ஜாவா பைக்களுக்கான ஆன்லைன் டெலிவரி எஸ்டிமேட்டர் டூல் அறிமுகம்

ஜாவா பைக்களுக்கான ஆன்லைன் டெலிவரி எஸ்டிமேட்டர் டூல் அறிமுகம்

ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஜாவா மற்றும் ஜாவா நாற்பத்தி இரண்டு பைக்களுக்கான டெலிவரியை இந்தாண்டு மார்ச் முதல் தொடங்கியுள்ளது. இந்த டெலிவரிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாவா நிறுவனம் டெலிவரி எஸ்டிமேட்டரை இணைய தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எஸ்டிமேட்டர் மூலம், கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதியிலிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் ஜாவா பைக்களை புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள், தங்கள் பைக் எப்போது டெலிவரி ஆகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

டெலிவரி எஸ்டிமேட்டர்கள், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார்களின் தற்போதை நிலை மற்றும் டெலிவரி செய்யப்படும் நேரம் ஆகியவற்றை வழங்கும். இருந்தாலும், லாஜிஸ்டிகஸ், இயற்கை பாதிப்புகள், போக்குவரத்து சூழ்நிலை மற்றும் தயாரிப்பில் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் இந்த எஸ்டிமேட்டர்களால், மிகச் சரியான டெலிவரி நேரத்தை கொடுக்க முடியாது.

ஜாவா நிறுவனம், ஜாவா மற்றும் ஜாவா நாற்பத்தி இரண்டு என்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை தற்போது விற்பனை செய்து வருகிறது. இரண்டு பைக்களும் 293 cc, சிங்கிள் சிலிண்டர், லிக்யுட்-கூல்டு, நான்கு ஸ்டிரோக் இன்ஜின்களுடன், 27 bhp ஆற்றல் மற்றும் 28 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் ஸ்போர்டிங் கிளாசிக் லைன்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஜாவா நாற்பது இரண்டு வகைகள், சிறியளவிலான மார்டன் தோற்றத்துடன், பிளாக்டு அவுட் உபகரணங்கள் மற்றும் வேறுபட்ட ஹெட்லேம் மற்றும் முன்புற பென்டர்களுடன் இருக்கும்.

கிளாசிக் லிஜென்ட்ஸ் நிறுவனம், தற்போது ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கான டெலிவரி சிக்கல்களை சரி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இந்த பைக்களை இந்தாண்டு செப்டம்பர் வரை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் டிமாண்ட்களுக்குகேற்ப இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை வேகப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மோட்டார் சைக்கிள்கள், மத்திய பிரதேசத்தில் உள்ள நிறுவனத்தின் பிதாம்பூர் தொழிற்சாலையில் தயாரித்து வருகிறது.

ஜாவா பைக்கள், 293cc, லிக்யுட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், DOHC இன்ஜின்களுடன் டபுள் கிராடல் சேஸ்களையும் கொண்டிருக்கும். ஜாவா மற்றும் ஜாவா நாற்பத்தி இரண்டு வகைகளின் விலைகள் முறையே 1.64 லட்சம் ரூபாய் மற்றும் 1.55 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. டூயல்-சேனல் ஏபிஎஸ்களுடன் கூடிய வகைகளின் விலைகள் முறையே ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 942 ரூபாய் மற்றும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 942 ரூபாய் விலை கொண்டதாக இருக்கும். மேற்குறிய அனைத்து விலைகளும் டெல்லியில் எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)