Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

Pages

    No pages created yet
    No bookmarks

    Highest Rating

        Wall

          This wall is empty

          • இந்தியாவில் தொழில்துறைகளில் முன்னனியில் இருப்பது ஆட்டோமொபைல் துறை என்றால் மிகையல்ல. இதனால் இந்தியாவில் பல கோடி பேர் பலனடைந்த வருகிறார்கள். ஆட்டோமொபைல் துறையால் மறைமுகமாக பல துறைகளும் இயங்கி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்து வருவதோடு பல லட்சம் பேர் வேலையின்றி தவிக்கும் இக்கட்டான சூழல் நிலவுகிறது.

            4 கோடி பேர்

            இந்திய உற்பத்தித் துறையில் சுமார் 45 சதவிகிதம் பங்களிப்பது ஆட்டோமொபைல் துறை தான் இதில் 4 கோடி பேர் இதனை சார்ந்து வாழ்கின்றனர். ஆனால் இன்றைய ஆட்டோமொபைல் துறையின் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இந்த ஒரு துறை மட்டும் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 7.5 சதவிகிதம் வரை பங்களித்து வருகிறது. இவ்வளவு பெரிய துறையிலேயே தொடர்ந்து வேலை இழப்புகள், வேலை இல்லா நாட்கள் தொடர்கதையாவது வருத்தமான செய்தியே.

            பாதிப்புள்ளாகும் பிற துறைகள்

            சில துறைகள் மற்ற துறைகளுடன் மறைமுகமாக ஒன்றினைந்த ஒன்றாக இருக்கும். அதே நிலைதான் ஆட்டோமொபைல் துறையும். ஆட்டோமொபைல் துறை பாதிப்புக்குளானால் ஆட்டொமெட்டிக்காக வீழ்ச்சியை சந்திக்கும், ஆம் அட்டொ மொபைல் வீழ்ச்சியால் இன்சுரன்ஸ், எரி பொருள் நிறுவனங்களில் ஆரம்பித்து Spare parts தயாரிக்கும் நிறுவனம் வரை இதன் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

            பதற வைக்கும் புள்ளி விபரங்கள்

            இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2019-ல் 20,04,932 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். செப்டம்பர் 2018-ல் 25,84,062 வாகனங்கள் விற்கப்பட்டது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை சுமார் 22.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்து இருக்கிறது. கனரக வாகனங்களை பொருத்தளவில் இந்தியாவில் செப்டம்பர் 2019-ல் லாரி போன்ற கன ரக வாகனங்கள் மொத்தம் 58,419 விற்க்கப்பட்டது. ஆனால் கடந்த செப்டம்பர் 2018-ல் 95,870 கண ரக வாகனங்களை விற்றார்களாம். நிறுவனங்கள் வெளியீட்டுள்ள புள்ளி விபரங்களின் படி 39% வீழ்ச்சி அடைந்திப்பதாக தெரிகிறது.

            பறிபோகும் வேலை

            இதன்விளைவாக நிறுவனங்கள் தொழிலாளர்களை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாருதி, அசோக் லைலாண்ட் போன்ற முன்னனி நிறுவனங்கள் அதன் செயல்படும் நாட்களை குறைத்து கொண்டதோடு ஒப்பந்த பணியாளர்களை வேலை விட்டு தூக்கி விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் தோராயமாக 10 லட்சம் வேலை இழக்க கூடும் என கூறப்படுகிறது.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/losing-jobs-as-indias-automobile-crisis/

          • இந்தியா சீன நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் இன்று சந்தித்தனர். சீன அதிபரின் தரைவழி பயணித்திற்காக ஹாங்கி 5 என்ற காரை பயன்படுத்துகிறார், இந்த கார் உலகளவில் பேமஸ்சான கார் என்று கூறப்படுகிறது. அதிக வசதிகளுக்கு இணையான பாதுகாப்பையும் இக்கார் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் வளம் வரும் ஹாங்கி 5 காரை காண பலர் ஆவலுடன் உள்ளனர். இந்த கார் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ…

            சீன அதிபர் ஜி ஜின்பிங் தான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அதிகாரப்பூர்வ காரையும் எடுத்து செல்வது வழக்கம். இதன்படி அவரது அதிகாரப்பூர்வ கார்கள் போயிங் 747 விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா? அதில் என்னென்ன வசதிகள் இடம் பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்….

            View source: https://www.autonews360.com/tamil/news/cars/chinese-president-xi-jinping-official-car-features/

          • ரிவோல்ட் நிறுவனம் சமீபத்தில் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் பைக்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆட்டொமொபைல் மார்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அக்டோபர் மாதத்தோடு முன்பதிவு நிறைவுபெற்ற நிலையில் தற்சமயம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான முன்பதிவுகள் நடந்து வருகிறது. இந்த மாடல் பைக்குகளில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் அறிமுகமாகிறது. முக்கியமானதாக கருதப்படுவது ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளின் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் சிம் கார்டு மூலமாக நேரடி இணைய வசதியை வழங்கும் வசதி கொடுக்கப்படுகிறது.

            வோடஃபோன் ஐடியாவோடு கைகோர்க்கும் ரிவோல்ட்

            இதனை சாத்தியப்படுத்த ரிவோல்ட் நிறுவனம் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. அதில் பாசிட்டிவான முடிவுகள் எட்டப்பட்டு இதனை நடைமுறை படுத்த இரு நிறுவனங்களும் தயாராகியுள்ளது. இதன்விளைவாக, ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளில் 4ஜி இணைய வசதி பெற முடியும்.இந்த இணைய வசதி மூலமாக பல்வேறு வசதிகளை ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் இணைய வசதிகளை பெற்று கொள்ளலாம்.

            சிறப்பம்சங்கள்

            வெறும் 4 மணிநேரத்திற்குள் முழுமையாக சார்ஜாகிவிடும் இந்த பைக்கின் பேட்டரி மூலம் அதிகம்பட்சம் 156 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த பேட்டரி கழட்டி மாட்டும் தன்மையுடன் இருக்கிறது. தேவைக்கு ஏற்றவாறு ஒரு பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு, மற்றொரு பேட்டரியை பயன்படுத்திக் கொள்ளலாம். சாதாரண 15A சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்ய 4 மணிநேரம் முழுமையாக தேவை. இணைய வசதிகளால் வாடிக்கையாளர்க்கு என்ன லாபம் என்று துறை சார்ந்த நிர்வாகிகளிடம் பேசினோம். இன்று இணைய வசதிகள் இருந்தால் எல்லா வற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பயணங்களின் போது இணைய வசதி மிகவும் அவசியமான ஒன்று. இந்த வசதியை அமல்படுத்துவது மூலமாக நேவிகேசன், சுற்றுசூழலின் நிலை, ட்ராபிக் போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

            மாத தவணையில்ம் ரிவோல்ட் பைக்குகள்

            புதிய ரிவோல்ட் ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக் ரூ 2,999 மாதத் தவணையிலும், ஆர்வி400 ஸ்டான்டர்டு மாடல் ரூ.3,499 மாதத் தவணையிலும், ஆர்வி400 பிரிமீயம் மாடல் ரூ.3,999 விலையிலும் கிடைக்கிறது.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/revolt-partners-with-vodafone-idea-for-4g-iot-connectivity-solutions/

          • கைனடிக் கிரீன் எனர்ஜி நிறுவனம், புதிய எலக்ட்ரிக் வாகனங்களான கைனடிக் சஃபார் ஸ்டார்-களை கடைசி மைல் டெலிவரிகளுடன் மிட்-ஸ்பீட் வாகன பிரிவில் என்டரி ஆகியுள்ளது. பிளே-லோடு திறன்களாக 400 kg-களுடன் புதிய எலக்ட்ரிக் மூன்று-சக்கர வாகனங்கள், முழுமையான ஸ்டீல் பாடிகளுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனங்கள், சரக்குகளை ஏற்றி செல்ல தேவையான அனைத்து அம்சங்களுடன், போக்குவரத்து நெருக்கடி நிறைந்த நகர சாலைகளில் பயணிக்கும் வகையில் compact size கொண்டது.

