டிரம் பிரேக், அலாய் வீல் கொண்ட சுசூகி அக்சஸ் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை ரூ. 59,891

டிரம் பிரேக், அலாய் வீல் கொண்ட சுசூகி அக்சஸ் ஸ்கூட்டர் அறிமுகம்; விலை ரூ. 59,891

சுசூகி மோட்டார் சைக்கிள் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதிகளவில் விற்பனையாகும் 125 cc ஸ்கூட்டர்களை, டிரம் பிரேக் மற்றும் அலாய் வீல்களுடன் வெளியிட்டுள்ளது. அலாய் வீல் ஆப்சன்களுடன் கூடிய ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதை தொடர்ந்தே இந்த புதிய வகை ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது என்று சுசூகி மோட்டர் சைக்கிள் இந்தியா தெரிவித்துள்ளது. அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக்களுடன் கூடிய சுசூகி அக்சஸ் ஸ்கூட்டர்கள் 59 ஆயிரத்து 891 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சுசூகி அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிசன்கள், அலாய் வீல்கள் மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் கொண்டவை 61 ஆயிரத்து 788 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் தேவாஷிஷ் ஹண்டா தெரிவிக்கையில், அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக்களுடன் கூடிய சுசூகி அக்சஸ் 125-களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அலாய் வீல்கள் கொண்ட ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் அதிகரித்து உள்ளதை தெரிந்து கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என்பதை மனதில் கொண்டே புதிய சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டர்கள் அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் இந்தியாவில் பேம்லி ஸ்கூட்டர்களாக இருந்து வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வகைகள், எங்கள் சுசூகி குடும்பத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்று நம்புகிறோம் என்றார்.

சுசூகி அக்சஸ் 125-களில் கூடுதலாக சென்ட்ரல் லாக்கிங் மற்றும் தனித்துவமிக்க பாதுகாப்பு ஷெட்டர்களும் உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் நான்கு கலர் ஆப்சன்களில் அதாவது பெர்ல் சுசூகி டீப் ப்ளூ, கிளாஸ் ஸ்பார்க்ள் பிளாக், மெட்டாலிக் மேட் பேப்ரிகேஷன் கிரே அண்ட் பெர்ல் மிராஜ் ஒயிட் கலர்களில் கிடைக்கிறது. சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டர்கள் இந்தியாவில் சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் அதிகளவில் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர்கள் நிறுவனத்தின் மாத விற்பனையில் 90 விழுக்காடாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சுசூகி அக்சஸ் 125-கள் கூடுதலாக 125cc பிரிவில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டராகவும் இருக்கிறது. சுசூகி நிறுவனம் இந்த பிரிவில் பர்மன் ஸ்ட்ரீட்-களையும் விற்பனை செய்து வருகிறது.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)