் 60 நாட்களில் 50,000 புக்கிங் மைல்ஸ்டோனை கடந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய வாடிக்கையாளர்கள் ப்ளூ லிங்க் டெக்னாலஜி உடன் கனெக்ட் செய்யப்பட்டு, மொத்த வென்யூ டெலிவரியில், 55 விழுக்காடு கார்கள் ப்ளூ லிங்க் பொருத்தப்பட்ட வகையாகவும் இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 50,000 புக்கிங்கள், 35 விழுக்காடு வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் பெஸ்ட்-இன் வகையாக DCT (டுயல் கிளட்ச் டிரான்மிஷன்) டெக்னாலஜி கொண்டதாக இருக்கும் என்றார்.

இந்த விற்பனை எண்ணிக்கை வாடிக்கையாளர் ஹூண்டாய் வென்யூ கார்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. மேலும் கார்கள், ப்ளூலிங்க் கார் டெக்னாலஜியுடன் கனெக்ட் செய்யப்பட்டதாக இருந்தால் அதிகம் விரும்புவார்கள் என்றும் தெரிகிறது.

ஹூண்டாய் வென்யூ கார்கள் இந்தியாவில் மூன்று இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்சன்களுடன், அதாவது 1.4 லிட்டர் டீசல் இன்ஜின்கள், 6 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் 5 ஸ்பீட் மெனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 1 லிட்டர் GDI டர்போ இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை 7 ஸ்பீட் DCT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும் .

ஹூண்டாய் வென்யூ கார்கள் இந்தியாவில் கடந்த மே 21ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை 18,000 யூனிட்களை டெலிவரி செய்துள்ளது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)