Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் கார்கள் ஆகஸ்ட் 28 முதல் விற்பனைக்கு அறிமுகம்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் கார்கள் ஆகஸ்ட் 28 முதல் விற்பனைக்கு அறிமுகம்

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் கார்கள் வரும் 28ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த 7 சீட் கொண்ட கார்களுக்கான புக்கிங் இந்த வாரத்தில், அதாவது 17ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதுகுறித்து ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் புதிய சப் 4 மீட்டர், 7 சீட்டர் ஆகிய இரண்டையும் ஆன்லைன் அல்லது இந்தியாவில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ டீலர் ஷிப்களில் டோக்கன் அட்வான்சாக 11 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இவை முதல் ட்ரைபர் அசெம்பளி லைன்களாக இருக்கும். இன்று முதல் இந்த கார்களை இந்தியாவில் உள்ள 350-க்கும் மேற்பட்ட அனைத்து டீலர்ஷிப்களிலும் டிஸ்பேச் செய்ய தொடங்கி விட்டது.

ரெனால்ட் இந்தியா ஆபரேஷன்ஸ் நிறுவன, இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கட்ரம் மாமிலப்பள்ளே தெரிவிக்கையில், ரெனால்ட் குழுமத்தின் முக்கிய மார்க்கெட்டாக இந்தியா இருந்து வருகிறது. நாங்கள் இந்தியாவில் எங்கள் சேவையை விரிவு படுத்த தேவையான தெளிவான திட்டங்களை கொண்டிருக்கிறோம். இந்த திட்டம் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் எங்கள் தயாரிப்புகளின் விற்பனையை இரட்டிப்பாக்கி ஆண்டுக்கு இரண்டு லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய உள்ளோம். எங்கள் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டத்தில் ரெனால்ட் ட்ரைபர் முக்கிய பங்கு வகிக்கும். இவை புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்குவதுடன் மார்க்கெட்டில் இதற்கான இடங்களை நிறைவு செய்யும் வகையில் இருக்கும். ரெனால்ட் ட்ரைபர்கள் பெரியளவிலான வாடிக்கையாளர்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பி பிரிவை உருவாக்கும் வகையில் இருக்கும் என்றார்.

ரெனால்ட் ட்ரைபர்-கள் CMF-A பிளாட்பார்மில் கிவிட் போன்றை ஆட்டோ தயாரிப்பு நிறுவனத்தின் லைன்-அப்களாக வெளியாகியுள்ளது. இதன் நீளம் 3,990 mm, அகலம் 1,739 mm மற்றும் உயரம் 1,643 mm கொண்டதாக இருப்பதுடன் இதன் வீல்பேஸ் 2,636 mm அளவில் இருக்கும். ஏழு சீட்டர், எம்பிவிகளை அடையாளம் காட்டும் வகையில் இருக்கும். பிரான்சு நாட்டை சேர்ந்த ஆட்டோ தயாரிப்பு நிறுவனம், இந்த கார்களை தனித்துவமான டுவிஸ்ட்களுடன் பிரிமியம் ஹாட்ச்பேக்கள் என்று அழைக்கிறது.

மேலும், இதில் இந்த பிரிவில் தயாரிக்கப்பட்ட முதல் மாடுலர் மூன்று வரிசை கொண்டதாக இருப்பதுடன், இந்த சீட்களை முழுமையாக மடக்கவோ அல்லது முழுமையாக அகற்றி விடவோ முடியும். இதை எளிதாகவும் வேகமாகவும் எந்த டூல்கள் இல்லாமலும் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி இதை 6 சீட் கொண்டதாகவோ அல்லது 5 சீட் கொண்டதாகவோ மாற்றி கொள்ள முடியும். இருந்தாலும், இரண்டாவது வரிசை சீட்களில் முதல் முறையாக வசதிக்கு ஏற்ப ஸ்லைடிங் பங்க்ஷன்களை கொண்டதாகவும் இருக்கும்

ரெனால்ட் ட்ரைபர்களில் கூடுதலாக முழுமையாக வசதிகள் லோடு செய்யப்பட்டுள்ளன. அவை, புரொஜெக்டர் ஹெட்லேம்கள், எல்இடி டே டைம் ரன்னிங் லைட்கள், அலாய் வீல்கள் மற்றும் வெளிப்புறமாக குரோம் டீடெயில்களுடன் இருக்கும். இந்த காரின் கேபின்கள் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் கூடிய நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு கனெக்டிவிட்டி கொண்டதாக இருக்கும்.

ரெனால்ட் ட்ரைபர்கள், வாடிக்கையாளர்கள் புரிந்து கொண்டு அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ற வகையிலும், மேம்படுத்தப்பட்ட இஞ்சினியரிங் திறனுடன், டீப் டிசைன் அனுவம் மற்றும் உறுதியான தயாரிப்புகளுக்கான போட்டியுடன் இருக்கும். ரெனால்ட் ட்ரைபர்களில், ரெனால்ட் நிறுவனம் ஒருங்கிணைந்த டிசைன்களுடம், நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான புக்கிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிகளவிலான வாடிக்கையாளர்கள் ரெனால்ட் குடும்பத்தில் இணைவார்கள் என்று நம்புகிறோம் என்றும் வெங்கட்ரம் மாமிலப்பள்ளே தெரிவித்துள்ளார்.

 

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)