Plz do abide to our Terms & Condition:

    • Do not paste URL Links directly in any content instead post them as Hyperlink inside a text.
       
    • To post a Link directly use instead Bookmark.
       
    • If we find anyone posting beyond the warning we will immediately terminate your account without any warning. 

Francis Sukin

Basic Info

Sex: Male
Relationship Status: Single

Work and Education

Philosophy

Religious View
Political View
Favourite Quotations

To attain knowledge, add things everyday; to obtain wisdom, remove things everyday.

Personal Contact

Location: New York, NY, United States

Pages

    No pages created yet

    Highest Rating

      • A2Z Templates for Blog
        5/5 (3 votes)
        A2Z Templates for Blog

        Premium Templates of Blogger,Joomla,Word press,Flash,CSS are available for download.Magazine Blogger templates,Premium Blogger Templates are available for free.

      • Online Hindi songs
        5/5 (3 votes)
        Online Hindi songs

        Hear the latest sensational hits songs in Hindi film industry and download Hindi songs rapidly.Has a wide range collection of Actor and actress gallery.,,jst enjoy and have fun.,.

      • Tamil Songs
        5/5 (3 votes)
        Tamil Songs

        Hear the latest sensational hits songs in Tamil film industry and download Tamil songs rapidly.Has a wide range collection of Actor and actress gallery.,,just enjoy and have fun

      • விழா எடுத்துப்பார்
        5/5 (1 votes)
        விழா எடுத்துப்பார்

        ஆசிரியர்                  :...

      • மின்னூல் உருவாக்குவது எப்படி?
        5/5 (1 votes)
        மின்னூல் உருவாக்குவது எப்படி?

        LibreOffice Writer,  sigil,  Calibre  போன்ற கட்டற்ற இலவச...

      • நூல் : இட ஒதுக்கீடு உரிமை

        ஆசிரியர் : அதி அசுரன்

        image
        மின்னஞ்சல் : atthamarai@gmail.com

        அட்டைப்படம் : காட்டாறு குழு

        மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
        மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

        வெளியிடு : FreeTamilEbooks.com

        உரிமை : Creative Commons Attribution-NonCommercial 4.0 International

        உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

         

         

         

        பதிவிறக்க*

        ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

        Download “இட ஒதுக்கீடு உரிமை epub” right-for-reservation.epub – Downloaded 57 times –

        புது கிண்டில் கருவிகளில் படிக்க

        Download “இட ஒதுக்கீடு உரிமை mobi” right-for-reservation.mobi – Downloaded 26 times –

        குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

        Download “இட ஒதுக்கீடு உரிமை A4 PDF” right-for-reservation_a4.pdf – Downloaded 104 times –

        பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

        Download “இட ஒதுக்கீடு உரிமை 6 inch PDF” right-for-reservation_6_inch.pdf – Downloaded 43 times –

         

         

         

        Send To Kindle Directly

         

         

         

        பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/right_for_reservation-2019-04-03-18-13-37

        புத்தக எண் – 509




        Original: http://freetamilebooks.com/ebooks/right-for-reservation/
        By: admin
        Posted: April 15, 2019, 7:11 am

        இட ஒதுக்கீடு உரிமை – கட்டுரைகள் – அதி அசுரன்
      • நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார்.

        எழுத்தாளர் கோவை ஞானி [ http://kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவரது படைப்புகளை எவரும் பகிரலாம்.அச்சிட்டு வெளியிடலாம். இந்த அறிவிப்பு மானிடர் அனைவரின் மீதான பேரன்பை வெளிப்படுத்துகிறது.

        new-ap6 black ext.JPG

        அன்வரின் வார்த்தைகளில் இதோ.

        17/03/19 சனி
        FreeTamilEbooks.com தளத்திற்க்கு புத்தகங்களின் அனுமதி பெற கோயமுத்தூர் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. கோவை ஞானி அவர்களுக்கு கி.கா உரிமை,கணியம் அறக்கட்டளை பற்றிய விரிவான விளக்கம் ஒளி,ஒளி கோப்பாக காண்பிக்கபட்டது. அது பற்றிய ஜயங்களுக்கு உடன் பதில் அளித்தேன் . மிகவும் நல்ல ஒத்துழைப்பை தந்தார் . அய்யா அவர்களின் உதவியாளர் திருமதி மீனா அவர்கள் பணிக்கு வரவில்லை என்பதால் 18/3/19 இது பற்றிய அறிவிப்பை தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

        18/03/19 ஞாயிறு

        கி.கா உரிமை பற்றிய கடிதம் அவரின் உதவியாளர் மீனா அவர்களால் படித்து காட்டபட்டது. முதல் கட்டமாக அவரின் எட்டு புத்தகங்களை கொடுத்தார். புத்தகங்கள் உடன் @gurulenin அவர்களுக்கு தூதஞ்சல் அனுப்பட்டது. அய்யா சில புத்தகங்களை உடன் வெளியிட வேண்டுகோள் வைத்தார். அவை முன்னுரிமை அடிப்படையில் வெளியிடப்படும். அவரின் ஒரு நூலில், நூல்கள் யாவும் ஒரு அறக்கட்டளை அமைத்து பாதுகாக்கவேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார். அவரின் எந்த நூலை படித்தாலும் நாம் மிகவும் ஒன்றி போய் தெளிந்த நீரோடை ஒடுவது போல ஒரு வாசிப்பு அனுபவத்தை நாம் எல்லோரும் பெற சிறிது நாள் காத்திருக்க வேண்டும்.