            2.20 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை புனேவில்) கிடைக்கும் கைனடிக் சஃபார் ஸ்டார் அரசு அறிவித்துள்ள FAME 2 திட்டத்தின் கீழ் மானியம் பெற தகுதி பெற்றதாக இருக்கும். இதுமட்டுமின்றி, லித்தியம் இயான் பேட்டரிகளின் விலைகளும் மானியம் கிடைக்கும்.

            புதிய சஃபர் ஸ்டார் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் அறிமுகம் குறித்து பேசுகையில், கைனடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொலிசன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுலாஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி தெரிவிக்கையில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான வாகனங்களை டெலிவரி செய்வதே எங்கள் நோக்கமாக உள்ளது. இந்த வாகனங்களை முதலில் இ-காமர்ஸ் மற்றும் எஃப்எம்சிஜி துறைகளுக்கு டெலிவரி செய்ய உள்ளோம். மாநகராட்சி கழிவு பொருட்கள் பொருட்கள் விநியோகம் மற்றும் நகர்ப்புற கழிவுகளை சேகரிப்பதில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் இந்த வாகனங்களுக்கு உள்ளது என்றார்.

            தொடர்ந்து பேசிய அவர், சுற்றுச்சூழலை கருத்து கொண்டு வாடிக்கையாளர்களை கிரீன் இவி வாகனங்களுக்கு மாற்ற நாங்கள் ஊக்குவிக்கிறோம். இவ்வாறு மாறுவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேமிப்பை உண்டாகும்.

            அதிகளவில் மாசுபடுத்தும் டீசல் இன்ஜின் கொண்ட மூன்று சக்கர வாகனங்களுடன் ஒப்பிடும் போது டீசல் இன்ஜின் வாகனங்களை பயன்படுத்தினால் ஆகும் செலவை கிலோ மீட்டருக்கு 3 ரூபாயாகும். இதுவே கைனட்டிக் சஃபார் ஸ்டார் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டால், எமிஷன் குறைந்த டெலிவரி சேவைகளை கிலோ மீட்டருக்கு 50 பைசா மட்டுமே செலவாகும். பெரியளவிலான மைக்ரோ- எண்டர்பிரைசஸ், கார்பன் புட்-பிரிண்ட்களை குறைக்க இந்த வாகனம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

            கைனடிக் சஃபார் ஸ்டார்-களில் நவீன லித்தியம் இயான் 48V பேட்டரிகளுடன் 150 AH ஆற்றலுடன், முழு சார்ஜ்ஜில் 130 km தூரம் பயணிக்கும். மேலும் இதில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இரண்டு ஸ்பீட் கியர்பாக்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.

            கூடுதலாக, கைனடிக் நிறுவனம், இந்த வாகனங்களுக்கு, வாகனம் மற்றும் பேட்டரிகளுக்கு மூன்று ஆண்டு வாரண்டியை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள பேட்டரிகள் மாற்றிகொள்ளத்தக்கவையாகும்.

            ஜீரோ எமிஷன் மற்றும் கார்பன் புட்-பிரிண்ட்களை குறைக்கும் நோக்கிலேயே இந்த வாகனம் டிசைன் செய்யப்பட்டுள்ளது என்று கைனடிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இவை, கடைசி மைல் கனெக்டிவிட்டிகளுக்கு விலை குறைந்த தீர்வையும் கொடுக்கும்.

            இந்த வாகனங்களில் கூடுதலாக, CED கோட் செய்யப்பட்ட வெப்பநிலையை தாங்கும் தன்மை கொண்ட பெயிண்ட்களுடன் கிடைக்கிறது. மேலும் இதில் நீடித்து உழைக்கும் டியூபுலர் சேஸ்களுடன் உள்ளன.

            கைனட்டிக் சஃபார் ஸ்டார் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் இ-காமர்ஸ் நிறுவனங்களின் டெலிவரி அப்ளிகேஷன்களுடன் கிடைக்கும். மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை கடைகளுக்கு எஃப்.எம்.சி.ஜி பொருட்கள் விநியோகம் செய்யவோ அல்லது டோர்-டு-டோர் கழிவு பொருட்கள் சேகரிக்கும் பணிகளுக்கு இந்த வாகனங்களை பயன்படுத்தலாம் என்று கைனடிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

             

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/kinetic-safar-star-electric-three-wheeler-launched/

          • உள்நாட்டு மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவன தயாரிப்புகளில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களாக க்விட் மாடல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் ரெனால்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய வாகனத்தை டஸ்டர் என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது.

            இந்த எஸ்யூவி-கள் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இரண்டு முக்கிய அப்டேட்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அடுத்த தலைமுறை டஸ்டர்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் போதிலும், இந்தியாவில் இவை எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகவில்லை.

            கடந்த ஜூலை மாத்தில் டஸ்டர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட்கள் வெளியிடப்பட்டது. இந்த ஃபேஸ்லிஃப்ட்களில் கட்டமைப்பு மற்றும் எக்ஸ்டீரியர் மாற்றங்களுடன் அடுத்த தலைமுறை மாடல்களின் வரவு வெகு விரைவில் இருக்காது என்ற தெரிகிறது. இந்நிலையில், ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே, ஜீரோ எமிஷன் டஸ்டர்களை சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தாண்டின் துவக்கத்தில் முதல் செட் ஸ்பை படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது.

            திட்டமிடப்படாதபடி வேலைப்பாடுகளுடன் கூடிய முதல் தலைமுறை டஸ்டர், ரெனால்ட் நிறுவனத்தின் சார்ப்பு நிறுவனமாக இருந்து வரும் டாசியா நிறுவனம், டஸ்டர் கார்களின் எலக்ட்ரிக் வெர்சன் prototype சோதனை செய்துள்ளது.

            இந்த டெஸ்ட் முயற்சிகள், சீட்களுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி பேக்களுடன் உள்ளது. மேலும் இவை இது கடினமான வேலைப்பாடுகளுக்கு கூடியபடி கட்டமைப்பின் அடியில் காணப்படுகிறது. இந்த அனைத்து செயல்பாடுகளும் ஒரு புதிய மின்சார வாகன கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

            வழக்கமான டஸ்டர்களுடன் ஒப்பிடும் போது, இந்த prototype-கள் நீளம் மற்றும் அகலம் மற்றும் புதிக்கப்பட்ட டயர்கள், பாதுகாப்பிற்கான ரேஸ்-ஸ்பெக் ரோல் கேஜ் மற்றும் ஸ்போர்ட்டி ரேசிங் பாக்கெட் சீட்கள் ஆகியவற்றைக் கொண்டது. இவை அனைத்தும் டாசியா ரேஸ் கார்க்ளுளான அன்ட்ராஸ் டிராப்பி ஐஸ் சீரிஸ்களின் கீழ் முதல் தலைமுறை டஸ்டர் கார்களின் பாடி உடன் கிடைக்கும். பிரேக்கை பார்க்கும் போது, இதில் பெரியளவிலான ப்ரெம்போ யூனிட்கள் முன்புறத்திலும், ஆல்பின் கிளிப்பர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

            Dacia ரோடு கார் பிரிவு எலக்ட்ரிக் ரேஸ் கிளாஸ் பிரிவில் நுழைந்துள்ளது மிகவும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இந்த டிராக்கள் குறித்து தெரிந்து கொள்வது, சாலைகளில் டெக்னாலஜிகளை கொண்டு வர உதவும். அடுத்த ஆண்டுகளுள் Dacia நிறுவனம், முதல் சுற்றுச்சூழலை பாதிக்காக மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதே போன்று பிரபலமான வாகனங்களான சான்ட்ரோ மற்றும் டஸ்டர் போன்றவையும் எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்பட உள்ளது.

