Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார் வகைகள் குறித்த விரிவான தகவல் வெளியீடு

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார் வகைகள் குறித்த விரிவான தகவல் வெளியீடு

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார்கள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 4.99 லட்சம் ரூபாய் முதல் 7.99 லட்சம் ரூபாய் விலையில் (இந்தியாவில் எக்ஸ்ஷோரூம் விலை) கிடைக்கிறது. புதிய தலைமுறை மாடல்கள் இந்தியாவில், முந்தைய தலைமுறை மாடல்களான ஹூண்டாய் கிராண்ட் i10-களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்-கள் நான்கு முக்கிய வகையாக அதாவது எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா வகைகளில் கிடைக்கிறது. இந்த நான்கு வகைகளுக்கும் 10 வெவ்வேறு வகையாக, அதன் இன்ஜின், டிரான்மிஷன் ஆப்சன் மற்றும் டூயல் டோன் கலர் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் வகைகள் வாரியாகவும், வசதிகளை அடிப்படையாக கொண்டு விரிவாக இங்கே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் – எரா:

வழக்கமான கிராண்ட் i10-களை விட புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் எரா அடிப்படை வகைகளில் அதிக உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும். வசதிகளை பொருத்தவரை, இந்த காரில் சில்வர் சரவுண்ட்களுடன் கூடிய ரேடியேட்டர் கிரில், பாடி கலரிலான பம்பர், ஹாலோஜன் ஹெட்லேம்கள் மற்றும் 14 இன்ச் ஸ்டீல் வீல்களுடன் இருக்கும். எரா கார்களின் கேபின்கள் டூயல்-டோன் கிரே பிளாக் இன்டீரியர், முன்புற மற்றும் பிளாக் டோர் மேப் பாக்கெட்கள் மற்றும் முன்புற ரூஃப் லேம்ப்களுடன் இருக்கும்.

மற்ற வசதிகள், எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், மெனுவல் ஏசி, முன்புற பவர் விண்டோகள், முன்புற பவர் அவுட்லெட் மற்றும் பேட்டரி சேவர் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதுமட்டுமின்றி இந்த கார்களில் இன்பர்மேடிவ் இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்களுடன் கியர் ஷிஃப்ட் இன்டிக்கேட்டர், டோர் வார்னிங், சர்வீஸ் ரீமைண்டர் மற்றும் பல வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

பாதுகாப்பு வசதிகளாக, இந்த காரின் இன்ஜினில் இம்மொபைலைசர், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டூயல் முன்புற ஏர்பேக்ஸ், டிரைவர் மற்றும் பயணிகளுக்கான சீட் பெல்ட், பாதசாரிகள் மற்றும் லோடு லிமிட்டர், EBD உடன் கூடிய ABS, டிரைவர் & பயணிகள் சீட் பெல்ட் ரீமைண்டர் மற்றும் ஸ்பீட் அலர்ட் சிஸ்டம்களும் இடம் பெற்றுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் – மேக்னா:

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார்களின் மேக்னா வகைகள், கிளாசி பிளாக் கிரில்களுடன் ஹைபர் சில்வர் சரவுண்ட்கள், எல்இடி டே டைம் ரன்னிங் லேம்ப்கள், 14 இன்ச் ஸ்டீல் வீல்கள் கவர்களுடன் இருக்கும். மேலும் இதில் பாடி கலரிலான மிரர்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள், ரூஃப் ஆண்டனா மற்றும் வெளிப்புற மிரர்களில் டேர்ன் இன்டிக்கேட்டர்கள் (ஏஎம்டி வகையாகவும் இருக்கும்).

இந்த காரின் கேபின்களில் பயணிகள் சைடு சீட் பேக் பாக்கெட், 2 டின் இண்டகிரேட்டட் ஆடியோகளுடன் கூடிய AM/FM, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஸ்டீயரிங்’ மவுண்டட் கண்ட்ரோல்கள் ப்ளூடூத் மற்றும் ஆடியோ, ஐ-ப்ளூ (ஆடியோ ரிமோட் அப்ளிகேஷன்), முன்புறம் மற்றும் ரியர் ஸ்பீக்கர்கள் மற்றும் USB போர்ட் கனெக்டிவிட்டி கொண்டதாக இருக்கும்.