        அடிப்படையில் வெளியிடப்படும். அவரின் ஒரு நூலில், நூல்கள் யாவும் ஒரு அறக்கட்டளை அமைத்து பாதுகாக்கவேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளார். அவரின் எந்த நூலை படித்தாலும் நாம் மிகவும் ஒன்றி போய் தெளிந்த நீரோடை ஒடுவது போல ஒரு வாசிப்பு அனுபவத்தை நாம் எல்லோரும் பெற சிறிது நாள் காத்திருக்க வேண்டும்.
        kovaignani_anwar

        மேலும் கி.கா உரிமையில் மற்ற எழுத்தாளர்களும் அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பை தர வேண்டும் என்பதை காணொளியில் தெரிவித்தார்.
        gnani_cc

        அவர் கொடுத்த நூல்களின் பட்டியல்

        எண் நூல் வெளியான ஆண்டு
        1 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் 1988
        2 தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் 1994
        3 எண்பதுகளில் தமிழ் நாவல்கள் 1994
        4 படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம்
        5 தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் 1997
        6 நானும் என் தமிழும் 1999
        7 தமிழன் வாழ்வும் வரலாறும் 1999
        8 தமிழில் படைப்பியக்கம் 1999
        9 மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் 2001
        10 எதிர் எதிர் கோணங்களில் 2002
        11 மார்க்சிய அழகியல் 2002
        12 கவிதையிலிருந்து மெய்யியலுக்கு 2002
        13 தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் 2003
        14 தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் 2004
        15 வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் 2004
        16 தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் 2005
        17 தமிழன்பன் படைப்பும் பார்வையும் 2005
        18 வள்ளுவரின் அறவியலும் அழகியலும் 2007
        19 தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் 2008
        20 நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் 2009
        21 செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் 2010
        22 தமிழிலக்கியம் இன்றும் இனியும் 2010
        23 வானம்பாடிகளின் கவிதை இயக்கம் 2011
        24 ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் 2012
        25 அகமும் புறமும் புதுப்புனல் 2012
        26 அகமும் புறமும் தமிழ்நேயம் 2012
        27 ஞானியின் எழுத்துலகம் 2005
        28 ஞானியோடு நேர்காணல் 2012
        29 மார்க்சியத்திற்கு அழிவில்லை 2001
        30 மார்க்சியமும் மனித விடுதலையும் 2012
        31 இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் 1975
        32 மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு 1976
        33 கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை 1996
        34 நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் 2006
        35 கல்லிகை 1995
        36 தொலைவிலிருந்து 1989
        37 கல்லும் முள்ளும் கவிதைகளும் 2012
        38 தமிழ்த் தேசியம் பேருரைகள் 1997
        39 அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் 1997
        40 மார்க்சியத்தின் எதிர்காலம் 1998
        41 படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் 1999
        42 மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் 1999
        43 விடுதலை இறையியல் 1999
        44 இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் 2000
        45 மார்க்சியம் தேடலும் திறனாய்வும் 2000
        46 நிகழ் நூல் திறனாய்வுகள் 100 2001
        47 பெண்கள் வாழ்வியலும் படைப்பும் 2003
        48 நிகழ் இதழ் 29

         

        மூலம் – https://github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/5

        கோவை ஞானி ஐயா அவர்களுக்கும் அன்வர் அவர்களுக்கும் நன்றி!




        Original: http://freetamilebooks.com/releasing-all-kovai-gnani-in-creative-commons-license/
        By: admin
        Posted: April 9, 2019, 2:41 am

        கோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்
      • சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும்.

        ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும். இந்தக் குறுஞ்செயலியின் மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய செவ்விலக்கியங்களுக்கான பதிப்புகளை மிக எளிதாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம் (1812 முதல் 1950 வரை வெளிவந்த பதிப்புகள் மட்டும்). ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்ற மிகச் சிறந்த ஆளுமைகளின் பதிப்புகளை எளிதாகக் கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஒன்றாக இப்பணி அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு உ.வே.சா பதிப்பித்த புறநானூறு வேண்டுமென்றால் இக்குறுஞ்செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து படிக்க முடியும்.