            ரெனால்ட் நிறுவனம் இவி வாகனங்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து அனுபவம் பெற்றுள்ளது என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மேலும், இந்த நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார்கள் வரும் 2022-ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை Dacia மலிவு விலை இவி-களை தயாரித்தால், டஸ்டர் கார்களும் பேட்டரி மூலம் இயங்கும் கார்களை ஏன் எதிர்காலத்தில் தயாரிக்க கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ரெனால்ட் நிறுவனத்தின் சிட்டி கேஇசட்-இ கார்களில் சீனாவில் விற்பனை செய்ப்பட்டு வரும் நிலையில், இதை மாற்ற நாடுகளில் விற்பனை செய்ய சாத்தியமான வாய்ப்புகள் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

             

             

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/renault-duster-electric-vehicle-spied-testing/

          • கியா செல்டோஸ் கார்கள், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்த கார்களின் புக்கிங் தொடங்கப்பட்டு 49 நாட்களில் 50 ஆயிரம் யூனிட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த கார்களின் காத்திருப்பு காலம் 2 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

            இந்திய ஆட்டோ தொழிற்சாலை வரலாற்றில், கியா செல்டோஸ்கள் அறிமுகம் செய்யப்பட்ட முதல் இதுவரை 50 ஆயிரம் புக்கிங்கை எட்டியுள்ளது. இந்த சாதனையை இதற்கு முன்பு ஹூண்டாய் வென்யு கார்கள் படைத்திருந்தது. இந்த கார்கள் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட 60 நாட்களில் இந்த புக்கிங் சாதனையை எட்டியது. இந்நிலையில் கியா செல்டோஸ் அறிமுகமாகி 49 நாட்கள் ஆகி உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி 50 ஆயிரம் புக்கிங்கை பெற்று ஹூண்டாய் வென்யு சாதனையை முறியடித்துள்ளது.

            ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இந்த புக்கிங் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தனது தயாரிப்பு தொழிற்சாலையில் கார் தயாரிக்கும் பணிகளை அதிகரித்து வருகிறது. இந்த தொழிற்சாலை மாதத்திற்கு சுமார் 25 ஆயிரம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டது. தற்போது இந்த தொழிற்சாலை, முழு திறனுடன் செயல்பட்டு வருகிறது.

            கியா செல்டோஸ் கார்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு பல காரணங்கள் இருந்து வருகின்றன. இதற்கு இந்த காரின் நேர்த்தியான ஸ்டைல், ஸ்மார்ட் எக்ஸ்டீரியர்கள், இட வசதி கொண்ட இன்டீரியர்கள் மற்றும் பெரும்பாலான அம்சங்கள் கொண்ட காராக இது இருந்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டமான காரின் விலை 9.69 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. கூடுதலாக இந்தியாவில் பெரியளவிலான கார்களாக இருந்து வருகிறது.

            கியா இந்தியா நிறுவனம் இன்று BEAT360-ஐ அறிமுகம் செய்தது. இது மூன்று ஜோன் கொண்ட மையமாக இருக்கும். மேலும் கியா ஆர்வர்லர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். BEAT360-கள் இந்தியாவில் முதலில் குருகிராமில் காணப்பட்டது.

            கியா நிறுவனம் தெரிவிக்கையில், பீட் இன் BEAT360 என்பது BEATing ஆப் ஹார்ட், ‘3’ என்பது மூன்று ஜோன், ‘6’ என்பது ஆறு சென்ஸ்கள் மற்றும் ‘0’ என்பது பவுண்டரிகள் இல்லாதது என்பதை குறிக்கும். கூடுதலாக 360-களில் என்பது அனைத்து டைரக்டசன்களிலும், முப்பரிமாண அனுபவத்தை கொடுக்கும்.

            BEAT360- ஹவுசிஸ் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இவை சரவுண்டட் மீடியா ஜோன், மிக்ஸட்டு ரியாலிட்டி ஜோன் மற்றும் கான்பிகர் ஜோன்களுடன் ஆடியன்ஸ்களுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ளவும் முடியும். மேலும் வாடிக்கையாளர்களின் கனவுகளுக்கு ஏற்ப காரை வடிவமைத்து கொள்ளவும் முடியும்.

            BEAT360-ஐ எனேபிள் செய்து கொள்வதால் பல்வேறு வகையான அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். மேலும் அவர் மாற்றையமைகத்தக்க மொபைலிட்டிகளுடன், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விஷன் மற்றும் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

            இவை கபே ஜோன் வசதிகள் அதிவேக மையத்தை உயிர்பிக்கும் வகையில் இருக்கும். இது முழுமையாக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வசதிகளுடன் இருக்கும். மேலும் இதில் பல்வேறு கலச்சார நிகழ்வுகளுடன் பிராண்டின் ஒர்க்ஷாப்கள், மியூசிக் மற்றும் எண்டர்டெயின்மென்ட் கிக்ஸ்களுடன் இருக்கும். இதற்காக தொழில்துறை வல்லுனர்கள் மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து இனிமையான கியா அனுபவத்தை வழங்க உள்ளனர்.

            கியா செல்டோஸ் கார்கள் மூன்று இன்ஜின் ஆப்சன்களில் கிடைக்கிறது. இவை பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இவை, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் 115 hp ஆற்றல் மற்றும் 144 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இதே போன்று 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் 115 hp ஆற்றல் மற்றும் 250 Nm டார்க் கொண்டதாகவும், டாப் லைன்கள் 1.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்களுடன் 140 hp ஆற்றல் மற்றும் 242 Nm டார்க் கொண்டதாக இருக்கும்.

            ஒவ்வொரு இன்ஜின்களுடன் 6 ஸ்பீட் எம்டி, 6 ஸ்பீட் ஏடி, சிவிடி மற்றும் 7 ஸ்பீட் டிசிடி-களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜின்கள், ஹூண்டாய் குழுமத்தின் ஸ்மார்ட் ஸ்ட்ரீம் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது எதிர்காலத்தில் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் பொருத்தப்படும் என்று தெரிகிறது.

            அதிகரித்து வரும் டிமாண்ட்டை பார்க்கும் போது, கியா மோட்டர்ஸ் நிறுவனம் அண்மையில் டாப் வகை செல்டோஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இவை, ஜிடிஎக்ஸ்+ வகைகள், டிசிடி கியர்பாக்ஸ் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களுடன் இருக்கும். கியா செல்டோஸ் நிறுவனம் தற்போது மொத்தம் 16 வகைகளை அறிமுகம் செய்துள்ளது. இவை மூன்று இன்ஜின்களுடன் 4 டிரான்மிஷன் ஆப்சன்களுடன் இருக்கும்.

            கியா செல்டோஸ் கார்களின் வெற்றியை தொடர்ந்து, கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக 5 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் இரண்டு இவி-களையும் ( சோல் மற்றும் நிரோ), மற்றும் டெல்லுரைடு, சோரெண்டோ மற்றும் ஸ்டிங்கர் போன்ற வகைகளாக இருக்கும். இந்த கார்கள் சிகேடி ரூட் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

             

             

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/kia-receives-more-than-50-000-bookings-in-49-days-beats-hyundai-venue-record/

          • ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் புதிதாக 2019 ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் கார்களை 19.99 லட்சம் ரூபாய் முதல் 21.99 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை, இந்தியாவில்) அறிமுகம் செய்துள்ளது.

            2019 ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்சன்களில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி கேன்டி ஓயிட்களுடன் முற்றிலும் புதிய ரேஸ் ப்ளூ மற்றும் கோரிடா ரெட் ஆகிய மூன்று கலர் ஆப்சன்களிலும் கிடைக்கும். முற்றிலும் பிளாக் எக்ஸ்டீரியர் டிசைன் உபகரணங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

            இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் விற்பனை, சேவை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் ஜாக் ஹோலிஸ், ஸ்கோடா ஆக்டேவியா கார்கள் மாற்றங்களுடன் புதிய டைனமிக்ஸ் கொண்ட எக்ஸ்சிகியூட்டிவ் செடான்களாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

            ‘டஃப் மீட்ஸ் ஸ்மார்ட்’, புதிய ஆக்டேவியா ஓனிக்ஸ் அதன் வடிவமைப்பில் தனித்துவமான ஸ்ட்ரீட் டிசைன்களுடன் இருக்கும்.

