Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

மிகவும் ஸ்டைலிஷான பென்லி லியோன்சினோ 500 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; விலை 4.79 லட்சம்

மிகவும் ஸ்டைலிஷான பென்லி லியோன்சினோ 500 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; விலை 4.79 லட்சம்

இத்தாலிய பைக் தயாரிப்பாளர் பென்லி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட லியோன்சினோ 500 மோட்டார் சைக்கிள்களை 4.79 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோ ரூம் விலை இந்தியாவில்) அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் புதிய ஸ்கிராம்ப்ளர் ஸ்டைல் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்கள், 1950 மற்றும் 60-களில் வெளிவந்த ‘லயன் கப்’ மாடல்கள் மூலம் கவரப்பட்டு, நவீன மெக்கனிக்கல் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பென்லி லியோன்சினோ 500-கள் நீண்ட கால எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருப்பதுடன், இந்த பைக் தயாரிப்பாளரின் இரண்டாவது அறிமுகமாக அறிமுகமாகியுள்ளது. இந்தாண்டு இந்தியாவில் தனது செயல்பாட்டை அதிஸ்வர் ஆட்டோ ரைடு உடன் பென்லி நிறுவனம் தொடங்கியது. பென்லி லியோன்சினோ பைக்களுக்கான புக்கிங் ஆன்லைன் மற்றும் நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை புக்கிங் செய்து கொள்ள 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கள் அறிமுகம் குறித்து பேசிய பெனெல்லி இந்தியாவின் எம்.டி – விகாஸ் ஜபாக், லியோன்சினோ பைக்கள், பராம்பரியம் மற்றும் பேஷன்களை ஒருங்கினைத்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன், கான்டேம்பரி ஸ்டைல், மேம்பாடுகள் மற்றும் திறன் கொண்ட பைக்காக இருக்கும். நவீன வெர்சன் லியோன்சினோ-கள் உண்மையான மாடல்களில் சில மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. இந்த பைக்கள் இத்தாலிய தயாரிப்பாளரின் பிராண்ட் வரலாற்றை விளக்கும் வகையில் இருக்கும். மேலும் இவை நவீன உலகிற்கு ஏற்ற வகையில், இந்திய மோட்டார் சைக்கிள் மார்க்கெட்களில் புதிய வரவாகவும், சூப்பர் பைக்களாகவும் அறிமுகமாகியுள்ளது. நாங்கள் சர்வதேச அளவிலான பென்லி தயாரிப்புகளை இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டு வர பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். இதுமட்டுமின்றி, இந்திய மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களை பெறுவதுடன் நெட்வொர்க்கையும் கட்டமைக்க உள்ளோம். இதனால், வரும் ஆண்டுகளில் எங்கள் தயாரிப்புகளின் விற்பனை நல்ல நிலையில் உயரும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

பென்லி லியோன்சினோ 500 -கள் ஸ்கிராம்ப்ளர் போன்று டிசைன் செய்யப்பட்டிருந்தாலும், ரெட்ரோ லுக்கிற்காக சில வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில், வட்டவடிவ எல்இடி ஹெட்லேம்களுடன் புரொஜெக்டர் லென்ஸ், லயன் ஆப் பெசரோ முன்புற பெண்டர்களின் பொருத்தப்பட்டுள்ளது. டியர்-டிராப் பெட்ரோல் டேங்க்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், டிரெல்லிஸ் பிரேம்களுடன் இருக்கும். பைக்கின் பின்புறத்தில் ஸ்போர்ஸ் எல்இடி டெயில்லைட்களுடன் சிறியளவிலான வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கள், போடு-ஸ்டைல் டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களுடன் அனத்து அத்தியாவசியமான டெல்-டால் லைட்களையும் கொண்டிருக்கும். லியோன்சினோ பைக்களில் இந்தியாவின் சாலைகளுக்கு ஏற்ப 17 இன்ச் அலாய் வீல்களுடன் இருக்கிறது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 145 mm-ஆக இருக்கும். இந்த பைக் இரண்டு கலர் ஆப்சன்களில், அதாவது லியோன்சினோ ரெட் மற்றும் ஸ்டீல் கிரே கலரில் கிடைக்கிறது.

பவர்டிரெயின்களை பொறுத்தவரை, பென்லி லியோன்சினோ 500-களில் 499 cc டூவின்-சிலிண்டர், லிக்கூட்-கூல்டு மோட்டார்களுடன் 47 bhp ஆற்றலில் 8,500 rpm-லும் 46 Nm பீக் டார்க்கில் 6.000 rpm-லும் இயங்கும். கூடுதலாக TRK 502 போன்று இயங்கும். இவை 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த பைக்கின், சஸ்பென்ஷன்களாக, 50 mm இன்வேர்ட்டடு போர்க் முன்புறத்திலும், பின்புறத்தில் லெட்ரல் ஹைட்ராலிக் மோனோஷாக் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக் ஆற்றல் 320mm முன்புற டிஸ்க்-லுடன் நான்கு பிஸ்டன் காலிப்பர் மற்றும் 260 mm டிஸ்க் சிங்கிள் பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிப்பர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. டூயல்-சேனல் ஏபிஎஸ் கிட் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும்.

TRK 502 போன்று, லியோன்சினோ பைக்களுக்கும், ஐந்து ஆண்டு அன்லிமிடெட் கிலோமீட்டர் வாரண்டிகள் கிடைக்கும். இந்த பைக்கள் ஸ்டைல் மற்றும் குறைவான விலை கொண்டதாக இருப்பதுடன், டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மற்றும் தி ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்களுக்கு போட்டியாக இருக்கும். இருந்தாலும் விலையை பொறுத்தவரை, இந்த பைக்கள் நேரடியாக எந்த பைக்கும் போட்டியாக இருக்காது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)