        மேலும், இக்குறுஞ்செயலி குறித்துத் திட்டப்பணி முதன்மை ஆய்வாளர் முனைவர் கை. சங்கர் கூறியதாவது: “தமிழ் ஆய்வுப்புலம் வளரவேண்டும் என்றால் அதற்கான ஆய்வுமூலங்கள் பரலாக்கப்படவேண்டும். ஒருசில நூலகங்களில் பாதுகாக்கப்படும் நூல்கள் ஒருசில ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதற்கு மட்டுமே வசதிவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. தமிழ் ஆய்வுப்பணியை மேற்கொள்வோர் பலர் ஏழை எளிய பின்னணியிலிருந்து வருகிறார்கள். அவர்கள் நூல்களுக்காகச் சென்னை, புதுக்கோட்டை, கும்பகோணம் என அலைந்து திரிவது இனிக் குறையும். இணையத்தின் மூலம் அனைத்தும் பரவலாகி வருவது வரவேற்புக்குரியதாகும். சங்க இலக்கியக் குறுஞ்செயலி உலகெங்கும் இருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்குப் பேருதவியாக இருக்கும். இங்கு பதிவேற்றாதுவிட்ட அரிய சங்க இலக்கியப் பதிப்புகளை வைத்திருப்போர் sankarthirukkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அவை உடனுக்குடன் பதிவேற்றப்படும்” என்றார்.

        கணியம் அறக்கட்டளை நிறுவனர் கலீல் ஜாகீர் இது குறித்து கூறியதாவது “சங்க இலக்கியம் செயலியை ஆன்டிராய்டு கைபேசிகளில் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கிக்கொண்டு உடனடியாகப் பயன்படுத்தலாம். பல்கலைக்கழக நிதியுதவியுடன் செய்வதால் விளம்பரத் தொந்தரவு இருக்காது. பாதுகாப்பானது. ஒருமுறை தரவிறக்கம் செய்துவிட்டால் போதும். பிறகு தரவிறக்கம் செய்யப்பட்ட நூல்களை எல்லாம் வேண்டிய நேரத்தில் எடுத்துப் படிக்கும் வசதி குறுஞ்செயலியில் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

        மொபைல் கருவிகளில் படிப்படதற்கேற்ப PDF கோப்புகள், அளவில் குறுக்கப்பட்டுள்ளன. மேலும், PDF கோப்புகளின் அளவு 10 MB முதல் 200 MB வரை கூட இருக்கும். எனவே, அதற்கேற்ற இணைய இணைப்புடன் செயலியைப் பயன்படுத்துங்கள்.

        செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு bit.ly/SangaElakkiyamApp
        செயலியின் மூல நிரல் இங்கே – github.com/KaniyamFoundation/SangaIlakkiyangal

         

        ஸ்கிரீன்ஷாட் படம்  ஸ்கிரீன்ஷாட் படம்ஸ்கிரீன்ஷாட் படம்

         

        23.03.2019 தமிழ் இந்து நாளிதழில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

         




        Original: http://freetamilebooks.com/releasing-sangaelakkiyam-android-app-for-tamil-literature/
        By: admin
        Posted: March 25, 2019, 5:18 am

        சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு
      • Report in Tamil

        Report in English

        கணியம் அறக்கட்டளை பிப்ரவரி 2019 மாத அறிக்கை

        தொலை நோக்கு – Vision

        தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்

        பணி இலக்கு – Mission

        அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

        நிகழ்ச்சிகள்

        1000 மின்னூல்கள்

        1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே – http://www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/ இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.

        செயல்கள்

        எண் செயல்கள் இந்த மாதம் மொத்தம் பங்களித்தோர்
        1 FreeTamikEbooks.com வெளியீடுகள் 0 506
        2 கணியம் கட்டுரைகள் 14 709 நு.நித்யா, இரா. அசோகன் – கலாராணி – ச.குப்பன்
        3 கணியம் ஒலியோடை 1 10 கமல்,ராகுல்
        4 அரசியல் உரைகள் ஒலியோடை 1 17 ஆழி செந்தில்நாதன்
        5 வாசகசாலை ஒலியோடை 16 16 வாசகசாலை குழு

        விக்கிமூலம்

        விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 8 பேர் இணைந்துள்ளனர். ஒரு மின்னூல் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 4 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.