            லிமிட்டெட் எடிசன் மாடல்கள் மறு வரையறை செய்யப்பட்டுள்ளதுடன், கிளாஸ் மற்றும் அழகிய வடிவமைப்புடன் இருக்கும். நேர்த்தியான மற்றும் அறிவார்ந்த டிசைன்களுடன், சிறந்த எக்ஸ்டீரியர்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கும். மேலும் இதில் பல்வேறு இன்டலிஜென்ஸ் கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன..

            இந்த கார் வழக்கமான ஓனிக்ஸ் கார்கள் போன்று இருக்கும். மேலும் இதில் பிளாக் ORVM-களுடன் கிளாஸி பிளாக் 16 இன்ச் பிரீமியா அலாய் வீல்களுடன் இருக்கும். இந்த கார்களில் கூடுதலாக எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் சிக்னேச்சர் சி வடிவ இலுமிநேசன்களுடன் கிளாஸி பிளாக் ஸ்பாயிலர்களுடன் உறுதியாக வாகனமாக இருக்கும்.

            காரின் உட்புறத்தில் புதிய ஆக்டேவியா ஓனிக்ஸ் கார்கள் பிரிமியம் பிளாக் லெதர் அப்ஹோலஸ்டரி மற்றும் டெக்கர்களுடன் குரோம் ஹைலைட்கள் மற்றும் 3 ஸ்போக் சூப்பர்ஸ்போர்ட் பிளாட்-பாட்டம் மல்டி பங்க்ஷன் ஸ்டீயரிங் வீல்களுடன் பெடல் ஷிப்ட் மற்றும் பிளாக் பேரப்பிரேட் செய்யப்பட்ட லெதர் வசதிகளும் உள்ளன.

            கூடுதலாக 12 வழியில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய டிவைர் மற்றும் பயணிகள் சீட்களுடன், இடுப்பு சப்போர்ட் கொடுப்பதுடன், டிரைவர் சீட்களை மூன்று புரோகிராம் மெம்மரி பங்க்ஷன் வசதிகளும் உள்ளன.

            அம்சங்களை பார்க்கும் போது, ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் கார்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் ஸ்மார்ட்லிங்க் டெக்னாலஜி மிரர்லிங்க், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளன.

            டூயல்-ஜோன் கிளைமேட்ரோனிக் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், கிளீன் ஏர் பங்க்ஷன், மின்னணு ஒழுங்குமுறை போன்றவற்றை கொண்டிருக்கும். கூடுதலாக இதில் உள்ள விண்ட்ஸ்கிரீன்கள், மிஸ்டிங்கைக் குறைக்கும் வகையிலான ஈரப்பதம் சென்சார்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

            பாதுகாப்பு வசதிகளை பொருத்தவரை, ஆக்டேவியா ஓனிக்ஸ் கார்களில் ஆறு ஏர்பேக்ஸ் வழக்கம் போலவே இடம் பெற்றிருக்கும். மேலும் இதில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், மெக்கனிக்கல் பிரேக் அசிஸ்ட், மல்டி கொலிசன் பிரேக், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், ஏஎஸ்ஆர் (ஆண்டி சிலிப் ரெகுலேசன்) மற்றும் இடிஎல் (எலக்ட்ரிக் மாறுபாடு கொண்ட லாக்)-களுடன் இருக்கும். ஹெட்லேம்ப்களுடன் புதிய ஆக்டேவியா ஓனிக்ஸ்-கள் ஏஎஃப்எஸ் (அடப்டிவ் முன்புற லைட்டிங் சிஸ்டம்) பங்க்ஷன்கள் உள்ளன.

            2019 ஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் கார்களில், 1.8 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்கள் உள்ளன. இதில் பெட்ரோல் வெர்சன்கள் 178 bhp மற்றும் 250 Nm பீக் டார்க் கொண்டதாக இருப்பதுடன், 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்மிஷன்களுடனும், டர்போசார்ஜ்டு 2.0 டிடிஐ இன்ஜின்களுடன் 141 bhp மற்றும் 320 Nm டார்க்கில் இயங்குவதுடன், 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் டிஎஸ்ஜி-கள் வழக்கம் போலவே கொடுக்கப்பட்டுள்ளது.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/skoda-octavia-onyx-launched-prices-starting-from-rs-19-99-lakh-specifications-details/

          • லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கார்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் 4.1 கோடி ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார்களின் அறிமுக விழா மும்பை, மகாராஷ்டிராவில் உள்ள லம்போர்கினியின் புதிய ஷோரூம்களில் நடைபெற்றது. இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட 8 மாதங்களுக்கு பின்னர் ஷோரூம்களுக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

            இந்த கார்கள் ஹூராகென் எவோ கூபே-கள் போன்று இருப்பதுடன், சாஃப்ட்-டாப் கன்வெர்ட்டபுள் வெர்சன்களுடன் electro-hydraulic roof-folding mechanism கீழிறங்கும் வகையில் சாஃப்ட்-டாப்களுடன் இருக்கும். இந்த சாஃப்ட்-டாப்கள் வெறும் 17 வினாடிகளில் திறந்து மூடும் வசதி கொண்டதாக இருக்கும்.

            ரெகுலர் கூபே வெர்சன்களுடன் ஒப்பிடும் போது, லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர்-கள் 120 kg அதிக எடையுடன் இருக்கும். இந்த கூடுதல் எடை ரூஃப் மெக்கானிசம் காரணமாகவே உண்டாகியுள்ளது. லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர்-கள் 0-100 kmph வேகத்தை வெறும் 3.1 செகண்ட்களில் எட்டிவிடும். இதே வேகத்தை கூபே வெர்சன்கள் 0.3 செகண்ட்களில் எட்டும். மேலும் 0-200 kmph வேகத்தை 9.3 செகண்ட்களை எடுத்து கொள்ளும். இந்த கார்களின் அதிகபட்ச வேகம் 325 kmph-ஆக இருக்கும்.

            ஆற்றலை பொருத்தவரை, லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் காரில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் இன்ஜின்களுடன் இருக்கும். இந்த இன்ஜின்கள் அதிகபட்சமாக 640 bhp ஆற்றல், 600 Nm டார்க் கொண்டதாக இருக்கும். மேலும் 7 ஸ்பீடு லம்போர்கினி டோபியா ஃப்ரிஜியோன் (எல்.டி.எஃப்) இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இது ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம்களுடன் இருக்கும்.

            இந்த அதிவேக சூப்பர் காரை லாவகமாக கட்டுப்படுத்துவதற்கும், சிறந்த டிரைவிங் அனுபவத்தையும், பாதுகாப்பையும் பெறுவதற்கும் பல சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாலையில் உள்ள வளைவுகளில் கார் துல்லியமாக திரும்புவதற்கு உதவும் சேஸீஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் வீல் ஸ்டீயரிங் சிஸ்டம், டயர்களுக்கு தேவையான டார்க் திறனை துல்லியமாக பிரித்து வழங்கும் டார்க் வெக்டரிங் சிஸ்டம் ஆகியவை இந்த காரின் சில முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக இதில் இடம் பெற்றுள்ளது.

            மற்ற சிறிய மாற்றங்களாக லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர்-களின் பாடி கலர்களுடன் கூடிய பம்பர்களுக்கு பதிலாக முற்றிலும் பிளாக் நிறத்தில் இருப்பதுடன், பிளாக்-அவுட்களுடன் ஏ-பில்லர்களுடன் இருக்கும்.

