Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

மிகவும் மலிவான விலையில் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 1.12 லட்சம்

மிகவும் மலிவான விலையில் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 1.12 லட்சம்

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புதிய வெர்சன்களான ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக்களை 1.12 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் பிராண்டின் மலிவு விலை பைக்களாக வெளி வந்துள்ள இந்த பைக்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350-பைக்கள், ஸ்டைல் அப்டேட்களுடன் புதிய கலர் ஆப்சன்களுடன் சிறந்த தோற்றத்துடன் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய வகைகள், வழக்கமான புல்லட் 350 வகைகளை விட 11 ஆயிரம் ரூபாய் விலை குறைவாகவும், புல்லட் 350 ES பைக்களை விட 22 ஆயிரம் ரூபாய் குறைவாகவும் இருக்கிறது. புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 வகைகளுக்கான புக்கிங்கள், நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய வகை ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350-களில், சில ஸ்டைல் மாற்றங்கள் மற்றும் விலையை குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டுள்ளது. இதில் உள்ள பெட்ரோல் டேங்க்கள் மூன்று புதிய கலர் ஸ்கீமில், அதாவது புல்லட் சில்வர், சபையர் ப்ளூ மற்றும் ஓனிக்ஸ் பிளாக் கலரில் கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 இஎஸ் வகைகள் ஜெட் பிளாக், ரீகல் ரெட், ராயல் ப்ளூ கலர் ஆப்சன்களிலும், கூடுதலாக மெரூன் சில்வர் மற்றும் சிலவர் வகைகளாகவும் கிடைக்கிறது. முற்றிலும் பிளாக் வெர்சன்கள் புதிய கலர்களுடன், பிளாக் பினிஷ் இன்ஜின்களுடன் பாடி பேனல்களில் குறைந்த அளவிலான குரோம் பயன்பாடுகளையும் கொண்டிருக்கும்.

மேலும் நீங்கள் ராயல் என்ஃபீல்ட் லோகோ ஸ்டிகர்களை பெட்ரோல் டேங்க்களில் காணலாம். அதிக விலை கொண்ட மாடல்களில் இந்த லோகோ 3டி பேட்ஜ்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதில் உள்ள ஸ்போக்டு வீல்கள், குரோம்களுக்கு பதிலாக பிளாக் டிரிட்மென்ட் செய்யப்பட்டுள்ளது. மற்ற உபகரணங்கள், நீளமான சீட், தட்டையான ஹேண்டில்பார், இன்ஸ்டுரூமென்ட் கன்சோல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

மெக்கனிக்கல் ரீதியாக பார்க்கும் போது, ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக்கள் 346 சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்களுடன், 19 bhp மற்றும் 28 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இந்த மோட்டார் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பைக்களின் முன்புறத்தில் டெல்ஸ்கோபிக் போர்க்கள், பின்புறத்தில் டூவின் ஷாக்ஸ் போன்றவை சஸ்பென்சன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்களும், பின்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் களுடன் கூடிய டிரம் யூனிட்களும் பொருத்தப்பட்டுள்ளது.

மிகவும் மலிவு விலை கொண்ட ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக்கள், இந்த பிராண்ட் அதிகளவில் விற்பனை செய்ய, தடுமாறி கொண்டு இருக்கும் நிலையில் வெளி வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை குறைந்து, 50 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதனால், இந்த பிராண்ட் ஆட்டோமொபைல் துறையில் தங்கள் விற்பனையை மேம்படுத்த கடும் பாடுபட்டு வருகிறது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள புதிய வகைகள் இந்த நிறுவனத்தின் விற்பனையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறைந்துள்ளதுடன் ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக்களை இதுவரை இல்லாத வகையில், வாடிக்கையாளர்கள் எளிதில் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)