        காண்க https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்

        கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடுகள்

        கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி

        மென்பொருட்கள்

        1. Youtube அல்லது நம்மிடம் உள்ள ஒலிக்கோப்பை ஒலியோடையாக எளிதில் வெளியிடும் மென்பொருள் உருவாக்கப்பட்டது. மூலநிரல் – https://github.com/KaniyamFoundation/YouTube2Podcast இதன் மூலம் விரைந்து பல ஒலியோடைகளை வெளியிடலாம். உருவாக்கிய கலீல் ஜாகீருக்கு நன்றி. CommandLine ல் இயங்கும் இதை இணைய வழி மென்பொருளாக, அனிதா மேம்படுத்தி வெளியிட்டுள்ளார். மூலநிரல் – https://github.com/KaniyamFoundation/YouTube2Podcast-web
        2. விக்கிசனரியில் உள்ள வார்த்தைகளை ஒலியாகப் பதிவு செய்ய ஆன்டிராய்டு செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் சில பிழைகள் களையப்பட்டன. தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது.
        3. தமிழ் எழுத்துப்பிழைத்திருத்தி உருவாக்குவதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொழியியல் அறிஞர் திரு. பழனி அவர்கள் பெயர்ச்சொற்களுக்கான விதிகளை அனுப்பியுள்ளார். அவற்றை நிரலாக்கம் செய்ய திட்டமிடுகிறோம். பாண்டிச்சேரியிலிருந்து நண்பர்கள் கமல், பிரசன்னா இது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

        புதிய திட்டங்கள்

        பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம்.

        போதுமான நன்கொடைகள், சரியான திட்டமிடல்கள், தகுந்த பங்களிப்பாளர்களைப் பெற்ற பின் இத்திட்டங்கள் செயல் வடிவம் பெறும்.

        இம்மாத நன்கொடையாளர்கள்

        எண் பெயர் தொகை
        1 பழனி ராஜா 250
        2 சுவாமிநாதன் சேது 1000
        3 வை. ராஜசேகர் 1000
        4 கலீல் ஜாகீர் 100
        5 ஜெயகிருஷ்ணன் 200
        6 பெயரிலி 100
        7 மணி வெங்கட்ராமன் 1000
        8 வாரண்ட் பாலா 1000
        9 மணிவண்ணன் சண்முகம் 1000
        10 ராமதாஸ் வீரப்பா 500
        11 தினேஷ் கார்த்திக் 5000
        12 கே சி ரகுநாதன் 2000

        மொத்தம் – ரூ 13,500

        இணைய வளங்கள் நன்கொடைகள்

        • நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)
        • E2E Networks – சர்வர் ( ரூ 730/மாதம்)

        சென்ற மாத இருப்பு – ரூ 1,12,848

        செலவுகள்

        1. லெனின் குருசாமி – ரூ 1650 – கணியம் அறக்கட்டளை ரசீது புத்தகங்கள்

        மொத்த செலவுகள் – ரூ 1650

        மொத்தம் கையிருப்பு – ரூ 1,12,848 + ரூ 13,500 – ரூ 1650 = ரூ 1,24,698

        இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing

        வங்கிக் கணக்கு விவரங்கள்

        Kaniyam Foundation
        Account Number : 606 1010 100 502 79
        Union Bank Of India
        West Tambaram, Chennai
        IFSC - UBIN0560618
        
        • உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
        • நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.

        மேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com




        Original: http://freetamilebooks.com/kaniyam-foundation-february-2019-report/
        By: admin
        Posted: March 12, 2019, 6:40 am

        கணியம் அறக்கட்டளை பிப்ரவரி 2019 மாத அறிக்கை
      • இன்றைய நிறுவனங்கள் பலவற்றிலும், தொடக்க நிலையில் ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பெண்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். அதிலும் பெண் தலைவர்களைக் கொண்ட நிறுவனங்கள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். பள்ளிப்படிப்பை முடித்த பெண்கள் அனைவரும் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற பெண்கள் அனைவரும் வேலைக்குச் செல்வதில்லை. வேலையில் சேர்கிற பெண்கள் அனைவரும், திருமணத்திற்குப் பின்னும், மக்கட்பேறுக்குப் பின்னரும் பணியைத் தொடர்வதில்லை. இதனை ஒரு புனல் வடிவில் உருவகப்படுத்தலாம்.

        இதில் ஒரேயொரு ஆறுதல் என்னவென்றால், இந்தப் பிரச்சனை நமக்கு மட்டுமல்ல. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, Technology, Engineering, Maths – STEM) சார்ந்த துறைகளில், உலக அளவில் இதே நடப்பு தான் காணப்படுகிறது. STEM துறைகளில், பெருமளவில் பெண்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதில் உலக அரங்கில் பல நிறுவனங்கள் முனைப்புடன் செயல்படுகின்றன. நிரலாக்கத்துறையைப் பொருத்தமட்டில், Girls Who Code, Rails Girls, Elixir Girls போன்ற அமைப்புகள் அவற்றுள் சில. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பெண்களுக்கு மட்டுமான நிரலாக்கப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதோடு, மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும், பெண் சமூகத்தின் பிரதிநிதிகளாக, தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றனர். இந்தியாவிலும், குறிப்பாக சென்னையில்  Women in Tech, Women Who Code, PyLadies போன்ற சில குழுக்கள் இயங்கி வருகின்றன. மென்பொருளாக்கத்தில் ஈடுபாடுள்ள பெண்கள் அதில் கலந்துகொண்டு பயனடையலாம்.