மற்ற வசதிகள், கீலெஸ் என்ட்ரி, டில்ட் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஸ்டீயரிங், ரியர் ஏசி வென்ட்கள், ரியர் பவர் விண்டோகள், ஆட்டோ டோவ்ன் பவர் விண்டோ (டிரைவர்களுக்கு மட்டும்), எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய மற்றும் மடங்கும் தன்மை கொண்ட ORVM-கள், ரியர் பவர் அவுட்லெட், முன்புற USB சார்ஜர், டிரைவர் சீட் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, பயணிகள் வெனிட்டி மிரர் மற்றும் ரியர் பார்சல் டிரேகளுடன் இருக்கும்.

பாதுகாப்பு வசதிகள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், டே & நைட் நேரத்திலும் காரின் இன்சைடு ரியர்வியூ மிரர், ஹெட்லேம் எஸ்கார்ட் சிஸ்டம், ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டோர் லாக் மற்றும் மோதுவதை உணர்ந்து கொண்டு டோரை அனலாக் செய்யும் வசதியும் இடம் பெற்றுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் – ஸ்போர்ட்ஸ்:

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் வகைகள், புரொஜெக்டர் லேம்ப்களுடன் கூடிய ஏஎம்டி மற்றும் டூயல்-டோன் ஆப்சன், 14 இன்ச் கன்மெட்டல் பினிஷ் அலாய்கள்(எம்டி & ஏஎம்டி) அல்லது 15 டைமண்ட்-கட் அலாய்களுடன் (டூயல் டோன் வகைகள்) ரூஃப் ரெயில், திமிங்கில துடுப்பு ஆண்டனா, பி பில்லர் மற்றும் விண்டோ லைன் பிளாக் அவுட் டேப் மற்றும் வெளிப்புற மிரர்களில் டேர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் கேபின்கள் முற்றிலும் பிளாக் இன்டீரியர்களுடன் கூடிய கலர் இன்சர்ட்கள் மற்றும் லெதர் வார்ப் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல்கள் மற்றும் டூயல்-டோன் வகையாக இருக்கும். இதுமட்டுமின்றி இந்த கார்களில் 5.2 இன்ச் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்களுடன் மல்டி இன்பர்மேஷன் டிஸ்பிளேவும் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் வகைகளில் கூடுதலாக 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்கள் உள்ளன. இவை ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ, ஆர்க்மிஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வாய்ஸ் ரீகனேகனேசன் பங்க்ஷன்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல்களும் உள்ளன.

ஹூண்டாய் நிறுவனம், இதில் வயர்லெஸ் போன் சார்ஜர்களுடன் டூயல்-டோன் ஆப்சன் மற்றும் கூடுதலாக முழுவதும் ஆட்டோமெடிக்காக இயங்கும் கிளைமேட் கண்ட்ரோல், எக்கோ கோட்டிங், எலக்ட்ரிக்கல் முறையில் மடங்கும் தன்மை கொண்ட ORVM-கள் மற்றும் குளிரூட்டப்பட்ட கிளைவ்பாக்ஸ்களும் உள்ளன.

பாதுகாப்பு வசதிகளாக, ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் வகைகளில், புரொஜெக்டர் பனிக்கால விளக்குகள், ரியர் கேமராகல்லுடன் கூடிய ஆடியோ டிஸ்பிளே, ரியர் டீபாகர் போன்றவைகளும் இடம் பெற்றிருக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் – அஸ்டா:

டாப்-எண்ட் அஸ்டா வகைகளில் இடம் பெற்றுள்ள வசதிகள், புரொஜெக்டர் ஹெட்லேம்கள் மற்றும் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய்கள் வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளது. இத்துடன் குரோம் அவுட்சைடு ஹேண்டில்கள் மற்றும் ரியர் குரோம் கார்னிஷ்களை கொண்டதாக இருக்கும். இந்த வகைகளில் கேபின்கள் லெதர் வார்ப்டு ஸ்டீயரிங்களுடன் குரோம் பினிஷ் செய்யப்பட்ட பார்கிங் லிவர் டிப்களுடன் இருக்கும். இந்த கார்களில் வயர்லஸ் போன் சார்ஜர், ஸ்மார்ட்கீ-களுடன் கூடிய புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தக்க வகையிலான ரியர் ஹெட் ரெஸ்ட்கள், ரியர் வைப்பார் வாஸ்சர் மற்றும் லக்கேஜ் லேம்ப்களும் இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/news/cars/hyundai-grand-i10-nios-variants/

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)