            காரின் பின்புறத்தில், புதிய டாக்ட்டெயில் ஸ்பாயிலர் பிளாகட் டவுன்போர்ஸ் மற்றும் டிராக்களுடன் கூடிய இரண்டு டோர்களுடன் இருக்கும். இதுமட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட காரின் கீழ்புற பாடி பார்ட்கள் காரை லிப் ஆக விடாமலும், ஏரோடைம்னமிக்ஸ்-களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த கார்களில் கூடுதலாக, 20 இன்ச் அலாய் வீல்கள், சாட் பிரெல்லி பி ஜீரோ டயர்களுடன் இருக்கும். இதில் முன்புற டயர்கல் 305/30 செக்ஷன் டயர்களுடனும், பின்புறத்தில் 245/30 செக்ஷன் ரப்பர்கள் கொண்டதாக இருக்கும்.

            உட்புறத்தை பார்க்கும் போது, லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர்-களின் கேபின் டிசைன்கள் 8.4 இன்ச் திறன் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் இருக்கும். மேலும், இந்த சிஸ்டமில், பல்வேறு கார் பங்க்ஷன்கள் இடம் பெற்றிருக்கும். இந்த பங்க்ஷன்கள், கிளைமேட் கண்ட்ரோல், செல்-போன் கனெக்டிவிட்டி மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

            மேலும் இந்த சிஸ்டமில், கூடுதலாக ஆப்பிள் கார்பிளே உடன், வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம்களுடன் டூயல் கேமரா டெலிமென்ட்ரி சிஸ்டம்களுடன் உயர் திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க்களுடன் கூடிய பேக்கேஜ்களுடன் இருக்கும். காரின் அப்ஹோலஸ்டரிகளுடன் லம்போர்கினி-கள் மூன்று ஆப்சன்களில் கிடைக்கிறது. இவை, லெதர், அல்காண்டரா மற்றும் கார்பன் ஸ்கின் என்ற ஆப்சன்களில் கிடைக்கிறது. இவை புதுமையான கார்பன் ஃபைபர் பொருள்களுடன் கிடைக்கிறது.

            சூப்பிரியர் டிரைவிங் டைனமிக்ஸ்களுடன் கூடிய லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர்-களில் கூடுதலாக, ஸ்டீயரிங் சிஸ்டம்களுடன் இருக்கும். இவை நான்கு வீல்களுடன் இருக்கும். லம்போர்கினி டைனமிக் ஸ்டீயரிங் மற்றும் ஆல் வீல் ஸ்டீயரிங் சிஸ்டம்களுடன் நிலையான டார்க்கள் இரண்டு ஆக்ஸில்களுடன் இருக்கும். மேலும் இவை டார்க் வெக்டரிங் சிஸ்டம்களுடன் இருக்கும். இவை அனைத்தும், லம்போர்கினி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட வாகன டைனமிக்ஸ் சிஸ்டம்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது.

             

             

             

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/lamborghini-huracan-evo-spyder-launched-priced-specifications-details/

          • மஹிந்திரா நிறுவனம் ஸ்பெஷல் தீபாவளி எடிசன் வகையாக பொலிரோ பவர் பிளஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான பொலிரோ கார்களில் இருந்ததை விட இந்த காரில் இடம் பெற்றுள்ள மாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்….

            இந்தியாவின் மிகவும் பெரிய பிரேம் கொண்ட எஸ்யூவி-களாக இருந்து வரும் பொலிரோ கார்கள், கடந்த இருபது ஆண்டுகளாக சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரின் டிசைன்களில் அதிகளவிலான மாற்றங்கள் இடம் பெறவில்லை என்றாலும், உறுதியான மற்றும் பாக்ஸி பொலிரோ-கள் மார்க்கெட்டில் தனித்துவமிக்க காராக இருந்து வருகிறது.

            வழக்கமான பொலிரோ-கள் 2.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் கடந்த மாதத்துடன் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது இந்த இன்ஜின்கள் பொலிரோ பவர் பிளஸ்சில் மட்டும் இடம் பெற்றுள்ளது.

            பொலிரோ பவர் பிளஸ் கார்களின் மொத்த எக்ஸ்டீரியர்களின் அளவில் உள்ளது போன்று, ஸ்பெஷல் எடிசன் மாடல்களிலும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. பொலிரோ பவர் பிளஸ் தீபாவளி எடிசன்களில் இடம் பெற்றுள்ள ஐந்து முக்கிய மாற்றங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

            புதிய ஸ்பெஷல் எடிசன் டெக்கல்கள்

            வெளிப்புறமாக பார்க்கும் போது, ரெகுலர் பொலிரோ பவர் பிளஸ்களுடன் ஒப்பிடும் போது, சிறப்பு பொலிரோ பவர் பிளஸ்கள், ஸ்பெஷல் எடிசன் ஸ்போர்ட்ஸ் டெக்கல்களுடன் இருக்கும்.

            முன்புற பம்பர்களுடன் add-onகளுடன் புதிய பனிக்கால லேம்ப்களுடன் இணைப்பு

            பொலிரோ பிளஸ் கார்களின் முன்புற பம்பர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடுதலாக புதிய பிளாஸ்டிக் இன்செர்ட்களுடன் இதுவரை இல்லாத வகையில், முன்புற பம்பர்கள் ஸ்போர்ட்ஸ் லுக் உடன் இருக்கும். புதிய பம்பர்களில் கூடுதலாக, இரண்டு சில்வர் லைனிங்களால் அலங்கரிக்கப்பட்ட பனிக்கால லேம்ப்களுடன், சிறப்பான லுக்கில் இருக்கும்.

            ஸ்டாப் லேம்ப்களுடன் கூடிய ரியர் ஸ்பாயிலர்

            ஸ்பெஷல் எடிசன் பொலிரோ கார்களில் கூடுதலாக ரியர் ஸ்பாயிலர் இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்பாயிலர் ரூப்-பின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்டாப் லேம்ப் மேம்படுத்தப்பட்டுள்ளது.

            ஸ்பெஷல் எடிசன் சீட் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவர்கள்

            காரின் கேபினில், 7 சீட்கள் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவர்களுடன் புதிய தீம்களுடன் இந்த காரின் இன்டீரியரை பிரிமியம் லுக் உடன் இருக்க செய்கிறது.

            ஸ்பெஷல் எடிசன் ஃப்ளோர் மேட்கள்

            பொலிரோ பவர் பிளஸ் ஸ்பெஷல் எடிசன்களில் கூடுதலாக புதிய கார்பெட் மேட்கள் இடம் பெற்றுள்ளது. இது வழக்கமான பொலிரோ கார்களுடன் ஒப்பிடும் போது, இந்த காருக்கு பிரிமியம் லுக்கில் இருக்கும்.

            பொலிரோ பவர் பிளஸ் ஸ்பெஷல் எடிசன்களில் எந்த மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த கார்கள் ஒரே மாதிரியான 1.5 லிட்டர் 3 சிலிண்டர் mHawk டீசல் இன்ஜின்களுடன் இருக்கும். இதே இன்ஜின்கள் ரெகுலர் லிரோ பவர் பிளஸ்-களிலும் இடம் பெற்றிருக்கும்.

            இந்த கார்கள் மஹிந்திரா நிறுவனத்தின் மைக்ரோ ஹைபிரிட் டெக்னாலஜிகளுடன் 70 hp ஆற்றலில், 195 Nm டார்க் கொண்டதாக இருக்கும். இவை 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

            மஹிந்திரா பொலிரோ கார்களில் கூடுதலாக, அனைத்து அத்தியாவசிய பாதுகாப்பு டெக்னாலஜிகளுடன் இருக்கும். இந்த டெக்னாலஜிகள், டிரைவர் சைடு ஏர்பேக்ஸ், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், முன்புற சீட்பெல்ட் ரீமைண்டர்கள், ஹை-ஸ்பீட் அலர்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மஹிந்திரா பொலிரோவின் விலை 7.86 லட்சம் ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) துவங்கி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலைகள் 8.86 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ் ஷோரூம் விலை) இருக்கும்.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/mahindra-bolero-power-plus-edition-features-explained/

          • கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது SUV காரான Kia Seltos காரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 32 ஆயிரத்து புக்கிங்கை பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை, தற்போது 50 ஆயிரம் என்ற எண்ணிகையை எட்டியுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த மாதத்திலேயே இந்த அளவுக்கு விற்பனை உயர்வை சந்தித்த முதல் நிறுவனம் இதுவாகும்.

