மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டர்கள் ஒருங்கிணைந்த பிரேகிங் சிஸ்டம் குறைபாடு காரணமாக தற்காலிகாமாக நிறுத்தப்பட்டது. மேலும், இவை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அரசால் அமல்பட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்கவில்லை. இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம், இதை மாற்றியமைத்து தற்போது சிபிஎஸ் பொருத்தப்பட்ட கஸ்டோ 110 மற்றும் கஸ்டோ 125 ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த இரண்டு ஸ்கூட்டர்களின் விலை, 2,000 ரூபாய் அதிகாமாகவும், கூடுதலாக பாதுகாப்பு வசதிகளுடனும் கிடைக்கிறது. மஹிந்திரா கஸ்டோ 110 DX சிபிஎஸ் ஸ்கூட்டர்கள் தற்போது 50 ஆயிரத்து 996 ரூபாயில் விலையிலும், டாப்-ஸ்பெக் கஸ்டோ 110 VX சிபிஎஸ் வகைகளின் விலை 55 ஆயிரத்து 660 ரூபாய் விலையிலும் விற்பனையாகிறது. புதிய மஹிந்திரா கஸ்டோ 125 சிபிஎஸ் ஸ்கூட்டர்களை தற்போது நீங்கள் 58 ஆயிரத்து 137 ரூபாயில் விலையில் வாங்கி கொள்ளலாம்.
இந்திய அரசு, புதிய விதிகளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளது. அதாவது புதிய டூவிலர்கள் (125cc வரை திறன் கொண்டது) ஒருங்கிணைந்த பிரேகிங் சிஸ்டம்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற விதியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறிமுகம் செய்துள்ளது.
கஸ்டோ 110 ஸ்கூட்டர்கள் 109cc, ஏர்-கூல்டு இன்ஜின்களுடன் 8 hp ஆற்றலில், 7,000 rpm-லும், 9 Nm டார்க்கில் 5,500 rpm-லும் இயங்கும். கஸ்டோ 125 ஸ்கூட்டர்கள் 124.6 cc, ஏர்-கூல்டு இன்ஜின்களுடன் 8.5 hp ஆற்றலில் 7,000 rpm-லும், 10 Nm டார்கில் 5,500 rpm-லும் இயங்கும்.
மஹிந்திரா கஸ்டோ ஸ்கூட்டர்களில் சில தனித்துவமிக்க வசதிகளுடன், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய சீட்கள், பலோ-மீ-ஹோம் ஹெட்லேம் மற்றும் பிளிப் கீ போப்களுடன் எல்இடி டார்ச் மற்றும் இண்டிகேட்டர்களை பட்டன் மூலம் ஆக்டிவேட் செய்யும் வசதி கொண்டதாக இருக்கும். இவை, அதிக நெரிசல் கொண்ட பார்க்கிங்கில் உள்ள உங்கள் ஸ்கூட்டரை எளிதாக கண்டுபிடிக்க உதவும்.
மஹிந்திரா கஸ்டோ 110 மற்றும் கஸ்டோ 125 ஸ்கூட்டர்களில், சில சப்டைல் அப்டேட்களை செய்தால், இந்த வகையில் உள்ள ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.