Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ரிவோல்ட் ஆர்.வி 400 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மானேசர் ஆலையில் இருந்து வருகின்ற 8ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்

ரிவோல்ட் ஆர்.வி 400 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மானேசர் ஆலையில் இருந்து வருகின்ற 8ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்

ரிவோல்ட் ஆர்.வி 400 என்பது ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதல் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் குர்கானில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலத்தில் இருந்து வெளியிடப்பட உள்ளது. ரிவோல்ட் மோட்டார் நிறுவனம், மைக்ரோ மேக்ஸ் இன்போமேட்டிக்ஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான முன்னாள் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம், தனது முதல் ஆர்.வி 400 மோட்டார் சைக்கிள்களை மானசர் ஆலையில் இருந்து தயாரித்து வரும் 28ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான விலைகளை, வரும் 28ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மானேசவர் தயாரிப்பு ஆலை, ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்களை முதற்கட்டமாக தயாரிக்க உள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள், முதல் முறையாக இந்தாண்டு ஜூன் மாதத்தில் வெளியிட்டப்பட்டது. இதற்காக, இந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. ரிவோல்ட் ஆர்.வி 400 என்ட்ரி லெவல் பயணிகள் எலக்ட்ரிக் வாகனங்கள் சில தனித்துவமிக்க வசதிகளுடன் இருக்கும். மேலும், இந்த எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ், சிந்தடடைஸ் சவுண்ட்கள் மற்றும் உள்ளூர் நெட்வொர்கில் மாற்றி கொள்ளத்தக்க வகையிலான பேட்டரிகளுடன் இருக்கும்.

ரிவோல்ட் இன்டலிகார்ப் நிறுவனம், ரிவோல்ட் ஆர்.வி 400-களுக்கான புக்கிங்கை கடந்த ஜூன் 25ம் தேதி தொடங்கியது. இந்த புக்கிங் தொடங்கிய 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் 2,500 ப்ரீ புக்கிங்கை பெற்றுள்ளது. இந்த நிறுவனம், இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான ப்ரீ புக்கிங்கை நிறுவன இணையத்தளம் மற்றும் அமேசான் இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

ரிவோல்ட் இன்டலிகார்ப்பின் ரிவோல்ட் ஆர்.வி 400 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை ப்ரீ புக்கிங் செய்ய 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிவோல்ட் ஆர்.வி 400 மோட்டார் சைக்கிள்களில் எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளது. ரிவோல்ட் ஆர்.வி 400 -கள் சிங்கிள் சார்ஜ் செய்த நிலையில் எக்கோ மோடில் 156 km (ARAI- சர்டிபிகேட் பெற்றுள்ளது) பயணிக்கும். சிட்டி மோடில் 80-90 கிலோ மீட்டரும், ஸ்போர்ட்ஸ் மோடி-ல் அதன் ஸ்டைலை பொருத்து டாப் ஸ்பீடில் 85 kmph பயணிக்கும்.

ரிவோல்ட் ஆர்.வி 400-களில் கூடுதலாக தனிப்பட்ட மொபைல் அப்ளிகேஷன்கள் முழுமையான வசதிகளுடன் கிடைக்கிறது. இந்த வசதிகள் சேட்டிலைட் நேவிகேஷன், பைக் இண்டிகேட்டர், ரியல் -டைம் பைக் இன்பர்மேஷன், பாதுகாப்புக்காக ஜியோ பென்சிங், டோர்ஸ்டெப் பேட்டரி டெலிவரி, பேட்டரி மாற்றப்பட்டதற்கான ஆன்லைன் பேமென்ட் கேட்வே மற்றும் திருட்டை தவிர்க்கும் வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். ரிவோல்ட் ஆர்.வி 400-கள் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை 80 ஆயிரம் ரூபாய் முதல் 90 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் இருக்கலாம் என்று தெரிகிறது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)