Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்பே மாருதி சுசூகி XL6 காரின் புக்கிங் துவக்கம்

அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்பே மாருதி சுசூகி XL6 காரின் புக்கிங் துவக்கம்

மாருதி சுசூகி நிறுவனம் விரைவில் வெளியாக உள்ள XL6 பிரீமியம் எம்பிவிகளுக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளது. இந்த கார்களை 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். மாருதி சுசூகி நிறுவனம் இந்த கார்களுக்கான புக்கிங்கை ஆன்லைனிலும் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் இந்த காரை, வாடிக்கையாளர் மாருதி நெக்ஸா இணையத்திலும், நெக்ஸா அப்ளிகேஷன்களிலும் புக்கிங் செய்து கொள்ளலாம். மாருதி XL6 கிராஸ்ஓவர் எம்பிவிகள் அடிப்படையில் எர்டிகா போன்று இருக்கும். இவை எர்டிகா போன்று ஹார்டேக் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்களில் சில காஸ்மெடிக் அப்டேட்கள் செய்யப்பட்டு எர்டிகாவில் இருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள், அதிகளவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட முன்புற பகுதிகள், ஸ்போர்டிங்களுடன் கூடிய புதிய கிரில், சில கிராஸ்ஓவர்களுடன் ஸ்டைலிங் பிட்கள், போல்ட் கிளேடிங்கள் பெரியளவிலான ஏர் டம் மற்றும் ஸ்கீட் பிளேட்கள் இரண்டு புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது புதிய தலைமுறை எர்டிகா போன்று பிரிமியம் தோற்றத்தை தக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

மாருதி சுசுகி இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நிர்வாக இயக்குநர் சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், மாருதி சுசூகி நிறுவனம், எப்போதும் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. XL6 கார்கள் பிரத்தியோகமாக 6 சீட் கொண்ட பிரீமியம் எம்பிவிகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது நெக்ஸா வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. XL6-களை நெக்ஸாவின் முதல் பிரீமியம் எம்பிவியாகவும், அதிக ஆடம்பரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. XL6-கள் நெக்ஸா தயாரிப்புகளின் புபோர்ட்போலியோவை உறுதி செய்வதுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் பல்வேறு தயாரிப்புகளை வழங்கும் வகையில் இருக்கும். எங்கள் புதிய அறிமுகத்தால் வாடிக்கையாளர்கள் புதிய அனுபவத்தை பெறுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம் என்றார்.

காரின் உட்புறத்தில் நடுவரிசையில் உள்ள கேப்டன் சீட்களுடன் கூடிய ஏழு சீட் கொண்ட லேஅவுட் இந்த கார்களை, எர்டிகா மாடல்களின் இருந்து வேறுபடுத்தி காட்டும். மற்ற வசதிகள் அனைத்தும் எர்டிகாவில் உள்ளது போன்றே இருக்கும். இவை ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ சிஸ்டம்களுடன் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, குரூஸ் கண்ட்ரோல் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை உள்ளடக்கியதாக இருக்கும்.

புதிய மாருதி சுசூகி XL6-கள் எர்டிகா மாடல்களில் உள்ள அதே பவர்டிரெயின்களை பகிர்ந்து கொண்டுள்ளன. மேலும் இதில், புதிய பிஎஸ்6 விதிக்குட்பட்ட 1.5 லிட்டர் K15 பெட்ரோல் மோட்டார்களுடன் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைபிரிட் வாகனங்களுக்கான சுசூகி (SHVS) டெக்னாலஜி மற்றும் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இருக்கும். பெட்ரோல் மாடல்களில் ஆப்சனலாக 4 ஸ்பீட் ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்டர்கள் இருக்கும்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)