            கியா செல்டோஸ் கார்கள் 9.69 லட்சம் ரூபாய் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார்கள் மற்ற கார்களுக்கு போட்டியாக இருந்தபோதும், கியா மோட்டார்ஸ் பல்வேறு ஆப்சன்களை வெளியிட்டது. எரிபொருள் வகையை பார்க்கும் போது, டிரான்ஸ்மிஷன் அம்சங்களுடன் கியா செல்டோஸ் மற்ற போட்டி கார்களை விட சிறந்ததாக இருக்கும்.

            செல்டோஸ் கார்களுக்கு போட்டியிடும் வகையில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடும் போது, சிறந்த கார்கள் வரிசை பட்டியலில், முதலிடத்தில் செல்டோஸ் கார்கள் இருக்கும்.

            கியா செல்டோஸ் கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட அதே மாதத்தில் 6 ஆயிரத்து 200 யூனிட்களாக இருந்தது. இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 7 ஆயிரத்து 500 யூனிட்களாக உயர்த்த தேவையான ஏற்பாடுகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

            கியா நிறுவனம் செல்டோஸ் கார்களை இன்னும் ஏற்றுமதி செய்ய தொடங்கவில்லை, ஆனாலும், இதற்கான திட்டங்கள் உள்ளன. இந்த காம்பேக்ட் எஸ்யூவி-கள் இந்தியா மற்றும் கொரியாவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனாலேயே இந்த நிறுவனம் உள்ளூர் மார்க்கெட் தேவையை பூர்த்தி செய்த பின்னரே, ஏற்றுமதி ஆர்டர்களுக்கு கார்களை டெலிவரி செய்யும் என்று தெரிகிறது.

            கியா செல்டோஸ் கார்களின் காத்திருப்பு காலம், ஆறு முதல் எட்டு வாரங்களாக இருக்கும் என்று கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காருக்கு ஏற்பட்டுள்ள டிமாண்ட்டை நிறைவு செய்யும் வகையில் அனந்தபூர் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த ஆலையில் இரண்டாவது ஷிஃப்ட் பணிகளை தொடங்க உள்ளது.

             

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/kia-receives-50000-bookings-for-the-seltos/

          • இந்திய ஆட்டோமொபைல் துறையில் இந்தாண்டு மந்தநிலை நிலவி வரும் நிலையில், இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட் தற்போது, பழைய ட்ரான்சிஷன் முறையிலிருந்து புது ட்ரான்சிஷன் முறைக்கு (கிராஷ் டெஸ்ட் மற்றும் எமிஷன்) போன்றவைகளுக்கு மாறி வருகிறது. இதனால் புதிதாக கார் வாங்குபவர்கள், விரைவில் வெளியேறும் மாடல்களை வாங்க விரும்பாமல் புதிய மாடல்களுக்காக காத்திருக்கும்படி செய்கிறது.

            இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை ஆட்டோ தயாரிப்பு நிறுவனங்களில் YoY திறன் பின்னோக்கியோ இருந்து வருகிறது. அதிக விற்பனை கொண்ட கார்களின் விற்பனை 22.9 விழுக்காடாக குறைந்தது, 46 ஆயிரத்து 525 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

            ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ கார்களின் விற்பனை குறித்து முந்திய ஆண்டில் தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், மற்ற எல்லா மாடல்களும் விற்பனையில் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வீழ்ச்சியில் மாருதி ஆல்டோ கார்கள் 15 ஆயிரத்து 79 கார்களை மட்டுமே விற்பனை செய்து 30.57 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது.

              Sep-19 Sep-18 Diff % Aug-19 Diff %
            1 Maruti Alto 15,079 21,719 -6,640 -30.57 10,123 4,956 48.96
            2 Maruti WagonR 11,757 13,252 -1,495 -11.28 11,402 355 3.11
            3 Maruti S-Presso 5,006 0 5,006 0 5,006
            4 Maruti Celerio 4,140 9,208 -5,068 -55.04 4,765 -625
            5 Hyundai Santro 3,502 0 3,502 3,288 214 6.51
            6 Tata Tiago 3,068 8,377 -5,309 -63.38 3,037 31 1.02
            7 Renault Kwid 2,995 5,529 -2,534 -45.83 2,191 804 36.70
            8 Datsun Redi-Go 842 1,658 -816 -49.22 751 91 12.12
            9 Datsun Go 136 597 -461 -77.22 205 -69
              Total 46,525 60,340 -13,815 -22.90 35,762 10,763 30.10

             

            மாருதி வேகன் ஆர்-கள் செப்டம்பர் மாத சிறிய கார்கள் விற்பனை பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கார்களின் விற்பனை 11 ஆயிரத்து 757 யூனிட்களுடன் 11.8 விழுக்காடு பின்னடைவை சந்தித்து உள்ளது. இந்த பட்டியலில் மாருதி எஸ் பிரஸ்ஸோ, மைக்ரோ கிராஸ்ஓவர் கார்களில் 5 ஆயிரத்து 6 யூனிட்களை டிஸ்பேட்ஜ் செய்துள்ளது. இந்த மாதத்தில் இந்த கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்த காருக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

            மாருதி செலிரோ கார்களின் விற்பனையை, கடந்த 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது 4 ஆயிரத்து 140 யூனிட்களாக இருந்து வருகிறது. இந்த ஹாட்பேக்கள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட அப்டேட்களுடன் வெளியாகியுள்ளது. மாருதி அல்லாத வகையான ஹூண்டாய் சாண்ட்ரோ கார்களின் விற்பனை கடந்த மாத்தில் அதிகரித்துள்ளது. அதாவது ஹூண்டாய் சாண்ட்ரோ-களின் விற்பனை 3 ஆயிரத்து 502 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

            டாடா டிகோர்கள் இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த கார்கள் 3 ஆயிரத்து 68 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இருந்தாலும் 63.38 விழுக்காடு விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஆட்டோதயாரிப்பாளர்கள், தற்போது டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கான்சோல்களை டியாகோ கார்களுக்கான ஃபேஸ்லிஃப்ட்களை அறிமுகம் செய்துள்ளது.

            ரெனால்ட் க்விட்கள் 2 ஆயிரத்து 995 யூனிட்களை டிஸ்பேட்ஜ் செய்துள்ளது. முதல் மாதத்தில் இந்த கார்கள், மாருதி எஸ் பிரஸ்ஸோ கார்களுக்கு போட்டியாக இருந்தது. டட்சன் ரெடிகோ மாடல்கள், 842 யூனிட்களை விற்பனை செய்து 50 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. இந்த கார்களின் ஃபேஸ்லிஃப்ட்கள் சிவிடிகளை அறிமுகம் செய்துள்ளதுடன், கடந்த மாதத்தில் 136 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

            மேற்குரிய விற்பனை எண்ணிகை அனைத்தும், மொத்த விற்பனை அளவையே (தொழிற்சாலையில் டிஸ்பேட்ஜ்) காட்டுகிறது. இந்நிலையில், தற்போது சில ஆட்டோ தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பணிகளை நிறுத்தி, மந்த நிலையை கட்டுபடுத்த முடிவு செய்துள்ளன. இருந்தாலும் பண்டிகைகாலத்தில் கார்களின் விற்பனை சிறிதளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

             

            Source; https://www.autonews360.com/tamil/news/cars/maruti-s-presso-beats-renault-kwid-september-sales-2019/

          • எம்.வி. ஆகஸ்டா டிராக்ஸ்டெர் 800 சீரிஸ்களில் 3 புதிய பைக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குள் 18.73 லடசம் ரூபாய் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

            இத்தாலியை சேர்ந்த எம்.வி. ஆகஸ்டா நிறுவனம், இந்தியாவில் கைனெட்டிக் நிறுவனத்துடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் இணைந்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கைனட்டிக் மோட்டோராயல் நிறுவனம் லிமிடெட் எடிசன் மாடல்களாக, வெறும் 200 யூனிட்களை மட்டுமே விற்பனைக்கு வெளியிட உள்ளது.