        STEM துறைகளின் முன்மாதிரிகளாக முத்துலெட்சுமி ரெட்டியையும், ஜானகி அம்மாளையும், கடாம்பினி கங்குலியையும், படித்து வளர்ந்த நமக்கு, நிகழ்கால பங்களிப்பாளர்களை அடையாளம் காட்டவேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. அந்த வகையில், நமது கணியம் வலைத்தளத்திலும், FreeTamilEbooks.com தளத்திலும், பங்களித்து, தாங்கள் பெற்றதையும், பெற விரும்பியதையும் சமூகத்திற்கு திருப்பிக்கொடுத்திருக்கும் பெண்களை இங்கே முன்னிறுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

        சீ. இராஜேஸ்வரி, ஆஸ்திரேலியாவில் வாழும் கணிணி வல்லுனர். முன்னாள் கல்லூரி ஆசிரியர். FreeTamilEbooks.com வலைத்தளத்தில் மின்னூலாக்கத்தில் பங்களித்து வருகிறார். இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்னூல்களை உருவாக்கியுள்ளார்.

        அனிதா – கணியம் அறக்கட்டளையில், Youtube அல்லது நம்மிடம் உள்ள ஒலிக்கோப்பை ஒலியோடையாக எளிதில் வெளியிடும் மென்பொருள் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் விரைந்து பல ஒலியோடைகளை வெளியிடலாம். CommandLine ல் இயங்கும் இதை இணைய வழி மென்பொருளாக, மாற்றி வருகிறார். இவர் தற்போது Cognizant ல் பணிபுரிகிறார்.

        கமலினி புருஷோத்தமன் – வேலுரைச் சேர்ந்த இவர், அமீரகத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரகுமான் வாழ்க்கை வரலாற்று நூலை ஒலிப்புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

        திவ்யா, பவித்ரா, சோபியா – கடந்த 2016ம் ஆண்டிலிருந்து விக்கிமூலம் தளத்தில் தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றை மெய்ப்பு பார்ப்பதில் பங்களித்து வருகின்றனர்.

        து. நித்யா – நீங்கள் படிக்க விரும்புகிற புத்தகத்தை நீங்களே எழுதவேண்டும் என்றொரு கூற்று உண்டு. அதற்கேற்ப கணினி நுட்பங்களைத் தமிழில் படிக்க விரும்பியவர், எளிய தமிழில் எழுதித் தள்ளுகிறார். தற்சமயம் இயந்திர வழி கற்றல் பற்றிய தொடரை எழுதி வருகிறார். இதுபற்றிய காணொளிகளையும் வெளியிடுகிறார். தான் எழுதிய தமிழுக்கான சந்திப்பிழை திருத்திக்கான நிரலை மூலந்திறந்த உரிமத்தில் வெளியிட்டிருக்கிறார். கடந்த வருடத்திற்கான தகவல் தொழில்நுட்பத்துறையின் தனித்திறமையாளர் விருதினை, ஊருணி அறக்கட்டளை இவருக்கு வழங்கி சிறப்பித்தது.

        பிரியா – பிறருக்கு வேண்டுமானால் ரூபி என்றவுடன் மாணிக்கக்கல் நினைவுக்கு வரலாம். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் பிரியாவுக்கோ ரூபி என்ற நிரல்மொழிதான் நினைவுக்கு வரும். இந்த எளிய இனிய கணினி மொழியைப் பயில விரும்புவோருக்கு உதவும் வகையில் ஒரு மின்னூலினை எழுதியுள்ளார்.

        இல.கலாராணி – தாட்வொர்க்ஸ் நிறுவனத்தில் நிரலராகப் பணியாற்றுகிறார். மென்பொருளாக்கத்திலும், நிரலாக்கத்திலும் தானறிந்தவற்றை கட்டுரைகளாக எழுதி வருகிறார். ஆத்திசூடி என்ற செயலியையும், கதம்பம் என்ற சொல்விளையாட்டையும், ஆண்டிராய்டு செயலிகளாக வெளியிட்டிருக்கிறார்.

        நிர்மலா ராகவன்

        வி.ஆஷாபாரதி

        கார்த்திகா சுந்தர்ராஜ்

        கீதா சாம்பசிவம்

        மைதிலி சிவராமன்

        உஷா தீபன்

        கி.பிரேமாமோனி

        தேமொழி

        ர.திவ்யா ஹரிஹரன்

        பார்வதி இராமச்சந்திரன்

        சந்திரவதனா

        இரா. பாரதி

        காமாட்சி மஹாலிங்கம்

        ஜயலக்ஷ்மி

        பவள சங்கரி திருநாவுக்கரசு

        சுபாஷிணி

        தேவி ஜகா

        ரஞ்சனி நாராயணன்

        ஆகியோர், FreeTamilEbooks.com வலைத்தளத்தில், தங்கள் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வழங்கியுள்ளனர்.

