Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

டாடா நெக்ஸன் XT+ மாடல் கார்கள் ரூ.8.02 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகமானது

டாடா நெக்ஸன் XT+ மாடல் கார்கள் ரூ.8.02 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகமானது

டாடா நிறுவனம் புதிய எக்ஸ்.டி+ வகைகளான நெக்ஸன்களை 8.02 லட்சம் ரூபாய் மற்றும் 8.87 லட்சம் ரூபாய் விலையில் முறையே பெட்ரோல் மற்றும் டீசல் வெர்சன்களில் கிடைக்கிறது. எக்ஸ்டி வகை நெக்ஸன் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸன் எக்ஸ்.டி+ வகை, புரொஜெக்டர் ஹெட்லேம்களுடன் எல்இடி டே டைம் ரன்னிங் லைட்கள், ரூஃப் ரெயில் மற்றும் ஆற்றல் மூலம் மடங்கும் தன்மை கொண்ட ORVM-கள் போன்றவைகளுடன் கிடைக்கிறது.

காரின் உட்புறத்தில், ஹார்மன்-கார்டன் கனெக்ட் நெக்ஸ்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்களுடன் கூடிய ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் 8 ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ஸ்டீயரிங் மவுண்டட் ஆடியோ மற்றும் போன் கண்ட்ரோல்கள், ஏர்-கண்டிஷனிங்களுடன் ரியர் ஏசி வென்ட்கள் மற்றும் டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையில் இருக்கும்.

பாதுகாப்பு வசதியாக, இந்த வகைகளில், டூயல் முன்புற ஏர்பேக்ஸ், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், முன்புற சீட் பெல்ட் ரீமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சர்கள் மற்றும் ISOFIX சைல்டு பாதுகாப்பு சீட் ஆங்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, டாடா மோட்டார்கள் கூடுதலாக பெரியளவிலான 7 இன்ச் டச் ஸ்கீரின் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் XZ, XZ+ மற்றும் XZA+ வகைகளிலும் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸன்-கள் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்களுடன் 108 bhp மற்றும் 170 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இதே போன்று 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்கள் 108 bhp மற்று 260 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இரண்டு இன்ஜின்களுடன் 6 ஸ்பீட் மெனுவல் அல்லது 6 ஸ்பீட் ஆட்டோமேட்டட் மெனுவல் டிரான்மிஷன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)