Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ஹோண்டா கார்கள் வாங்கி ரூ.4 லட்சம் வரை சலுகைகள் பெறுங்கள் – முழு விபரம் உள்ளே..!

ஹோண்டா கார்கள் வாங்கி ரூ.4 லட்சம் வரை சலுகைகள் பெறுங்கள் – முழு விபரம் உள்ளே..!

ஹோண்டா கார்களுக்கு ரூ. 4 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கிறது. ஹோண்டா CR-V கார்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை சலுகை பெறலாம். இந்த சலுகை வரும் 31ம் தேதி வரை மட்டுமே

இந்த சலுகைகள் கண்டிப்பாக விற்பனையை உயர்த்தும் என்று தெரிவித்துள்ள ஹோண்டா நிறுவனம், தங்கள் நிறுவன கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் 4 லட்ச ரூபாய் வரை சலுகைகள் அளிக்கிறது.

ஹோண்டா சிஆர்-வி கார்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

டீசல் வகை ஹோண்டா எஸ்யூவி, ஹோண்டா சிஆர்-விகளுக்கு நான்கு லட்சம் ருபாய் வரை சலுகை பெறலாம். இந்த சலுகை 2018 மற்றும் 2019 மாடல்களுக்கு கிடைக்கும். ஹோண்டா சிஆர்-வி டீசல் வெர்சன்கள் 1.6 லிட்டர் இன்ஜின்களுடன் 120hp/300Nm திறன் கொண்டதாக இருக்கும். இவை இரண்டு வீல் அல்லது ஆல்-வீல் ஆப்சன்களுடன், ஹோண்டா சிஆர்-வி-கள் 9 ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்மிஷன் சிஸ்டம்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா பிஆர்-வி கார்களுக்கு 1.15 லட்சம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா பிஆர்-வி வகைகள் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கிறது. இந்த் கார்கள் 1.15 லட்சம் வரை சலுகை பெறலாம். இத்துடன் எக்ஸ்சேன்ஜ் போனஸ்களும், கூடுதலாக உதிரி பாகங்கள் மற்றும் கேஸ் டிஸ்கவுன்ட்களும் கிடைக்கும்.

ஹோண்டா சிவிக் கார்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா சிவிக் கார்கள் ஸ்கோடா மற்றும் ஹூண்டாய் எலன்ட்ரா கார்களுக்கு போட்டியாக இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு 80 ஆயிரம் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா சிட்டி கார்களுக்கு 67 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான மிட்-சைஸ் செடான்களாக ஹோண்டா சிட்டி இருந்து வருகிறது. இந்த கார்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 67 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம். அனைத்து வகைகளுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.

ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு 55 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா ஜாஸ் பெட்ரோல் வெர்சன்கள் 5 ஸ்பீட் மெனுவல்/சிவிடி சிஸ்டம்களுடன் கிடைக்கிறது. டீசல் வகைகள் 6 ஸ்பீட் மெனுவல் டிரான்மிஷன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு 55 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா டபிள்யூஆர்-வி கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா ஜாஸ் மாடல்களின் கிராஸ்ஓவர் வெர்சன்களாக வந்துள்ள டபிள்யூஆர்-வி வகைள் சிவிடி ஆப்சன்கள் இருக்காது. ஹோண்டா டபிள்யூஆர்-வி கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா அமோஸ் கார்களுக்கு 47 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

ஹோண்டா அமோஸ் ஸ்டான்டர் வெர்சன்கள் விரிவு படுத்தப்பட்ட இலவச வாரண்டிகள் 47 ஆயிரம் ரூபாய் வரை சலுகையில் ஒரு பகுதியாக இருக்கும். ஹோண்டா எக் எடிசன்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை சலுகை பெறலாம்

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)