Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

விலை குறைவான புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் பைக்கள் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 64,000

விலை குறைவான புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் பைக்கள் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 64,000

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் என்ட்ரி லெவல் 125 cc வெர்சன் பஜாஜ் பல்சர் குடும்பத்தை சேர்ந்த பைக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்களை, இந்த நிறுவனம் பஜாஜ் பல்சர் 125 நியான் என்று அழைக்கிறது. பல்சர் 125 நியான்கள் இரண்டு வகைகளில், கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் டிரம் பிரேக் வெர்சன்கள் 64 ஆயிரம் ரூபாய் விலையிலும், முன்புற டிஸ்க் பிரேக் வகைகள் 66 ஆயிரத்து 618 ரூபாய் விலையிலும் கிடைகிறது.

புதிய பல்சர் 125 நியான்கள் பஜாஜ் பல்சர் 150 நியான்களுடன் வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 68 ஆயிரத்து 250 ரூபாயாகும். பல்சர் 125 நியான்கள் மூன்று கலர்களில் அதாவது, நியான் ப்ளூ (மேட் பிளாக் பாடி), சோலார் ரெட் மற்றும் பிளாட்டினம் சில்வர் ஆகிய கலர்களில் கிடைகிறது.

இதுகுறித்து பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் சரங் கனடே, பல்சர் 125 cc வகைகளை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய பல்சர் 125 நியான்கள் புதிய பிரிவில் பிரிமியம் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவை ஸ்போர்ட்ஸ் பைக்களாக இருப்பதுடன் அளவுக்கு அதிகமான திறன், ஸ்டைல் மற்றும் திரில்களுடன் கவர்ந்திழுக்கும் விலை கொண்டதாக இருக்கிறது என்றார்.

பல்சர் 125 நியான்கள் 125cc DTS-i இன்ஜின்களுடன் 11.8 bhp ஆற்றலில் 8,500 rpm-லும், 11 Nm பீக் டார்க்கில் 6,500 rpm-லும் இயங்கும். இதில் உள்ள கவுண்டர் பேலன்ஸ் இன்ஜின் அதிக வேகத்திலும் ஸ்மூத்தாக இயக்க செய்யும். பல்சர் 125 நியான்-கள் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை, கியர் மற்றும் கிளட்ச்களின் இயக்கத்தை சீராக்க உதவும். புதிய பல்சர் 125 நியான்-களின் எடை 140 kg -ஆக இருக்கும்.

பல்சர் 125 பைக்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பிரேகிங் சிஸ்டம்கள், 125 cc மற்றும் அதற்கு மேற்பட்ட பைக்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 150cc திறன் கொண்ட பைக்களில் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன காரணமாகவே விலை உயர்ந்துள்ளது.

வரும் 2020 ஏப்ரல் மாதம் முதல் அறிமுகமாக உள்ள பிஎஸ்6 எமிஷன் விதிகளின் படி, அனைத்து டூவிலர்க்ளும் எரிபொருள்-இன்ஜெக்சன்களுடன் மாற்றப்பட உள்ளதாலும் விலையும் அதிகரித்து உள்ளது. இந்த விதிகள் பல்சர் 150 பைக்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலான விலையுடன் இருக்கும். இருந்தாலும் பஜாஜ் பல்சர் டிஎன்ஏ சிக்னேச்சர்கள் தொடர்ச்சியாக வெளியாகுமா என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)