Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

டாடா மோட்டார்ஸ் அதன் அடுத்த எலக்ட்ரிக் காரை 2020 நிதியாண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு

டாடா மோட்டார்ஸ் அதன் அடுத்த எலக்ட்ரிக் காரை 2020 நிதியாண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்த எலக்ட்ரிக் வாகனங்களை இந்திய மார்க்கெட்டில் வரும் 2019-2020ம் நிதியாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கார் தயாரிப்பாளர்கள், அண்மையில் டாடா பவர் நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் செய்து கொண்டு 300 பவர் சார்ஜ்ஜிங் ஸ்டேஷன்களை இந்தியாவின் ஐந்து மெட்ரோ நகரங்களில் நிறுவன உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் மொபைலிட்டி பிசினஸ் & கார்ப்பரேட் வியூகத்தின் தலைவர் ஷைலேஷ் சந்திரா பேசுகையில், எங்கள் நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்ய உள்ள எலக்ட்ரிக் வாகனங்கள், வாகனங்கள் வாங்கும் தனிப்பட்ட நபர்களை குறி வைத்து உருவாக்கப்பட உள்ளது. மேலும், டாடா நிறுவனம் உயர்ந்த வகையிலான வெர்சன்களுடன் கூடிய டிகோர் எலக்ட்ரிக் வாகனங்களை அடுத்த நிதியாண்டின் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், எங்கள் வாகனங்கள், தனியார் வாகன ஓட்டிகளை குறிவைத்து, வரும் நிதியாண்டுகளும் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுமட்டுமின்றி, நாங்கள் சார்ஜிஜிங் கட்டமைப்புகளை தற்போது தொடங்கியுள்ளோம். இந்த தயாரிப்புகளுக்காக குறிப்பிட்ட நகரங்களில், சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்க உள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் இதுமட்டுமின்றி உயர்தரம் கொண்ட டிகோர் வகைகளை இந்திய மார்க்கெட்டில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த நேரத்தில், தனியார் வாகன ஒட்டிகளை குறிவைத்தே இதை செய்ய உள்ளோம் என்றார்.

அண்மையில் நடந்த டாடா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன், நான்கு எலக்ட்ரிக் மாடல்களை இந்தியாவில் அடுத்த 18 மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், எலக்ட்ரிக் வெர்சன்களான டாடா நெக்ஸன்கள், இந்த நான்கு புதிய எலக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக இருக்கும். மற்ற மூன்று வாகனங்களான, டாடா அல்ட்ராஸ் எலக்ட்ரிக் வாகனங்கள் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப் படுத்தப்பட்டது. இத்துடன் தனியார் வாகன ஒட்டிகளுக்காக தயாரிக்கப்பட்ட டிகோர் எலக்ட்ரிக் வாகனங்கள் நான்காவது மாடலாக வெளியிடப்பட உள்ளது என்றார்.

எதிர்வரும் எலக்ட்ரிக் கார்கள் குறித்து பேசிய அவர், இந்த தயாரிப்புகள் அனைத்தும், தனியார் வாகன ஒட்டிகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இதே போன்ற சில தயாரிப்புகளும் எங்கள் நிறுவனத்தால் வெளியிடப்படலாம். இருந்தாலும், இந்த கார்களை அறிமுகம் செய்யும் நேரத்தில், பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கியுள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இரண்டு (நெக்ஸன் இவி மற்றும் அல்ட்ராஸ் இவி) சிறப்பு தயாரிப்புகள் கண்டிப்பாக தனிப்பட்ட முறையில் வாகனங்களை வாங்குபவர்களுக்கான தயாரிப்பாக இருக்கும் என்றார்.

விரைவில் அறிமுகமாக உள்ள இவி-கள் நெக்ஸன் இவி அல்லது அல்ட்ராஸ் இவி இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆம் என்றார்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)