        தமிழும், தொழில்நுட்பமும், நாமறிந்த விசயங்கள். தமிழின் தொடர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தையும், தொழில்நுட்பத்தைப் பரப்ப தமிழையும் பயன்படுத்திப் பயனடைவோம்!

        சென்ற நூற்றாண்டைவிடவும், சென்ற பத்தாண்டுகளை விடவும் இன்றைய நிலை முன்னேறியிருக்கிறது என்றாலும், இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரமும், அளக்க வேண்டிய ஆழமும் அதிகம். தொடர்ந்து, இணைந்து பயணிப்போம்!!

        இல.கலாராணி




        Original: http://freetamilebooks.com/women-contributors-to-kaniyam/
        By: admin
        Posted: March 8, 2019, 5:21 pm

        கணியத்தில் பெண்களின் பங்களிப்பு
      • நூல் : கலிங்கராணி

        ஆசிரியர் : அறிஞர் அண்ணா

        image
        அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்

        mrishansha@gmail.com

        மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
        மின்னஞ்சல் : sraji.me@gmail.com

        வெளியிடு : FreeTamilEbooks.com

        உரிமை : Public Domain – CC0

        உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

         

         

         

        பதிவிறக்க*

        ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

        Download “கலிங்கராணி epub” KalingaRani.epub – Downloaded 50 times –

        புது கிண்டில் கருவிகளில் படிக்க

        Download “கலிங்கராணி mobi” KalingaRani.mobi – Downloaded 6 times –

        குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

        Download “கலிங்கராணி A4 PDF” KalingaRani_A4.pdf – Downloaded 63 times –

        பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

        Download “கலிங்கராணி 6 inch PDF” KalingaRani_6_inch.pdf – Downloaded 12 times –

         

         

         

        Send To Kindle Directly

         

         

         

        பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/KalingaRani6Inch

        புத்தக எண் – 507




        Original: http://freetamilebooks.com/ebooks/kalingarani/
        By: admin
        Posted: March 7, 2019, 2:42 am

        கலிங்கராணி – நாவல் – அறிஞர் அண்ணா
      • நூல் : சேரன் செங்குட்டுவன்

        ஆசிரியர் : மு. இராகவ ஐயங்கார்

        image
        அட்டைப்படம் : லெனின் குருசாமி

        guruleninn@gmail.com

        மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
        மின்னஞ்சல் : sraji.me@gmail.com

        வெளியிடு : FreeTamilEbooks.com

        உரிமை : Public Domain – CC0

        உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

         

         

         

        பதிவிறக்க*

        ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

        Download “சேரன் செங்குட்டுவன் epub” CheranSenguttuvan.epub – Downloaded 101 times –

        புது கிண்டில் கருவிகளில் படிக்க

        Download “சேரன் செங்குட்டுவன் mobi” CheranSenguttuvan.mobi – Downloaded 43 times –

        குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

        Download “சேரன் செங்குட்டுவன் A4 PDF” CheranSenguttuvan_A4.pdf – Downloaded 155 times –

        பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

        Download “சேரன் செங்குட்டுவன் 6 inch PDF” CheranSenguttuvan_6_inch.pdf – Downloaded 46 times –

         

         

         

        Send To Kindle Directly

         

         

         

        பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/CheranSenguttuvan6Inch

        புத்தக எண் – 508




        Original: http://freetamilebooks.com/ebooks/cheran_senguttuvan/
        By: admin
        Posted: March 7, 2019, 2:55 am

        சேரன் செங்குட்டுவன் – வரலாறு – மு. இராகவ ஐயங்கார்
      • கணியம் அறக்கட்டளை

        அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப,  தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும்,  வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம்  அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை

        • Kaniyam.com  தளத்தில் கடந்த  7 ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
        • FreeTamilEbooks.com தளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட ஆர்வலர்கள் தொடர்ந்து மின்னூலாக்கத்தில் ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகின்றார்கள்.
        • ta.wikisource.org தளத்தில் விக்கிப்பீடியா குழுவினருடன் இணைந்து 2000 க்கும் மேற்பட்ட மின்னூல்கள் எழுத்துணரி (OCR) மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டு, மெய்ப்பு (Proof Reading) பார்க்கப்பட்டு வருகின்றன.

        இப்பணிகளுக்குத் தேவையான பல்வேறு மென்பொருட்கள் உருவாக்கப் பட்டு, கட்டற்ற மென்பொருட்களாக (Free Open Source Software) வெளியிடப்படுகின்றன.

        தன்னார்வலர்களே  இத்தகு முயற்சிகளுக்கு பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்து வருகின்றனர். இப்பணிகள் தமிழ் மொழி சார்ந்த இலக்குகளை அடைவதற்கு சிறந்த வெளியை ஏற்படுத்தி தந்துள்ளது. ஆர்வலர்கள் இணைந்து பணியாற்றவும் வழிவகுத்துள்ளதுடன், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.