            இந்தியாவில் உள்ள பைக்பிரியர்களை கவரும் நோக்கில், எம்.வி. ஆகஸ்டா டிராக்ஸ்டெர் 800 சீரிஸ்களில், டிராக்ஸ்டர் 800 ஆர்.ஆர், டிராக்ஸ்டர் ஆர்.ஆர் அமெரிக்கா, ஆர்.ஆர் பைரல்லி என 3 புதிய பைக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

            விலைகளை பொறுத்தவரையில், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மற்றும் டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் பைரெல்லி ஆகிய பெயர்களில் இந்த மாடல்கள் வந்துள்ளன. இதில், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர், டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மாடல்கள் 18.73 லட்சம் ரூபாய் விலையிலும், பைரெல்லி மாடல் 21.5 லட்சம் ரூபாய் விலையிலும் கிடைக்கும். (எக்ஸ்ஷோரூம் விலை இந்தியாவில்)

            இந்த மூன்று பைக்குகளிலும் ஒரே மாதிரியான 800 cc இன்ஜின்களுடன் 140 hp ஆற்றல் மற்றும் 87 Nm டார்க் கொண்டதாக இருக்கும்.

            மேலும் டிராக்ஸ்டெர் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மாடல்கள் இரண்டும் ஐஸ் பியர்ல் ஒயிட் – டார்க் மேட் க்ரே மற்றும் நார்டோ க்ரே – டார்க் மேட் கிரே ஆகிய இரண்டு கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது. இதில் டிராக்ஸ்டெர் 800ஆர்ஆர் அமெரிக்கா மாடல்களில் ஸ்பெஷல் பாடி டெக்கல் ஸ்டிக்கர் டிசைன்களுடன் கிடைக்கிறது. இதே போன்று பைரெல்லி மாடல்கள் மேட் பிளாக் – பைரெல்லி யெல்லோ மற்றும் ஐஸ் பியர்ல் – அமெரிக்கன் புளூ ஆகிய இரண்டு கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது.

            எம்.வி. ஆகஸ்டா டிராக்ஸ்டெர் 800 சீரிஸ் அறிமுக விழாவில் பேசிய மோட்டோராயல் நிறுவன நிர்வாக இயக்குனர் அஜிங்கியா பிரோடியா, இந்தியாவின் செயல்பட்டு வரும் ஒரே மல்டி பிராண்டு சூப்பர் பைக் விநியோகம் செய்யும் நிறுவனம் மோட்டோராயல் நிறுவனம். நாங்கள் எம்வி ஆகஸ்டா நிறுவனத்தின் அனைத்து சூப்பர் பைக்குகளையும் விற்பனை செய்வதில் பெருமை அடைகிறோம். இந்த பைக்களின் கவர்ந்திழுக்கும் தோற்றம், செயல்திறன், வேகம், பாதுகாப்பு கட்டமைப்புகள் போன்றவை இந்தியாவில் வசிக்கும் பைக் பிரியர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறோம் என்றார்.

            தொடர்ந்து பேசிய அவர், மோட்டோராயல் நிறுவனம் ஷோரூம்கள் இந்தியாவின் சென்னை, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற இடங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளது. மேலும் எங்கள் சேவை விரிவு படுத்தும் நோக்கில் ஜெய்ப்பூர், கொல்கத்தா, டெல்லி, சண்டிகர் ஆகிய நகரங்களிலும் மோட்டோராயல் ஷோரூம்கள் தொடங்கப்பட உள்ளது என்றார்.

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/mv-agusta-dragster-800-series-launched/

          • சீன அதிபர் ஜீ ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை 11ஆம் தேதி சென்னை வருகிறார். 12,13 ஆகிய தேதிகளில் வரலாற்று சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன.

            சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு காரில் பயணிக்க உள்ளார். விமான நிலையத்தை சுற்றிய பகுதிகளை அழகுபடுத்தும் பணிகளில் ஏராளமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளை செப்பனிடுவது, சுவர்களுக்கு வெள்ளை அடிப்பது, பூங்காக்கள் அமைப்பது என படு ஜோராக பணிகள் நடைபெற்று வருகின்றன.

            சீன அதிபர் ஜி ஜின்பிங் தான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அதிகாரப்பூர்வ காரையும் எடுத்து செல்வது வழக்கம். இதன்படி அவரது அதிகாரப்பூர்வ கார்கள் போயிங் 747 விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா? அதில் என்னென்ன வசதிகள் இடம் பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்….

            1. சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தி வரும் கார் சீனாவின் பாரம்பரியம் மிக்க ஹாங்கி நிறுவனம் தயாரித்து அளித்துள்ள கார். இந்த நிறுவனம் தற்போது எஃப்.ஏ.டபிள்யூ வாகன குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பது கூடுதல் தகவல்
            2. சீனாவின் கம்யூனிச கொள்கையின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான செங்கொடி என்று பொருள்படும் பெயரை கொண்ட ஹாங்கி நிறுவனத்தின் கார்களையே பெரும்பாலான சீன அதிபர்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
            3. கடந்த 1958-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஹாங்கி நிறுவனம் 1981-ம் ஆண்டு வரை அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே கார்களை தயாரித்து அளித்து வந்தது.
            4. சீன அதிபர்கள் வெளிநாட்டு பயணிக்கும் போது, அந்தந்த நாடுகள் கொடுக்கும் பாதுகாப்பான வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி கொள்வது வழக்கமான இருந்த நிலையில், தற்போது உள்ள சீன அதிபர் இந்த நடைமுறையை மாற்றியுள்ளார்.
            5. சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி வரும் ஹாங்கி நிறுவனத்தின் எல்-5 கார்கள். இந்த கார்கள் ஹாங்கி நிறுவனத்தின் பிரபலமான சிஏ770 என்ற கார்களின் மூலம் கவரப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

            சீன அதிபர் ஜி ஜின்பிங் காரில் இடம் பெற்றுள்ள வசதிகளை தெரிந்து கொள்ளுங்கள்….

            • சீன அதிபரின் ஹாங்கி எல்-5 கார் மாடலானது குண்டு துளைக்காத கார்
            • கண்ணி வெடி தாக்குதல்களையும் தாங்கும் திறன் கொண்டது.
            • ஸ்பெஷல் ரன் ஃப்ளாட் டயர்கள் கொண்டதாக இருக்கும். இது பஞ்சர் ஆகாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
            • லிமோசின் வகை கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
            • 5.55 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்ட பிரம்மாண்ட கார்.
            • அதிக இடவசதி கொண்டதுடன் வீல் பேஸ் நீளம் 3.4 மீட்டர் அளவில் இருக்கும்.
            • இந்த காரின் எடை 3.15 டன்னாக இருக்கும். மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார் விட பெரியளவில் இருக்கும் எனது கூடுதல் தகவல்.
            • ஆடம்பரமான சீட்களுடன், ஸ்பெஷல் ஏசி சிஸ்டம்களும் பொருத்தப்பட்டுள்ளது.
            • காரில் செங்கொடியை பிரதிபலிக்கும் லைட், கொடி மற்றும் பாரம்பரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
            • சேட்டிலைட் போன் வசதி

            சீன அதிபர் ஜி ஜின்பிங் காரின் விலை மற்றும் ஆற்றல் திறனையும் தெரிந்து கொள்ளுங்கள்…

            • இந்த கார்கள் இந்திய மதிப்பில் 5.69 கோடி ரூபாய் விலை கொண்டது.
            • 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 ரக இன்ஜின்களுடன் 381 hp 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.
            • அதிவேகம் கொண்ட இந்த கார் 0 – 100 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் எட்டி விடும். 105 லிட்டர் பெட்ரோல் டேங்க் கேப்பசிட்டி கொண்ட இந்த கார்கள் டேங்க் நிரப்பபட்ட நிலையில் 500 கிலோ மீட்டர் தூரம் ஓடும்.

