ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், தனது கோனா எலக்ட்ரிக் கார்களுக்கான விலையை 25.3 லட்சம் ரூபாயிலிருந்து 23.71 லட்சம் ரூபாயாக (எக்ஸ் ஷோ ரூம் விலை இந்தியாவில்) குறைத்துள்ளது. அரசு ஜிஎஸ்டி ரேட்டை 12 விழுக்காடில் இருந்து 5 விழுக்காடாக குறைத்ததை தொடர்ந்து, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி ரேட்டை 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைத்துள்ளது.
இது கண்டிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அதிகரிக்க உதவும். ஹூண்டாய் நிறுவனம் கோனா கார்களை அறிமுகம் செய்யப்பட்ட 20 நாட்களில் 152 புக்கிங்கை கடந்துள்ளது. இந்த விலை குறைப்பு கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் கோனா எலக்ட்ரிக்கள் 100 kW மோட்டார்களுடன் இருக்கும். இவை ஆற்றலை முன்புற வீல்களுக்கு கொடுப்பதுடன், இதன் அவுட்புட் 131 bhp மற்றும் 395 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும்.
இது காம்பேக்ட் கிராஸ்ஓவர்களுடன் ஹூண்டாய் கிரெட்டா போன்று அதே அளவில், அதே இடவசதியுடன் இருக்கும். ஆனாலும் டிசைன்கள், அழகிய வடிவிலும், உறுதியான மற்றும் நேர்த்தியான சாலையில் செல்ல ஏற்றதாக இருக்கும்.
சர்வதேச அளவில், கோனா எலக்ட்ரிக் கார்கள் இரண்டு பேட்டரி ஆப்சன்களுடன் இருக்கும். இவை 39.2 kWh யூனிட் மற்றும் 64 kWh யூனிட் கொண்டதாக இருக்கும். இந்தியாவில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது, சிங்கிள் சார்ஜ்ஜில் 452 km தூரம் பயணிக்கும்.
பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள ஏழு முதல் எட்டு மணி நேரம் ஆகும். வேகமான சார்ஜர் மூலம் பேட்டரி சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் ஆகும். ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கு போர்டேபிள் சார்ஜ்ஜர் மற்றும் ஆல்டர்நேட் கரண்டில் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய மற்றும் சுவற்றில் மாற்றக்கூடிய சார்ஜ்ஜர்களும் வழங்கப்படும்.
இந்த போர்டேபிள் சார்ஜ்ஜர்கள், 15 Amp சாக்கெட் கொண்ட எந்த ஒரு மூன்று பின் பிளாக்கிலும் பொருத்தி கொள்ள முடியும். மேலும் இதை மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 50 km வரை டாப்-அப் செய்து கொள்ள முடியும். சுவற்றில் மாற்றும் வசதி கொண்ட பாக்ஸ் சார்ஜ்ஜர்கள் 7.2 kW அளவுடன் வாகனங்களை ஒரு மணி நேரத்திற்குள் 50 km தூரம் பயணிக்க செய்யும் வகையில் இருக்கும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கூடுதலாக, சார்ஜிங் கட்டமைப்பை செட்டப் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் இணைந்து பாஸ்ட் சார்ஜிங் வசதிகளை குறிப்பிட்ட நகரங்களில், அதாவது, மும்பை, சென்னை, பெங்களூர் மற்றும் டெல்லியில் இன்ஸ்டால் செய்ய உள்ளது. ஹூண்டாய் நிறுவனம், பாஸ்ட் சார்ஜிங் உபகரணங்கள், ஒரு மணி நேரத்தில் 80 விழுக்காடு சார்ஜ் செய்யும் உபகரணங்களுக்காக முதலீடு செய்ய உள்ளது.