         

        மாணவர் பதிப்பகம்

        சென்னையில் உள்ள மாணவர் பதிப்பகத்தார் 30 ஆண்டுகளாக, புழக்கத்தில் இல்லாத, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், தமிழின மேன்மைக்கு வித்திட்ட சான்றோர் நூல்களையும், தேடி எடுத்து, பொருள் வழிப் பிரித்து, சீராக அச்சிட்டு வருகின்றனர்.

        அவர்கள் வெளியிட்ட முக்கிய எழுத்தாளர்களின் முழுத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. பாவாணர், சாமி சிதம்பரனார், நா.மு.வே நாட்டார், மயிலை.சீனி.வெங்கடசாமி, வெள்ளை வாரணர், இளங்குமரனார், திரு.வி.க, இராசமாணிக்கனார், சாமிநாத சர்மா, ஔவை துரைசாமி, முடியரசன், ந.சி. கந்தையா, மறைமலையடிகள், வ.சுப. மாணிக்கனார், அப்பாத்துரையார் ஆகியோரின் எல்லாப் படைப்புகளும்  வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

        மேலும் பல்வேறு பழந்தமிழ் அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கருணாமிர்த சாகரம் போன்ற இசை நூல்கள், பண்டைய தமிழ் இலக்கிய நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

         

        நூல் பட்டியல்

        1. பாவேந்தர் பாரதிதாசன் – 167 நூல்கள்
        2. கா. அப்பாத்துரையார் – 98 நூல்கள்
        3. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் – 80 நூல்கள்
        4. சாமிநாத சர்மா நூல்திரட்டு – 76 நூல்கள்
        5. ந.சி.க. நூல் திரட்டு – 65 நூல்கள்
        6. திரு.வி.க. தமிழ்க்கொடை – 54 நூல்கள்
        7. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் – 53 நூல்கள்
        8. மறைமலை அடிகள் – 52 நூல்கள்
        9. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் – 37 நூல்கள்
        10. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் – 39 நூல்கள்
        11. மாணிக்க விழுமியங்கள் – 34 நூல்கள்
        12. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் – 32 நூல்கள்
        13. ஔவை துரைசாமி உரைவேந்தர் தமிழ்த்தொகை – 32 நூல்கள்
        14. புலவர் குழந்தை படைப்புகள் – 28 நூல்கள்
        15. சங்க இலக்கியக் களஞ்சியம் – 22 நூல்கள்
        16. கவியரசர் முடியரசன் படைப்புகள் – 22 நூல்கள்
        17. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை – 21 நூல்கள்
        18. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் – 20 நூல்கள்
        19. தொல்காப்பிய உரைத்தொகை – 19
        20. பதினெண் கீழ்க்கணக்கு – 18 நூல்கள்
        21. தமிழ் இலக்கணப் பேரகராதி (கோபாலையர்) – 18 நூல்கள்
        22. இராகவன் நூற்களஞ்சியம் – 16 நூல்கள்
        23. சதாசிவப் பண்டாரத்தார் – 16 நூல்கள்
        24. தொல்காப்பியம் (உரைகளுடன்) – 15 நூல்கள்
        25. செவ்விலக்கிய கருவூலங்கள் -15 நூல்கள்
        26. தேவநேயப் பாவாணர் – 13 நூல்கள்
        27. தமிழக வரலாற்று வரிசை – 12 நூல்கள்
        28. நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் – 10 நூல்கள்
        29. செம்மொழிச் செம்மல்கள் – 10 நூல்கள்
        30. பி. இராமநாதன் – 10 நூல்கள்
        31. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் – 10 நூல்கள்
        32. கருணாமிர்த சாகரம் -7 நூல்கள்
        33. ஐம்பெருங் காப்பியங்கள் – 5 நூல்கள்
        34. முதுமொழிக் களஞ்சியம் – 5 நூல்கள்
        35. சுப்புரெட்டியார் – 3 நூல்கள்
        36. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதி – 3 நூல்கள்
        37. உவமைவழி அறநெறி விளக்கம் – 3 நூல்கள்
        38. யாழ்ப்பாண அகராதி -2 நூல்கள்
        39. ந.சி. கந்தையா அகராதிகள் – 2 நூல்கள்
        40. நீதி நூல்கள் – 2 நூல்கள்
        41. குறுந்தொகை விளக்கம் (இராகவன் ஐயங்கார்) – 1 நூல்

        மொத்த பக்கங்கள் – 2 இலட்சத்துக்கு மேல்

        மொத்த நூல்கள் – 1,165

         

        நாட்டுடைமை நூல்களை மின்னூல்களாக வெளியிடுதல்

        தமிழ் இணையக் கல்விக் கழகம் நாட்டுடைமை நூல்களை PDF கோப்புகளாக வெளியிட்டுள்ளது. அவற்றை விக்கி மூலம் பங்களிப்பாளர்கள், OCR கருவி மூலம் எழுத்துகளாக மாற்றி, அதில் ஏற்பட்ட பிழைகளைக் களைந்து வருகின்றனர்.

