Plz do abide to our Terms & Condition:

  • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
    
  • To post a Link directly use instead Bookmark.
    
  • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

Group activity

 • புறநானூறு - 312 (காளைக்குக் கடனே!)
  பொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார். - புறநானூறு, 312.
 • புறநானூறு - 311 (சால்பு உடையோனே!)
  வீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். - புறநானூறு, 311.
 • புறநானூறு - 310 (உரவோர் மகனே!)
  பகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி இறந்தான். - புறநானூறு, 310.
 • புறநானூறு - 309 (என்னைகண் அதுவே!)
  இரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா வீரர்களுக்கும் எளிதாகும். - புறநானூறு, 309.
 • புறநானூறு - 308 (நாணின மடப்பிடி!)
  சிற்றூர் மன்னனின் சிறிய இலைகளையுடைய வேல், பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நெற்றியில் பாய்ந்து தங்கியது. - புறநானூறு, 308.
 • புறநானூறு - 307 (யாண்டுளன் கொல்லோ!)
  போர்க்களத்தில் வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்து தன்னைத் தாக்க வந்த களிற்றைக் கொன்று தானும் இறந்தான். - புறநானூறு, 307.
 • புறநானூறு - 306 (ஒண்ணுதல் அரிவை!)
  மறக்குலப் பெண் ஒருத்தி நாள்தோறும் தன் முன்னோர்களின் நடுகல்லுக்குச் சென்று, தம் கணவன் போரில் வெற்றி பெறவேண்டும் என்றும், தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர்கள் வரவேண்டும் என்றும், தன் அரசன் போர்புரிவதற்கு பகைவர்கள் இருக்க வேண்டும் என்றும்...
 • புறநானூறு - 305 (சொல்லோ சிலவே!)
  ஒருவன் ஒருவேந்தனிடம் சென்று ஒரு சில சொற்களே சொல்லி, நடக்கவிருக்கும் போரை நிறுத்தியதை இப்பாடலில் புலவர் மதுரை வேளாசான் கூறுகிறார். - புறநானூறு, 305.
 • புறநானூறு - 304 (எம்முன் தப்பியோன்!)
  கொல்லப்பட்டவனின் தம்பி, கொன்றவனோடும் அவன் தம்பியோடும் போரிடுவதற்காக வருகிறான் என்ற செய்தியைக் கேட்டுப் பகையரசனின் பாசறையில் உள்ளவர்கள் நடுங்குகிறார்கள். - புறநானூறு, 304.
 • புறநானூறு - 303 (மடப்பிடி புலம்ப எறிந்தான்!)
  போர்க்களத்தில் வீரன் ஒருவனின் மறச் செயல்களைக் கண்ட புலவர், இப்பாடலில் தாம் கண்ட காட்சியைக் குறிப்பிடுகிறார். - புறநானூறு, 303.
 • புறநானூறு - 302 (வேலின் அட்ட களிறு?)
  வெடிவேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே; பூவே விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட; நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
 • புறநானூறு - 301 (அறிந்தோர் யார்?)
  பல் சான்றீரே! பல் சான்றீரே! குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே! முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்; ஒளிறுஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்;
 • புறநானூறு - 300 (எல்லை எறிந்தோன் தம்பி!)
  தோல்தா தோல்தா என்றி ; தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்; நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன் பேரூர் அட்ட கள்ளிற்கு ஓர்இல் கோயின் தேருமால் நின்னே
 • புறநானூறு - 299 (கலம் தொடா மகளிர்!)
  பருத்தி வேலிச் சீறூர் மன்னன் உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின் தண்ணடை மன்னர் தாருடைப் புரவி அணங்குஉடை முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே
 • புறநானூறு - 298 (கலங்கல் தருமே!)
  எமக்கே கலங்கல் தருமே; தானே தேறல் உண்ணும் மன்னே; நன்றும் இன்னான் மன்ற வேந்தே; இனியே நேரார் ஆரெயில் முற்றி வாய்மடித்து உரறிநீ முந்துஎன் னானே
 • புறநானூறு - 297 (தண்ணடை பெறுதல்!)
  பெருநீர் மேவல் தண்ணடை எருமை இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின் பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக் கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க் கோள்இவண் வேண்டேம் புரவே; நார்அரி
 • புறநானூறு - 296 (நெடிது வந்தன்றால்!)
  வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் எல்லா மனையும் கல்லென் றவ்வே வெந்துஉடன்று எறிவான் கொல்லோ? நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?
 • புறநானூறு - 295 (ஊறிச் சுரந்தது!)
  கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண் வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித் தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின் வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி வாடுமுலை ஊறிச் சுரந்தன ஓடாப்...
 • புறநானூறு - 294 (வம்மின் ஈங்கு!)
  வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக் கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக் குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து இறையும் பெயரும் தோற்றி நுமருள் நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்குஎனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்...
 • புறநானூறு - 293 (பூவிலைப் பெண்டு!)
  நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப் பிறர்மனை புகுவள் கொல்லோ? அளியள் தானே பூவிலைப் பெண்டே!