            சீன அதிபர் ஜி ஜின்பிங் காரின் பாதுகாப்பு கருதி, குண்டு துளைக்காத கண்ணாடிகள் தொடங்கி, மிக கனமான கட்டமைப்பு என பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு கருதி, இந்த காரின் சிறப்புகளில் பெரும்பாலானவை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. கார் என்ஜின், திறன் போன்ற சில விஷயங்கள் மட்டுமே வெளி உலகிற்கு தெரியும்.

            நாளை இந்த கார் சென்னை சாலைகளிலும் தடம் பதிக்க உள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/chinese-president-xi-jinping-official-car-features-explained/

          • கிளாசிக் லிஜெண்ட்ஸ் நிறுவனமான ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம், ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்களை இந்தியாவில், 1.73 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்டின் 90-வது அனிவெர்சரி கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த பைக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தை செக்கோஸ்லோவாக்கியாவுக்கு முந்திய காலகட்டத்தில் 1929 ஆம் ஆண்டில் ஃபிரான்டிசெக் ஜானெசெக் இந்த பிராண்டை நிறுவினார். இந்த நிறுவனத்தில் இருந்து வெளி வந்த முதல் மோட்டார் சைக்கிள் – ஜாவா 500 ஓஹெச்வி என்பது குறிப்பிடத்தக்கது.

            புதிய அனிவெர்சரி எடிசன், ஜாவா நிறுவனத்தின் முதல் மோட்டார் சைக்கிளை நினைவு கூறும் வகையில் அதே அடையாளத்துடன் வெளிவந்துள்ளது. கூடுதலாக, ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்கள் உடனடியாக டெலிவரி செய்யப்படும் என்றும், இந்த எடிசன்கள் மொத்தமாக வெறும் 90 யூனிட்மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.

            ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்களின் கலர், முழுமையான பின்ஸ்டிரிப் பெட்ரோல் டேங்க்கள் போன்றவை ஜாவா 500 ஓஹெச்வி பைக்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த மோட்டார் சைக்கிள், முழுமையான குரோம் பினிஷ்டு இன்ஜின் மற்றும் எக்ஸ்ஹாஸ்ட்களுடன் இருக்கும். ஒவ்வொரு 90-வது அனிவெர்சரி எடிசன் மோட்டார் சைக்கிள்களிலும் பெட்ரோல் டேங்களில் தனிப்பட்ட சீரியல் நம்பர்களுடம் இருக்கும்.

            காஸ்மெடிக் மாற்றங்களை பார்க்கும் போது, ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் இதில் 293 cc சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்களுடன், 26 hp மற்றும் 28 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

            லிமிட்டெட் எடிசன் ஜாவா மோட்டார் சைக்கிள்கள் வரும் 15-ம் தேதி முதல் டீலர்ஷிப்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புக்கிங் செய்துள்ள வாடிக்கையாளர்கள், இந்த மோட்டார் சைக்கிளை பெறுவதற்கு தகுதி உடையவர்களாக இருப்பார்கள். ஜாவா 90-வது அனிவெர்சரி எடிசன்கள் டீலர்ஷிப் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

            இந்த பைக்களை வாங்க விரும்புபவர்கள் வரும் 22-ம் தேதிக்குள் தங்கள் ஆர்டரை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் தயாரிப்பு நிறுவனம் , இந்த பைக்களை வாங்கும் 90 அதிர்ஷ்டசாலி உரிமையாளர்களை லக்கி டிரா மூலம் தேர்வு செய்ய உள்ளது. பின்னர், மோட்டார் சைக்கிள் அவர்களுக்கு உடனடியாக டெலிவரி செய்யப்படும் என்று ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டெலிவரி, வரும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

            ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மார்க்கெட்டிற்குள் நுழைந்தது. அது முதல் இந்த நிறுவனம் பெரியளவிலான வரவேற்பை பெற்று வருகிறது.

            இந்த பிராண்ட்கள் இதற்கு முன்பு 100 டீலர்ஷிப்களில் தங்கள் பணிகளை தொடங்குவதாக தெரிவித்து இருந்தது போன்று, இன்னும் பணிகளை துவக்கவில்லை. இந்த பைக்களுக்கு அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த பைக்களுக்கான டெலிவரி வழக்கம் போலவே இருக்கும் என்று தெரிகிறது.

            தற்போது இந்த் நிறுவனம், இரண்டு வகையான ஜாவா பைக்களை வெளியிட்டுள்ளது. ஜாவா மற்றும் ஜாவா போர்டி டூ என்ற என்ற பைக்களை தவிர்த்து, மேலும் சில மோட்டார் சைக்கிள்களை அடுத்த இரண்டு ஆண்டில் வெளியிட்ட ஜாவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவை ஜாவா பேராக் மாடலை உள்ளடக்கியதாக இருக்கும். பாபர் பாணியில் உருவாக்கப்பட உள்ள இந்த பைக்கள் கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது.

             

             

            Source: https://www.autonews360.com/tamil/news/bikes/jawa-90th-anniversary-edition-launched-price-starting-at-rs-1-73-lakh/

          • பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன் எஸ்யூவி மாடல்கள் பல்வேறு வகைகளில் கிடைகிறது. இந்த மாடல்களின் பிரிமியம் வகைகள் வழக்கமான மாடல்களை விட 22 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும்.

            தற்போது புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன்-களின் விலை 7.85 லட்சம் ரூபாய் முதல் 8.86 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் டெல்லியில்) கிடைக்கிறது. புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் மொத்தமாக 1000 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மாடல்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

            புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன் எஸ்யூவிகளில் பல add-on அம்சங்களுடன் இருக்கும். வெளிப்புறமாக பார்க்கும் போது புதிய மஹிந்திரா பொலெரோ பவர்+ ஸ்பெஷல் எடிசன்களில், டெக்கல், ஸ்பெஷல் எடிசன் சீட் கவர், ஸ்பெஷல் எடிசன் கார்பேட் மேட்கள், ஸ்பெஷல் எடிசன் – ஸ்காப் பிளேட் சீட், ஸ்டீயரிங் வீல் கவர், முன்புற பம்பர் அட்-அன் பனிக்கால லேம்ப்கல், ஸ்பாயிலர்களுடன் கூடிய ஸ்டாப் லேம்ப்களுடன் இருக்கும். மற்ற அம்சங்கள் மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கும்.

            மெக்கனிக்கல் ரீதியாக பார்க்கும் போது, இந்த கார்களில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.5 லிட்டர் mHawkD70 டீசல் இன்ஜின்களுடன் 70 bhp மற்றும் 195 Nm பீக் டார்க் கொண்டதாக இருக்கும். இந்த காரின் இன்ஜின்கள் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

            இந்தாண்டின் ஜூலை மாதத்தின் துவக்கத்தில், பொலெரோ பவர்+ மாடல்கள் பிஎஸ்6 ரெடினஸ் சர்டிபிகேட்களுடன் இருக்கும். இந்த சர்டிபிகேட்கள் சர்வதேச ஆடோட்மேடிவ் டெக்னாலஜி மையத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட மாடல்கள் வரும் 2020-ம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

            மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் ஏற்கனவே 12 லட்சம் பொலெரோ வாகனங்களை விற்பனை செய்து, இந்தியாவில் இந்த பிரிவில் அதிகளவில் விற்பனையாகும் காராக இருந்து வருகிறது.

             

            Source: https://www.autonews360.com/tamil/news/cars/mahindra-bolero-power-special-edition-launched-for-festive-season/

          No friends yet.

          Albums

            No items to display

            Videos

              No videos

              Let autonews360 know what you think!

              There are no polls of autonews360 yet.