        கடும் மனித உழைப்பையும் நேரத்தையும் கோரும் பணி இது. இப்போதுள்ள சுமார் 2000 மின்னூல்களைப் பிழைத்திருத்தம் செய்து உரை வடிவில் வெளியிட சில பத்தாண்டுகள் ஆகலாம்.

        இந்நிலையில், நாட்டுடைமை நூல்களை அச்சு நூல்களாக வெளியிடும் மாணவர் பதிப்பகம், அவற்றை உரை வடிவிலும் வைத்திருக்கக் கூடும் என்றெண்ணி, அவர்களிடம் இது பற்றி உரையாடினோம். அவர்களது பதிப்புகள் அனைத்தும் ஒருங்குறி எழுத்துருவில் வேர்ட் ஆவணங்களாகவே இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ந்தோம்.

        விக்கிமூலத்தில் proof read பணிகள் பற்றியும், கணியம் அறக்கட்டளை, FreeTamilEbooks.com வெளியீடுகள் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தோம். கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் அனைவருக்கும் இலவசமாகவே மின்னூல்களை தருவது அறிந்து மகிழ்ந்து வாழ்த்தினர்.

        தம்மிடம் உள்ள 1000க்கும் மேற்பட்ட மின் நூல்களின் [2 இலட்சத்துக்கு மேல் பக்கங்கள்] ஒருங்குறியில் உள்ள வேர்டு ஆவணங்களை, கணியம் அறக்கட்டளை இலவசமாக வெளியிடுவதற்கு தருவதாக உறுதி கூறினர். அவையாவும் இலவச மின்னூலாக வெளிவரும்போது தமிழின் அரும்பெரும் படைப்புகள் அனைவரது கைகளிலும் தவழும் இனிய நிலை உருவாகும்.

        மாணவர் பதிப்பகத்தாரின் பெரும்பணிகளுக்கும், 1000 க்கும் மேற்பட்ட நூல்களை pdf ஆக அல்லாமல் ஒருங்குறி வடிவில் தருவதற்கும், அதற்கான தட்டச்சு செலவின் ஒரு பகுதியையாவது தருவதாக உறுதி கூறினோம்.

        இதற்கான நன்கொடையாக ரூபாய் 5 லட்சம் அளிப்பதாக இசைந்தோம். நாம் ஒரு பக்கத்திற்கு எவ்வளவு நன்கொடையாக செய்கிறோம் என்று எண்ணினால், அது ஒரு மிகச் சிறிய தொகை [2.5 ரூபாய் /பக்கம்].

        கணியம் அறக்கட்டளையின் பணிகள் யாவும் தன்னார்வலர்களாலும், வாசகர்களின் நன்கொடைகளாலும் மட்டுமே நடப்பதை விவரித்து, இரண்டு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம்.

        அவர்களிடமிருந்து நூல்களைப் பெற்ற பின், அவற்றுக்கு அட்டைப்படம் சேர்த்து, விக்கிப்பீடியாவின் துணைத்திட்டமான விக்கிமூலம் தளத்திலும் (https://ta.wikisource.org), கூடவே கிண்டில், கைபேசி, கணினி என அனைத்து மின்னணுக் கருவிகளிலும் படிக்கும் வகையில், epub, mobi, A4 PDF, 6 inch PDF ஆகிய வடிவங்களில் FreeTamilEbooks.com இலும், வெளியிடுவோம்.

        நன்கொடை வேண்டுகோள்

        இரண்டு மாதங்களில் ரூபாய் 5 லட்சம் நன்கொடை பெறுதல் என்பது பெரும் பணி தான். ஆயினும் கணியம் அறக்கட்டளையின் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இச்செய்தியை கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறோம். பல நூறு பேரின் நன்கொடைகளும் இந்த இலக்கை எட்ட பேருதவி புரியும்.

        தமிழின் மீதும், தமிழ் நூல்கள், மின்னூல்கள் மீதும் ஆர்வம் கொண்ட உங்கள் அனைவரையும் மார்ச்சு 30, 2019 அன்றுக்குள், நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.

        வெளிப்படைத்தன்மை

        வங்கி விவரங்கள்

        Kaniyam Foundation

        Account Number : 606 1010 100 502 79

        Union Bank Of India

        West Tambaram, Chennai

        IFSC – UBIN0560618

         

        நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

         

        தொடர்புக்கு

         

        த. சீனிவாசன் – 9841795468

        அன்வர் – 8124782351 (வாட்சப் எண்)

        kaniyamfoundation@gmail.com

         




        Original: http://freetamilebooks.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/
        By: admin
        Posted: February 19, 2019, 4:37 pm

        1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்